முகம் – கவிதை

எப்போதோ அணிவித்தார்கள்
எனக்கான ஜென்டில் மேன் பட்டத்தை.
இளகிய ரப்பராலான பட்டம்
மெல்ல
கனத்துக் கனத்து
முகத்திற்கு மாட்டப்பட்ட
இரும்புறையாய் மாற
என் அலறல்
முகச்சிரிப்பில் சிறிதும் அலங்காத
நரம்புகளில் மோதி
என் காதுக்குள்ளேயே எதிரொலிக்கிறது
எப்படியேனும் போராடி
என்றேனும் வென்று
சுயம் மீட்கும்போது
அரண்டு
ஓடி
குலைக்காமலிருக்கவேண்டும்
வீட்டு நாய்.

Share

Facebook comments:


9 comments

 1. Mookku Sundar says:

  அருமை….

 2. தேவ் | Dev says:

  ஆஹா…!!!

 3. Chandravathanaa says:

  அருமை

 4. செல்வநாயகி says:

  நல்ல கவிதை பிரசன்னா

 5. Anonymous says:

  aiyya
  thaangaL RajamarthanDanin “mugamoodi” (thalaippu maranthu vittathu) kavithai padithirukireergaLaa ? ungaLin kavithai antha kavithaiyin sayalaippOla irukirathu.

 6. Anonymous says:

  ungaLathu Rajamarthandanin kavithaiyin prathiyaga padugirathu

 7. ஹரன்பிரசன்னா says:

  Anony, I have not read Rajamarthandan’s kavithai. Its common to find similarities between some poems. Thanks for your comments.

 8. ஹரன்பிரசன்னா says:

  //ungaLathu Rajamarthandanin kavithaiyin prathiyaga padugirathu //

  Anony, If you want to say that I have copied Rajamarthandan’s kavithai, say it openly. I cannot explain or proove that I have not copied his poem. Its upto you to believe me or discard my poem. I will try to read Rajamarthandan’s poem. If you have a chance to copy and paste his poem here, pl do. I will read and let you know.

 9. கானகம் says:

  //என்றேனும் வென்று
  சுயம் மீட்கும்போது…..//

  நல்ல வரிகள். சுயம் மீட்பதற்கான போராட்டம் நிற்பதேயில்லை. ஆனால் சுயம் மீட்டவர்களை சமூகம் மதிப்பதில்லை. மாறாக அவமதிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*