சாலை – கவிதை

தவிர்க்கவியலாத
கரும்பாம்பின் வசீகரத்தோடு
விரிகின்றன
சாலையோரங்கள்

செல்லும் வழியெங்கும்
முலை தரையழுந்த
ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்
நீலி

பகுதி நிழல் படர்ந்து
ஒதுங்கியிருக்கும்
காரின்
கணத்தோற்றம்
ஓவியம்

நிழல் கருமை
இருள் கருமை
கருமையுள்
மூழ்கி
வெளி திளைக்கிறது
அதிகாலை
மனமெங்கும் விரவிக்கிடக்கும்
அழுத்தங்களை
துடைத்தெடுக்கிறது
பால் நீல வானம்
வானம் கடல்
அலையும் அமைதியுமாக
அலைந்தும் பரந்தும்
கிடக்கிறது கடல்
அமைதி
பேரமைதி

வாய் பிளந்து நிற்கும்
சாலையோர நீலியின்
வாய்க்குள் புகுந்து
வெளி வருகிறது
என் சுஸுகி

-oOo-oOo-

Share

Facebook comments:


One comment

 1. சுப்ரமணியசாமி says:

  //வாய் பிளந்து நிற்கும்
  சாலையோர நீலியின்
  வாய்க்குள் புகுந்து
  வெளி வருகிறது
  என் சுஸுகி//

  சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்களை நீலியாகவும் சாலையை நீலியின் வாயாகவும் அதணுள்ளே புகுந்து வருவது போலவும் கற்பனை செய்திருக்கிறீர்கள் இல்லையா ஹரன்???

  காலை நேர உலகத்தை கற்பனை செய்திருக்கிறீர்கள் நல்ல விதமாய்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*