மொழி, பருத்திவீரன், பச்சைக்கிளி முத்துச்சரம், குரு மற்றும் சாரு

என்ன நேர்ந்துவிட்டது சாரு நிவேதிதாவிற்கு என்பது புரியவில்லை. யானை இளைக்காமல் இருந்தால்தான் அழகு என்பார்கள். திட்டாத சாருவைப் பார்த்தால் இளைத்த யானை போன்று தோன்றுகிறது. தமிழில் கடுமையான விமர்சனத்திற்குப் பெயர்போனவர்களில் ஒருவர் சாரு. ஆனால் அவர் எழுதிய திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மிகச் சாதாரணமான நிலையில் எழுதப்படுவதைப் போலத் தோற்றம் பெறுகின்றன. அவரது எழுத்துவன்மையால் பக்கங்களையும் அவர் தரப்பு வாதங்களையும் அவர் கூட்டிக் கூட்டிச் சேர்க்கிறாரோ என்கிற சந்தேகம் எழத் தொடங்குகிறது. புதுப்பேட்டை படம் பற்றிய அவரது பார்வை எனக்கு ஒத்துப்போவதாக இருந்தது. ஆனால் அதையும் பலர் குறை கூறினர்.இப்போது சாரு எழுதியிருக்கும் ‘மொழி,’ ‘பருத்திவீரன்,’ ‘குரு,’ ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களின் மீதான விமர்சனங்கள் வெறும் ‘உயர்ந்தேத்தி’ எழுதும் அறிமுக எழுத்தாளரின் எழுத்தைப் போல அமைந்துள்ளன. அதிலும் மொழி படத்திற்கும் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற பைசா பெறாத படத்திற்கும் (கௌதம் படத்தில் ஏப்பை சாப்பை காட்சிகள் இல்லை என்கிறார் சாரு; கண்ணையும் மூடிக்கொண்டு காதையும் பொத்திக்கொண்டு படம் பார்த்தால் கூட கௌதம் படங்களில் எத்தனை காட்சிகள் ஏப்பை சாப்பையானவை என்பது புரியும்!) சாரு எழுதிய விமர்சனம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மொழி ஒரு சாதாரண சினிமா. தமிழ் சினிமாவிற்கு இது போன்ற படங்களே தேவை என்று எழுதினார் ஞாநி. இதுபோன்ற தமிழ்ப்படங்கள் பத்தோடு பதினொன்றாகவே அமையும். நாம், அழகிய தீயே போல. இந்த இரு படங்களைப் போலவே மொழியிலும் வளவள என்று வசனம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜின் நகைச்சுவை நடிப்பு மிகவும் அந்நியப்பட்டு நிற்கிறது. அவ்வப்போது வரும் நகைச்சுவை வசனத்தில் பிழைத்துக்கொள்கிறது மொழி திரைப்படம். வாய் பேசமுடியாத, காது கேட்காத ஜோதிகா (நன்றாக நடித்துள்ளார்) திடீரெனப் பேசுவதுபோல் கதாநாயகன் நினைத்துக்கொள்ள, அதற்கு ஒரு உருவம் கொடுக்க, அதை ஜோதிகா எதிர்க்க என ஒன்றோடும் ஒட்டாத, அறிவோடு கூடிய முட்டாள்தனமான காட்சிகள் ஏராளம். ஜோதிகாவிற்கு இசை மூலம் காதலைப் புரிய வைக்கும் காட்சி இன்னொரு பூச்சுற்றல். ஏன் ஜோதிகா கதாநாயகனை வெறுக்கிறார் என்பதே தெளிவாக்கப்படவில்லை. அப்பா மீது கோபம் என்பதே காரணம் என்பதெல்லாம் தமிழ்ப்படத்தில் மட்டுமே சாத்தியம். பிரம்மானந்தத்தின் கதாபாத்திரம், பாஸ்கரின் கதாபாத்திரம் போன்றவை வெகுஜன ரசனையின் மீது எழுப்பப்பட்டவை. இப்படி பல ஓட்டைகள். சாருவையும் ஞாநியையும் இதை நல்ல படம் என்று சொல்லவேண்டிய கட்டயாத்திற்குத் தள்ளியிருக்கிறது தமிழுலகத்தின் மற்றத் திரைப்படங்கள்.

மொழியையாவது ‘நல்ல சினிமா’ என்ற கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் பச்சைக்கிளி முத்துச்சரம் எவ்வகையிலும் சேர்த்தியில்லை. கௌதமின் இன்னோரு சொதப்பல். ஏன் ஜோதிகாவை வில்லியாகப் போடவேண்டும் என்பதே தெரியவில்லை. உண்மையில், இந்தப் படத்திற்கு முன்புவரை, ஜோதிகாவிற்குத் தமிழ் சினிமா ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இமேஜே இப்படத்தில் ‘வித்தியாசம்’ என்ற ஒன்று இருப்பதாகச் சொல்லவைக்கிறது. மற்ற வகைக்கு, ஜோதிகா சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். எந்த வகையிலும் பாத்திரத்தன்மையில் ஆழமில்லாத படைப்பில் எப்படி ஜோதிகா நடிக்க ஒத்துகொண்டார் எனத் தெரியவில்லை என்று ஜோதிகாவிற்காகத்தான் வருத்தப்படவேண்டியிருக்கிறது. இந்தக் குறையை நீக்கியிருக்கிறார்கள் சரத்குமாரும் கதாநாயகியும். இருவரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு படத்தைக் கொஞ்சமேனும் பார்க்கவைக்கிறது. கௌதமின் திறமையைப் பார்த்து வியக்கும் சாரு, உச்சக்கட்ட காட்சிகளைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை. வழக்கம்போல் சரத்குமார் பெரிய கூட்டத்தையே வீழ்த்திவிட்டு, திடீரென ஆவேசமாகப் மாற்றி வீணடிக்கப்பட்டிருக்கும் ஜோதிகாவைக் கொல்கிறார். ஜோதிகா கேட்கும் வசனம் (என் கணவனைத் தரமுடியுமா என்பது போன்றது) மிகச்சிறப்பானது என்று சொல்லும் சாரு, இப்போதுதான் தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சிவாஜி கணேசன் தொடங்கி ஆளாளுக்கு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள், ‘ என் புள்ள¨யைத் தரமுடியுமா?,’ ‘என் பொண்டாட்டியைத் தரமுடியுமா?’ என. பார்த்திபன் சொன்னாராம், ஆங்கிலப் படத்தில் தமிழ் வசனங்கள் எப்படி என்று. பார்த்திபன் சொல்வதையெல்லாம் கோட் செய்தால் சாரு என்கிற பிம்பம் என்னாவது? சாரு, எனக்குத் தலை சுற்றுகிறது. மீண்டும் சொல்கிறேன், யானை இளைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

பருத்திவீரனுக்கு சாரு அளித்திருக்கும் பாராட்டுப் பத்திரம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது. ஆனாலும், கிழவிகளை உட்கார வைத்து ப்ரியாமணி பாடும் காட்சி, எந்த வகையிலும் படத்துடன் ஒட்டாமல் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றியது. அதையும் பாராட்டியிருக்கிறார் சாரு. பாராட்டென்றால் எப்படி? இதற்காகவே பலமுறை படம் பார்க்கலாம் என்கிற ரேஞ்சில்! அப்படி ஒன்றுமே அந்தக் காட்சியில் இல்லை என்பதே என் முடிவு. அதேபோல், படத்தின் முடிவு என்பது எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாக அமைந்துவிட்டது. கதாநாயகி வன்புணர்ச்சி செய்யப்பட்டதைப் பற்றிச் சொல்லவில்லை. அதைச் செய்தவர்கள் யார் என்கிற யோசனையில் அமீர் கொஞ்சம் கீழே விழுந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். எந்த வகையிலும் கதைக்குச் சொந்தமில்லாதவர்கள் திடீரென வன்புணர்வில் ஈடுபடும்போது, ‘தப்புச் செஞ்சான் தண்டனை கிடைச்சது’ என்கிற நீதியின் ஒரு பகுதியாக இப்படத்தை அணுகிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுவரையில் அமீர் மிகவும் கஷ்பட்டுக் காப்பாற்றி வந்த யதார்த்தம் தொலைந்து, நீதி தலைதூக்கி ‘நிற்க வைக்கப்படுகிறது.’ அதிலும் பருத்திவீரனின் நண்பர்கள் என்று காண்பிப்பது எதனாலோ? பருத்திவீரனின் ஜாதியை வைத்து ‘கருத்தேற்றிய’ காட்சியா அல்லது தவறு செய்பவர்களுக்கும் கிடைக்கும் நீதிக்காகவா? தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய பலம். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் பத்து நிமிடப் பாடல் படமாகப்பட்ட விதமும், இப்படிக் காண்பித்தாலும் படம் வெல்லும் என்கிற அமீரின் துணிச்சலும் – நிச்சயம் தமிழ் திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் இத்திரைப்படம். பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பது போல, சரவணன், ப்ரியாமணி, கார்த்திக் போன்ற அனைத்து நடிகர்களையும் மிஞ்சுகிறார் ப்ரியாமணியின் தாயாக வரும் நடிகை. என்னவொரு யதார்த்தம்! அசல் நடிப்பு என்பது இதுதான்.

மொழியையாவது ‘நல்ல சினிமா’ என்ற கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் பச்சைக்கிளி முத்துச்சரம் எவ்வகையிலும் சேர்த்தியில்லை. கௌதமின் இன்னோரு சொதப்பல். ஏன் ஜோதிகாவை வில்லியாகப் போடவேண்டும் என்பதே தெரியவில்லை. உண்மையில், இந்தப் படத்திற்கு முன்புவரை, ஜோதிகாவிற்குத் தமிழ் சினிமா ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இமேஜே இப்படத்தில் ‘வித்தியாசம்’ என்ற ஒன்று இருப்பதாகச் சொல்லவைக்கிறது. மற்ற வகைக்கு, ஜோதிகா சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். எந்த வகையிலும் பாத்திரத்தன்மையில் ஆழமில்லாத படைப்பில் எப்படி ஜோதிகா நடிக்க ஒத்துகொண்டார் எனத் தெரியவில்லை என்று ஜோதிகாவிற்காகத்தான் வருத்தப்படவேண்டியிருக்கிறது. இந்தக் குறையை நீக்கியிருக்கிறார்கள் சரத்குமாரும் கதாநாயகியும். இருவரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு படத்தைக் கொஞ்சமேனும் பார்க்கவைக்கிறது. கௌதமின் திறமையைப் பார்த்து வியக்கும் சாரு, உச்சக்கட்ட காட்சிகளைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை. வழக்கம்போல் சரத்குமார் பெரிய கூட்டத்தையே வீழ்த்திவிட்டு, திடீரென ஆவேசமாகப் மாற்றி வீணடிக்கப்பட்டிருக்கும் ஜோதிகாவைக் கொல்கிறார். ஜோதிகா கேட்கும் வசனம் (என் கணவனைத் தரமுடியுமா என்பது போன்றது) மிகச்சிறப்பானது என்று சொல்லும் சாரு, இப்போதுதான் தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சிவாஜி கணேசன் தொடங்கி ஆளாளுக்கு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள், ‘ என் புள்ள¨யைத் தரமுடியுமா?,’ ‘என் பொண்டாட்டியைத் தரமுடியுமா?’ என. பார்த்திபன் சொன்னாராம், ஆங்கிலப் படத்தில் தமிழ் வசனங்கள் எப்படி என்று. பார்த்திபன் சொல்வதையெல்லாம் கோட் செய்தால் சாரு என்கிற பிம்பம் என்னாவது? சாரு, எனக்குத் தலை சுற்றுகிறது. மீண்டும் சொல்கிறேன், யானை இளைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.பருத்திவீரனுக்கு சாரு அளித்திருக்கும் பாராட்டுப் பத்திரம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது. ஆனாலும், கிழவிகளை உட்கார வைத்து ப்ரியாமணி பாடும் காட்சி, எந்த வகையிலும் படத்துடன் ஒட்டாமல் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றியது. அதையும் பாராட்டியிருக்கிறார் சாரு. பாராட்டென்றால் எப்படி? இதற்காகவே பலமுறை படம் பார்க்கலாம் என்கிற ரேஞ்சில்! அப்படி ஒன்றுமே அந்தக் காட்சியில் இல்லை என்பதே என் முடிவு. அதேபோல், படத்தின் முடிவு என்பது எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாக அமைந்துவிட்டது. கதாநாயகி வன்புணர்ச்சி செய்யப்பட்டதைப் பற்றிச் சொல்லவில்லை. அதைச் செய்தவர்கள் யார் என்கிற யோசனையில் அமீர் கொஞ்சம் கீழே விழுந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். எந்த வகையிலும் கதைக்குச் சொந்தமில்லாதவர்கள் திடீரென வன்புணர்வில் ஈடுபடும்போது, ‘தப்புச் செஞ்சான் தண்டனை கிடைச்சது’ என்கிற நீதியின் ஒரு பகுதியாக இப்படத்தை அணுகிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுவரையில் அமீர் மிகவும் கஷ்பட்டுக் காப்பாற்றி வந்த யதார்த்தம் தொலைந்து, நீதி தலைதூக்கி ‘நிற்க வைக்கப்படுகிறது.’ அதிலும் பருத்திவீரனின் நண்பர்கள் என்று காண்பிப்பது எதனாலோ? பருத்திவீரனின் ஜாதியை வைத்து ‘கருத்தேற்றிய’ காட்சியா அல்லது தவறு செய்பவர்களுக்கும் கிடைக்கும் நீதிக்காகவா? தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய பலம். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் பத்து நிமிடப் பாடல் படமாகப்பட்ட விதமும், இப்படிக் காண்பித்தாலும் படம் வெல்லும் என்கிற அமீரின் துணிச்சலும் – நிச்சயம் தமிழ் திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் இத்திரைப்படம். பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பது போல, சரவணன், ப்ரியாமணி, கார்த்திக் போன்ற அனைத்து நடிகர்களையும் மிஞ்சுகிறார் ப்ரியாமணியின் தாயாக வரும் நடிகை. என்னவொரு யதார்த்தம்! அசல் நடிப்பு என்பது இதுதான்.

குரு படத்தை நான் பார்க்கவில்லை. எனவே சாருவின் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்’ என்கிற வரி (அம்ருதா, பிப்ரவரி 2007) குறித்து எந்தவொரு முன்முடிபான தீர்மானமும் எடுக்க விரும்பவில்லை.

சாருவுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், இலக்கியம், கவிதை என்றெல்லாம் சில காட்சிகளைச் சொல்லும்போது, அளவுக்கு அதிகமாக சில காட்சிகளைப் புகழ்கிறீர்களோ என்று தோன்றுகிறது. இரண்டாவது இன்னொன்று உண்டு. அசோகமித்திரன் சிறந்த சில நூல்களைப் பற்றிச் சொல்லியிள்ளார். அதேபோல் ஒன்றுக்கும் பெறாத சில நூல்களுக்கு அளிக்கும் முன்னுரையில் அந்நூலைப் பற்றி மிகமிஞ்சிப் புகழ்ந்திருக்கிறார். இப்படி நேரும்போது, அசோகமித்திரன் புகழ்ந்திருக்கும், அவரது புகழ்ச்சிக்கு ஏற்புடைய புத்தகத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் சந்தேகம் வந்து சேர்கிறது. இந்த நிலை சாருவுக்கு வந்துவிடாமல் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பு: பச்சைக்கிளி முத்துச்சரம், மொழி, பருத்திவீரன் படங்கள் பற்றி சாரு தன் கருத்துகளை ‘உயிர்மை, ஏப்ரல் 2007’ இதழில் எழுதியிருக்கிறார்.

Share

Facebook comments:


4 comments

 1. Anonymous says:

  Saaruvai patriya enadhu ennaghalai appadiyea padhivu seidhirukkireerghal.. Avar ippodhellam Saibabavukku vaal pidikka thodanghivittar.. Kalakakkaaran muththiraiyai ilandhukondirukkiraar.. vayasaanadhaal yearpatta bayamaai irukkumo???

  Good. Keep it up..JK-Doha – Qatar

 2. சுப்ரமணியசாமி says:

  //யானை இளைக்காமல் இருந்தால்தான் அழகு என்பார்கள்//

  ஆமாம்.

  //’மொழி,’ ‘பருத்திவீரன்,’ ‘குரு,’ ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களின் மீதான விமர்சனங்கள் வெறும் ‘உயர்ந்தேத்தி’ எழுதும் அறிமுக எழுத்தாளரின் எழுத்தைப் போல அமைந்துள்ளன//

  இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் மொழி, பருத்திவீரன், குரு போன்றவற்றின் சாருநிவேதிதாவின் விமர்சனங்கள் சரியென்றே எனக்குப் எனப்படுகிறது. ஆனால் பச்சைக்கிளி..சரம் பற்றிய அவரது கருத்துதான் சற்று அதிகம். உங்கள் விமர்சனம் உங்களாஹு தரத்திற்கு குறைந்தவையாக இருப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றக்கூடும். நீங்கள் இந்திய சினிமாக்களில் சிறந்தவைகளை ( சாருலதா போன்ற) தேடிப்பிடித்து பார்க்கும் மனநிலை கொண்டவராய் இருப்பதால் இது போன்ற படங்கள் குப்பை என்றே படும் உங்களுக்கு.

  மற்றபடி தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவராய் நினைத்துக்கொண்டிருக்கும் சாருவை மிகச் சரியாக விமர்சித்திருக்கிறீர்கள்.

 3. ஹரன்பிரசன்னா says:

  சுப்ரமணிய சுவாமி, நான் குப்பைப் படங்களையும் பார்க்கத்தான் செய்கிறேன். 🙂 அந்த வகையில் பச்சைக்கிளி முத்துச்சரம் மிக சுமாரான படமே. சாரு அதன் காட்சி ஆக்கங்களில் மயங்கிவிட்டார் என்றே நினைக்கிறேன். நேற்று வண்டியில் வந்துகொண்டிருந்தபோது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் சிறந்த பாடல் ஒன்றைக் கேட்டேன். உனக்குள் நானே… பாடல். அப்போது தோன்றியது, பச்சைக்கிளி முத்துச்சரம் வெகு சீக்கிரத்தில் படத்தின் பெயர் மறக்கப்பட்ட படமாகிவிடும் என்பது.

 4. வண்ணத்துபூச்சியார் says:

  ஹரன் நீங்கள் சொல்வது சரிதான். சாரு சாதாரண நிலையில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கண்ணோட்டத்துடன் எழுதுவதாக நினைத்து கொண்டும் தான் சற்றே மாற்று சிந்தனைகாரர் (ஒரளவு உண்மைதான்) என காட்டி கொள்வதற்காகவே இப்படி எழுதுகிறார் என நினைக்கிறேன்.

  வாழும் சுஜாதா என்ற நினைப்போ..??

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*