மரணத்தின் நிகழ்வு – கவிதை

யாராலும் தடுக்கமுடியாத
இந்நிகழ்வின் மரணம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
இக்கணத்தை
கால ஓட்டத்தில்
மனப்பிரதியில்
அச்செடுத்து வைக்கிறேன்
ஓர் தலைசிறந்த பார்வையாளனாக
வெற்றுக் கடமையுணர்வுடனல்லாமல்
உள்ளார்ந்த ஐக்கியத்துடன்
இந்நிகழ்வு
நிகழ்ந்துகொண்டிருக்கும்
இந்நேரம்
மிக இரம்மியமானது, இனிமையானது
நீங்கள் அறிவீர்களா?
மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும்
கிழவியைச் சுற்றிப் பெருங்கூட்டம்
அவள் வைத்த வாதா மரத்திலிருந்து
வாதாங்கொட்டை கீழே விழும் ஒலி
சொத்.

Share

Facebook comments:


One comment

 1. சுப்ரமணியசாமி says:

  //யாராலும் தடுக்கமுடியாத
  இந்நிகழ்வின் மரணம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது//

  //மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும்
  கிழவியைச் சுற்றிப் பெருங்கூட்டம்
  அவள் வைத்த வாதா மரத்திலிருந்து
  வாதாங்கொட்டை கீழே விழும் ஒலி
  சொத்.//

  கிழவியின் உயிரை வாதா மரத்திலிருந்து கீழ் விழும் கொட்டையுடன் ஒப்பீடு.. நல்ல கற்பனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*