அந்த நிமிடம் – கவிதை

அந்த நிமிடத்திற்கான
காத்திருப்பு
அவஸ்தை நிரம்பியது
எதிர்பார்ப்பு நிறைந்தது
படபடப்பைக் கொண்டது
சந்தோஷம் தருவது
துக்கம் தருவது
ஏதோவொன்றாக
அல்லது எல்லாமுமாக
நீண்ட காத்திருப்பு அது
வருடங்கள், மாதங்கள்
நாள்கள் எனக் கழிந்து
நிமிடங்கள் எனக் குறைந்து
நொடிகளாகி
ஒரு சொல் தொடங்கும்போதே
முடிந்துவிடுவதுபோல
கடந்து போனது
அந்நிமிடம்.
இனி அந்நிமிடத்தைப் பற்றிச்
சொல்ல ஒன்றுமில்லை.

Share

Facebook comments:


3 comments

  1. Anonymous says:

    test comment for thamizmanam

  2. பொன்ஸ்~~Poorna says:

    எல்லா நிமிடத்துக்கும் பொருத்தமான கவிதை தான் என்றாலும், எந்த நிமிடங்கோ? .. அப்போ என்ன நடந்துதுன்னு சொல்லவே இல்லையே..

  3. கார்த்திக் பிரபு says:

    hi pa indha kavidhai really sooperb..ean indha mmadham onnurumey eludha villa..appdiye numma blog pakkam vandhu paarunga ..time irundha..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*