முறிந்து விழுந்த கிளை – கவிதை

முறிந்து விழுந்துவிட்ட
அந்தக் கிளையைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை
எல்லாக் கிளைகளுக்கும் போலவே
சில பொதுக்குணங்கள்
பருத்தி மொட்டு பூத்திருந்த காலத்தில்
பறவைகள் பிரசித்தம்
நீளமான காபி நிறக்காய்கள் தொங்கியபோது கல்லெறி
இரண்டாம் தளத்தில்
12 பி வகுப்பு வராந்தாவிலிருந்து
நீளும் கைகள்
கர்வத்தில் மிதந்த கிளை
எதிர்பாராத நிமிடத்தில் முறிந்து விழுந்தது
மரத்தைப் பார்த்தபடி
விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பிய கைகள்
கிளையிழந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றன
மரம் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது
காற்றில் கலந்திருந்தது
முறிந்த கிளையின் ஏக்கமூச்சு.

Share

Facebook comments:


2 comments

 1. raajaachandrasekar says:

  nice approach.
  pls read my poems here.
  http://www.raajaachandrasekar.blogspot.com
  regards
  raajaachandrasekar

 2. நண்பன் says:

  வெட்டி வீழ்த்தப்பட்ட மரமோ, கிளையோ வெளிக் கொணரும் புதிய வெளிச்சம் பாய்ந்த வெளிகள் ஒரு திடுக்குதலை தரும் அனுபவத்தை விட, மரமோ, கிளையோ இருந்த பொழுது தந்த பாதுகாப்பை இழக்கும் வருத்தமே மேலோங்கி நிற்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் வெட்டி வீழ்த்தப்பட்ட கிளையின் ஏக்கப் பெருமூச்சை இப்பொழுதும் உணர இயல்கிறது.

  நன்றி ஹரண்பிரசன்னா..

  அன்புடன்
  நண்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*