சின்னஞ் சிறு கவிதை

அரவமற்ற
மண்டபத்தின் நிசப்தத்துள்
விரவிக் கிடக்கிறது
சிலைகளின் கேவல்

வௌவால்கள்
தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு
கண்டடையமுடியாத
மௌனத்தைத் தேடிய வண்ணம்

காற்றடிக்கும்போதெல்லாம்
சிறிய அலையை ஏற்படுத்தும்
தேங்கிய குளத்தின் பச்சை நீர்
இறுக்கத்துடன்

சன்னிதியில்
எரிந்துகொண்டிருக்கும்
அகல்விளக்கு

அனைத்தையும் கலைத்துப் போடுகிறது
சிறு கை எறியும் பொரி

Share

Facebook comments:


One comment

  1. சுப்ரமணியசாமி says:

    //அனைத்தையும் கலைத்துப் போடுகிறது
    சிறு கை எறியும் பொரி//

    நல்ல கற்பனை. பழங்கால கோவில்களின் நிலையை உணர்த்துவதாக நான் கொண்டேன் ஹரன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*