கொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் – நாள் 1)

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலை மாலன் வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். சூஃபி வழி நூலை மாலன் வெளியிட ஜே.எஸ்.ராகவன் பெற்றுக்கொண்டார்.

மாலன் கேண்டீட் நாவலைப் பற்றிப் பேசினார். வோல்ட்டேரின் அறிமுகத்தோடு தொடங்கிய மாலன், கேண்டீட் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்தை விவரித்தார். பின்பு பத்ரியின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பாராட்டிய மாலன், மொழிபெயர்ப்பின் எல்லையையும் மொழியின் போதாமையையும் பற்றிக் குறிப்பிட்டு, நாவலிலுள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டினார். நாவலின் ஓரிடத்தில் இப்படி வரும். ‘—–ஐக் கொட்டினாள்’ என்று. நான் கேண்டீட் நாவலைப் படித்தபோதே இதைப் பற்றி பத்ரியிடம் கேட்டேன். நாவலின் மூலப் பிரதியிலும் இப்படித்தான் இருக்கிறது என்று பத்ரி சொன்னார். மாலன் வேறொரு மூலத்தில், அவள் தண்ணீரைக் கொட்டினாள் என்றுதான் இருக்கிறது என்றார். ஆனால் பத்ரி மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டது வேறொரு ஆங்கில மூலத்தை. அதேபோல் கொலைகள் பற்றிய விவரணைகளை தவிர்த்துவிட்டு, பொதுவாக, ’படுகொலை செய்யப்பட்டார்’ என்று பத்ரி எழுதியிருக்கிறார், இது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரம் என்றார் மாலன். இன்னொரு இடத்தில் ‘நயா பைசா’ என்று வருவதைச் சுட்டிக்காட்டிய மாலன், அக்காலத்தில் நயா பைசா என்று கிடையாது என்றார். (பின்பு சூஃபி வழி நூலை வெளியிட்டு பா.ராகவன் பேசினார். பத்ரியும் நாகூர் ரூமியும் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.) பின்பு பதிலளித்தபோது பத்ரி சில கருத்துகளைச் சொன்னார். சில இடங்களில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே தான் மொழிபெயர்த்துவிட்டதாகச் சொன்னார். பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பாதிரிகளைத் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒரே வார்த்தையாக பாதிரி எனக் குறிப்பிட்டது, பல்வேறி படிகளைக் கொண்ட ஜமீந்தார் முறைகளைத் தனிதனியாகச் சொல்லாமல் ஒரே வார்த்தையாக ஜமீந்தார் எனப் பயன்படுத்தியது என்பது போன்ற விஷயங்களை விளக்கினார். நாகூர் ரூமி ‘நயா பைசா’ என்பது சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இரா.முருகன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, டிரான்ஸ்லேஷனுக்கும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கும் டிரான்ஸ்கிரியேஷனுக்கும் (மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எனக் கொள்ளலாம்) வித்தியாசங்கள் உண்டென்றும், மொழித் தழுவல் என்பது வெகு காலமாக நம்மிடையே உள்ளதுதான் என்றும் கருத்துச் சொன்னார். ஆனால் பத்ரி செய்தது மொழிபெயர்ப்புதான். அதனால் நயா பைசா என்பதை மாலன் சுட்டிக்காட்டியது சரியான குறையே என்பது என் எண்ணம். அதை அடுத்த பதிப்பில் சரி செய்யலாம். இந்த நாவலை மொழிபெயர்க்க ஏன் தேர்தெடுத்தீர்கள் என்று பத்ரியிடம் கேட்டபோது, தன்னாலும் மொழிபெயர்க்க முடியும் என்று தனக்கே நிரூபித்துக்கொள்ளவும், அதன் மூலம் நல்ல மொழிபெயர்ப்புகளை ஊக்கப்படுத்தவும் முடியும் என்பதாலும் என்றார். முதல் மொழிபெயர்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கும் நல்ல பெயரின் எக்ஸைட்மெண்ட் அடுத்தடுத்த மொழிபெயர்ப்புகளை நிச்சயம் கொண்டுவரும் என்று நினைக்கிறேன்.

சூஃபி வழி புத்தகத்தை வெளியிட்டு பாரா பேசினார். பேசத் தெரியாது என்றும் மைக் பிடித்து அதிகம் பழக்கமில்லை என்றும் நல்ல நகைச்சுவையோடு ஆரம்பித்த பாரா கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குப் பேசினார். தான் சிறு வயதில் கண்ட சாமியார்களிடத்திலும் சூஃபித்தன்மையைப் பார்ப்பதாக தற்போது உணர்வதாகச் சொன்னார் பாரா. சிறந்த புத்தகம் ஒன்றைப் படித்த திருப்தியைப் பற்றிக் குறிப்பிட்ட பாரா, ஒரே இரவில் எப்படி இப்புத்தகம் அவரை உள்ளிழுத்துக்கொண்டது என்பதையும் குறிப்பிட்டார். ஆண்டாள், ராமகிருஷ்ணர் என யாரையும் பாரா விட்டுவைக்கவில்லை. எல்லாரிடத்திலும் சூஃபித் தன்மை உள்ளது என்றார். ராமானுஜரிடத்திலும் சூஃபித் தன்மையைக் கண்டார் பாரா. சென் பௌத்தம், இஸ்லாம், ஹிந்துமதம் என எந்த மதத்திற்கும் சூஃபித்தன்மைக்கும் தொடர்பே இல்லை என்றார். அதனாலேயே சூஃபி வழி என்கிற பெயரைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும், மதத்துக்கும் சூஃபிக்கும் தொடர்பில்லை என்று நம்பும் எந்தவொரு மனிதனையும் இப்புத்தகம் பாதிக்கும் என்றும் விளக்கினார் பாரா. சூஃபிகளின் சில வரிகளைப் பார்க்கும்போது, ரிக் வேதத்தோடு தன்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது என்பதையும் விளக்கினார் பாரா. புத்தகம் மிகக் கடுமையாகவே அவரைப் பாதித்திருக்கிறது என்கிற உண்மையை உணரமுடிந்தது. அதற்குப் பின்பு சில கேள்விகளுக்கு நாகூர் ரூமி பதிலளித்தார். அரங்கம் எல்லாவித இறுக்கங்களையும் இழந்து, கலந்துரையாடலுக்கான ஒரு மன நிலையைப் பெற்றது நாகூர் ரூமி கேள்விகளுக்கு பதிலளித்தபோதே.

இஸ்லாமுக்கும் சூஃபியிசத்துக்கும் தொடர்பில்லை என்றார் நாகூர் ரூமி. இஸ்லாமியர்கள் இக்காலத்தில் சூஃபியிஸத்தை ஏற்கிறார்களா (கேட்டவர் நேசமுடன் ஆர். வெங்கடேஷ்) என்று கேட்டபோது, எக்காலத்திலும் இஸ்லாம் சூஃபியிஸத்தை ஏற்றுக்கொண்டதில்லை என்றார் ரூமி. அவனே உண்மை எனச் சொல்லவேண்டிய ஒரு சூஃபி, நானே உண்மை எனச் சொன்னதாகவும் (இதற்கான அராபியச் சொற்கள் மறந்துவிட்டன. ஒரு மோன நிலையில் சூஃபி இப்படி மாற்றிச் சொல்கிறார்), அவர் அதையே மீண்டும் மீண்டும் சொன்னதால் அவர் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் எறியப்பட்டார் என்றும் சொன்னார் நாகூர் ரூமி. இஸ்லாத்தின் கட்டுக்களிலிருந்து வெளிவர விரும்பும் ஒருவர் இஸ்லாமியராகத் தொடர நினைக்கும்போது உருவாகும் வெளியை சூஃபியிஸம் எனலாமா எனக் கேட்டேன். நாகூர் ரூமி சொன்ன பதில் சரியாக நினைவில்லை. சூஃபியிஸம் என்பதை எம்மதத்தோடும் தொடர்புபடுத்தவேண்டியதில்லை என்றார். ஹிந்து மதத்திலும் சூஃபித்தன்மையைக் காணலாம் என்றார். கபீர்தாஸ் ஒரு சூஃபி என்றார். ராமகிருஷ்ண பரமஹம்சரிசம் சூஃபித் தன்மையைக் காணலாம் என்றார். சூஃபிகள் சிலை வழிபாட்டை ஏற்கிறார்களா என்று கேட்டேன். கண்டிப்பாக ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்றார். அவரிடத்திலும் ஒரு சூஃபித்தன்மை குடிபுகுந்துவிட்டதை நான் அந்நிமிடத்தில் கண்டேன். 🙂 வெங்கடேஷ் மற்றொரு கேள்வி கேட்டபோது மாலன் ‘பாரதியார் நானே கடவுள் என்றெழுதிய சமயத்தில் அவருக்குள் ஒரு சூஃபித்தன்மை இருந்ததை உணர்வதாக’ச் சொன்னார். ஹிந்துமத்தில் சூஃபியிஸத்தின் தேவை என்ன என்று நான் கேட்டேன். மீண்டும் வழக்கம்போல மதத்துக்கும் சூஃபியிஸத்துக்கும் தொடர்பு தேவையில்லை என்கிற கருத்தே முன்வைக்கப்பட்டது. மீண்டும் சூஃபியிஸம் பற்றிய கேள்விகளுக்கு, சூஃபியிஸத்தை சரியாக விளக்கமுடியாது, அது அனுபவம் என்றார் ரூமி. அப்படியானால் அது பின்நவீனத்துவமாக மட்டுமே இருக்கமுடியும் என்றேன் நான்.

சூஃபிஸத்திற்கும் மதத்திற்கும் தொடர்பே இல்லை என்கிற கருத்தையே நான் முற்றிலுமாக மறுதலிக்கிறேன். நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு. இஸ்லாத் சட்டங்களின் அடிப்படையான மதம். சட்டப்படி சரி, தவறு என்கிற இரண்டு பார்வைகளே உண்டு.

பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும். அறிவார்ந்த முட்டாள்கள் தங்கள் முட்டாள்தன்மையை கைவிட்டால், அவர்கள் சட்டத்தை மீறவேண்டியிருக்கும். அங்கே தார்மீகம் முன்னுக்கு வரும். அறிவார்ந்த முட்டாள்கள் அப்படியே தொடர்ந்தால் அவர்கள் சட்டத்திற்குள்ளே வாழமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே.

இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம். கருப்பு வெள்ளைகளுக்கு நடுவே உள்ள பல்வேறு நிறங்களில் வாழ்வது சாத்தியமல்ல. இங்கேதான் சூஃபியிஸத்தின் தேவை இருக்கிறது. கட்டுக்களின் மீது கேள்வியும் எதார்த்தத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவர் ஒரு சூஃபியாகவே இருக்கமுடியும். இதனால் இது இஸ்லாத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகிறது. ஹிந்து மதத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. கடவுளை எதிர்த்துக்கொண்டே ஒரு ஹிந்து ஹிந்துவாகத் தொடர்ந்துவிடமுடியும். ஹிந்துவாக இருப்பதற்கான எந்தவொரு வழிமுறையும் கோரப்படவில்லை. ஹிந்துக்களின் புனித நூலாகச் சொல்லப்படும் பகவத்கீதையை மறுதலித்துவிட்டவனும் ஹிந்துவாகத் தொடரமுடியும். இதனால் ஒரு ஹிந்து கட்டுக்களிலிருந்து வெளிவரவேண்டிய தேவை இல்லை. உள்ளிருந்தே அவன் கேள்விகளை எழுப்பமுடியும் என்பதால் அங்கே சூஃபியிஸம் தேவையில்லை. தீர்ப்பு நாளில் நீங்கள் கடவுளை அடைவீர்கள் என்று இஸ்லாமும், மனிதனாக இருக்கும்போதே கடவுளை அடையும் என்று சூஃபியிஸமும் சொல்கின்றன. இதை இஸ்லாமியர்கள் ஏற்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்துக்கள் இதை எளிதாக ஏற்பார்கள். நாடெங்கும் நிலவும் குலதெய்வ (சிறுதெய்வ) வழிபாட்டின் அடிப்படை இதுவே. அதன் தொடர்ச்சியே தர்கா. இஸ்லாம் வெளிநாடுகளில் பரவும்போது, அங்கிருக்கும் கலாசாரத்தோடும், மதங்களோடும் நெருங்கிவரும்போது அங்கே நிச்சயம் சூஃபியிஸத்தின் தேவை இருக்கும். அதன்வழியேதான் சிலை வழிபாட்டை சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஒரு இந்திய இஸ்லாம் வீட்டுக் கல்யாணத்தில் இடம்பெறும் பூவும் பழமும் கூட சூஃபிஸத்தின் ஒரு கூறுதான் என்று ஓங்கிச் சொல்லிவிடமுடியும். ஏனென்றால் யாரும் சூஃபியிஸத்தை அறுதியிட்டு விளக்கமுடியாதே! 🙂

ராமானுஜரிடத்திலும் ஆண்டாளிடத்திலும் பரமஹம்சரிடத்திலும் பாரதியாரிடத்திலும் ஒருவர் சூஃபித் தன்மையைக் காண்பது ரசனையின் அடிப்படையில், அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல. விமர்சனத்தின் ஒரு புள்ளி அது. ரசனையின் மேம்பட்ட புள்ளி அது. அது உண்மையாக இருக்கவேண்டியதில்லை. அது உண்மையென்றால், தி.ராசகோபாலன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள், சங்ககாலங்களில் காதலன் காதலியோடு பேசும்போது நேரம் விரைவாகச் சென்றது; காதலன் காதலியைப் பிரிந்து இருந்தபோது நேரம் மெதுவாகச் சென்றது என்பது சார்பியல் என்பதன் வெளிப்பாடே; அதனால் அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது என்கிற கொடுமையையெல்லாம் ஏற்கவேண்டியிருக்கும். கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மழை பெய்வதை பாசுரத்தில் காணலாம் என்பதை சுஜாதா சிலாகித்தார். அது அப்படியே ரசனையோடு நின்றது. அறிவியல் புனைகதைகளின் கூறுகளைப் பட்டியலிட்ட சுஜாதா, அதன் சில கூறுகளை நாம் ராமாயணத்திலேயே, விக்கிரமாத்தித்தன் கதையிலேயே காணலாம் என்றார். அதுவும் ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்ததே. மாறாக, அதுவே சயின்ஸ் பிக்க்ஷனின் முதல் பிரதி என்று நாம் பிரஸ்தாபிக்கமுடியாது. இதுவே சூஃபித்தன்மைக்கும். சூஃபித்தன்மையை நாம் யாரிலெல்லாம் பார்க்கமுடிகிறது என்று யோசிப்பது ஒரு ரசனையின் அடிப்படை. அதை கபீர் தாஸுக்குப் பொருத்துவது, இரண்டு எதிரெதிர் மதங்களுக்குள்ளான ஆன்மிகத்தன்மையின் ஒற்றுமைப்புள்ளியைக் கண்டடைவது. பாராவிற்கு நிகழ்வதும் இதுவே. அதற்காக பரமஹம்சரும், கபீரும் சூஃபி என்பதெல்லாம் ஏற்கமுடியாதது. சூஃபியிஸத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. மென் இஸ்லாமியர்களின் துவக்கப்புள்ளியாக சூஃபியிஸத்தை வைத்துக்கொள்ளலாம். இந்தக் காரணத்துக்காகவே தீவிர இஸ்லாமியர்கள் இதை ஏற்கவில்லை என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகிறது. அதனால், சூஃபி வழி – இஸ்லாமியர்களின் இதயம் என்று ரூமி வைக்க இருந்த தலைப்பு மிகவும் நேர்மையானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

எனது கருத்தையெல்லாம் நான் சூஃபி வழி புத்தகத்தைப் படிக்காமல் எழுதியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்தபின்பு, ‘இஸ்லாத்திற்கும் சூஃபியிஸத்திற்கும் தொடர்பே இல்லை’ என்று நானே சொல்லக்கூடும். அப்போது – நாகூர் ரூமி பேசும்போது இடையில், ‘உங்களுக்குத் தெரியாத நாகூர் ரூமி ஒருத்தன் இருக்கான். அவன் எழுதின புத்தகம் இது’ என்றார். அந்நியன் படம் பார்த்தமாதிரி இருந்தது. கொஞ்சம் திகிலாக உணர்ந்தேன் – நீங்களும் இதேபோல் திகிலடையக்கூடும். அந்த நிமிடத்தில், ’பெரியாரும் ஒரு சூஃபியே’ எனச் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

(பி.கு.: நேற்று காராசேவு கொடுத்தார்கள். எந்த சூஃபி தயாரித்தார் எனத் தெரியவில்லை. மிக நன்றாக இருந்தது.)

Share

Facebook comments:


45 comments

 1. enRenRum-anbudan.BALA says:

  மிக மிக அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி, நன்றி, நன்றி.
  //ராமானுஜரிடத்திலும் ஆண்டாளிடத்திலும் பரமஹம்சரிடத்திலும் பாரதியாரிடத்திலும் ஒருவர் சூஃபித் தன்மையைக் காண்பது ரசனையின் அடிப்படையில், அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல. விமர்சனத்தின் ஒரு புள்ளி அது. ரசனையின் மேம்பட்ட புள்ளி அது.
  //
  ஒத்துப் போகிறேன் 🙂

 2. Sridhar Narayanan says:

  //ஆண்டாள், ராமகிருஷ்ணர் என யாரையும் பாரா விட்டுவைக்கவில்லை. எல்லாரிடத்திலும் சூஃபித் தன்மை உள்ளது என்றார். ராமானுஜரிடத்திலும் சூஃபித் தன்மையைக் கண்டார் பாரா. சென் பௌத்தம், இஸ்லாம், ஹிந்துமதம் என எந்த மதத்திற்கும் சூஃபித்தன்மைக்கும் தொடர்பே இல்லை என்றார். அதனாலேயே சூஃபி வழி என்கிற பெயரைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும், மதத்துக்கும் சூஃபிக்கும் தொடர்பில்லை என்று நம்பும் எந்தவொரு மனிதனையும் இப்புத்தகம் பாதிக்கும் என்றும் விளக்கினார் பாரா. சூஃபிகளின் சில வரிகளைப் பார்க்கும்போது, ரிக் வேதத்தோடு தன்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது என்பதையும் விளக்கினார் பாரா. //

  இது வெறும் உணர்வுமயமான பேச்சு. அப்படி ஒரேயடியாக சூஃபியிசத்தை பொதுமைபடுத்தி விடமுடியாது. இந்திய தத்துவ மரபில் பல்வேறு படிமங்கள் உண்டு.

  இஸ்லாமிய சூஃபிசத்திற்கும், பௌத்த ஜென் வழிகளுக்கும், இந்திய தத்துவ வழிகளுக்கும், தமிழில் சொல்லப்படும் ‘சித்தர்’ வழிகளுக்கும் ஒப்புமைகள் இருக்கலாம். ஆனால் அவைகளின் existence-க்கு காரணங்கள் வேறு.

 3. Narain says:

  Prasanna,

  Its not between Translation & Transcription. Its between Translation & Transcreation is what Era.Murugan said.

 4. Venkatesh R says:

  அது ”டிரான்ஸ்கிரிப்ஷனுக்கும்” இல்லை. டிரான்ஸ்கிரியேஷன்.

  நேசமுடன்
  வெங்கடேஷ்.

 5. ஹரன்பிரசன்னா says:

  நாராயண், வெங்கடேஷ்,

  தவறைத் திருத்தியமைக்கு நன்றி.

 6. அரவிந்தன் நீலகண்டன் says:

  சூஃபி என்பதனை எப்படி வரையறை செய்கிறார் பாரா? ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலைவழிபாட்டை மறுக்கவே இல்லை எந்த இடத்திலும். அத்வைதிகள் வேதாந்திகள் ஆகியோர் உருவவழிபாட்டை கடந்து செல்வது என்பதும் இஸ்லாம் உருவவழிபாட்டை நிராகரிப்பதும் வெவ்வேறு தளங்களில் நிகழ்பவை. ஒன்றோடொன்று தொடர்பற்றவை. பாராவின் புரிதலின் போதாமையை அவரது அறியாமையை மொட்டை மாடியில் நின்று வெளிப்படுத்தியிருக்க வேண்டாம்.

 7. Anonymous says:

  நாகூர் ரூமி, பாரா, இத்தியாதிகள், சூப் குடிப்பதையேகூட சூஃபிஸம் என்றும், இந்திய மதங்களுக்கு சூப் குடிப்பது பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூச்சமின்றிப் பிதற்றத் தயங்காதவர்கள்.

  ஷியா, அஹமதியா பிரிவினரைக்கூட இஸ்லாமுடன் சம்மந்தம் இல்லாதவர்கள் என்று சொல்லக்கூடியவர்தான் நாகூர் ரூமி.

  இத்தகைய சங்கடமான கேள்விகளை
  எழுப்பக்கூடிய எவரும் கிழக்கு நடத்தும் மொட்டைமாடிக் கூட்டங்களுக்கு வர
  விரும்புவதில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.

  – ரங்கதுரை

 8. ஜயராமன் says:

  //// சூஃபியிஸம் என்பதை எம்மதத்தோடும் தொடர்புபடுத்தவேண்டியதில்லை என்றார். ஹிந்து மதத்திலும் சூஃபித்தன்மையைக் காணலாம் என்றார். கபீர்தாஸ் ஒரு சூஃபி என்றார். ராமகிருஷ்ண பரமஹம்சரிசம் சூஃபித் தன்மையைக் காணலாம் என்றார். ///

  சூஃபியிஸம் என்பதையே என்னவென்று தெளிவர வரையறை செய்யாத நிலையில் எழும் குழப்பங்களே இவை என்பது என் எண்ணம். நானே கடவுள் என்ற பிம்பம் சூஃபியிஸத்தின் பரிமாணம் என்றால் இந்து மதத்தின் அடிப்படை வேதாந்திகள் அனைவருமே சூஃபிகள்தாம்.

  சூஃபியிஸம் என்பது ஆப்ரகாமிய மதங்களின் அடிப்படை ஆன்மீக வெற்றிடத்தை நிரப்ப எழுந்த ஒரு சமுதாய, தார்மீக பரிமாணம்.

  தெற்காசிய (இந்திய துணைக்கண்ட) இஸ்லாத்தின் ஒரு அழகிய, செறிய பரிமாணமாக பன்னூறு ஆண்டுகளாகத் திகழ்ந்த ஒரு அற்புத வெளிப்பாட்டை இன்று இஸ்லாம் வெறுக்கவும், மறுதலிக்கவும் செய்கிறது என்றால் அதற்கு இஸ்லாம் இன்று எழுப்பிக் கொண்டுள்ள காழ்ப்புச்சுவரே காரணம் அன்றி வேறல்ல.

  தங்களின் பதிவைப் பார்க்கும்போது இந்த புத்தகத்தினருக்கு இருக்கும் மேற்போக்கான அறிவு (அந்த அறிவின் குறை) தெளிவாகிறது.

  நன்றி

  ஜயராமன்

 9. சுரேஷ் கண்ணன் says:

  Prasanna,

  Thanks for the write-up.

  //நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு.//

  இதை நிறுவுவதற்காக நீங்கள் அடையும் பதட்டத்தை மிகவும் ரசித்தேன்.

  //இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம்.//

  அப்படியா? இசுலாமிய மதத்தை அதிலிருந்துக் கொண்டே விமர்சிக்க முடியாதா? அப்படி செய்தால் அவன் இசுலாமியன் அல்ல என்று அந்த மதம் கூறுகிறதா?

  யாராவது விளக்க வேண்டுகிறேன்.

  //எனது கருத்தையெல்லாம் நான் சூஃபி வழி புத்தகத்தைப் படிக்காமல் எழுதியிருக்கிறேன்.//

  புத்தகத்தைப் படிக்காமலேயே இவ்வளவு எழுதியதை தவிர்த்து விட்டு புத்தகத்தைப் படித்த பின் உங்கள் பார்வையை இன்னும் தெளிவாக தீர்மானமாக வைத்திருக்கலாம்.

  //நாகூர் ரூமி, பாரா, இத்தியாதிகள், சூப் குடிப்பதையேகூட சூஃபிஸம் என்றும், இந்திய மதங்களுக்கு சூப் குடிப்பது பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூச்சமின்றிப் பிதற்றத் தயங்காதவர்கள். //

  எனிவே இந்த பின்னூட்டத்தை ரசித்து சிரித்தேன்.

 10. Anonymous says:

  // ’பெரியாரும் ஒரு சூஃபியே’ //

  இல்லையா பின்ன… அப்புறம் அண்ணா, கலைஞர், வீரமணி எல்லோரும் கூட சூஃபிக்கள் தானே! இதை நாகூர் ரூமி, பாரா மற்றும் நம் தமிழ்மக்கள் எப்போது உணரப் போகிறார்கள்? அய்யகோ, தமிழா நீ இப்படி எவ்வளவு நாளைக்கு சோற்றாலடித்த பிண்டமாக இருக்கப் போகிறாயோ தெரியவில்லையே!

  சூஃபிதாசன்

 11. ஹரன்பிரசன்னா says:

  //

  //நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு.//

  இதை நிறுவுவதற்காக நீங்கள் அடையும் பதட்டத்தை மிகவும் ரசித்தேன்.

  //

  நான் பதட்டமடையவில்லை. நான் பதட்டமடைந்திருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பி ரசித்திருப்பது புரிகிறது. இது வழக்கமானதுதான் என்பதும் புரிகிறது.

 12. அதிஷா says:

  அண்ணாச்சி முதல்ல புக்க படிச்சிட்டு சூஃபிவழி பத்தி எழுதிருக்கலாம்.

  எல்லாத்தையும் எழுதிட்டு நாளைக்கு புக்கெழுதிட்டு நான் எழுதினதுலாம் சும்மா லுலாயினா?

 13. அதிஷா says:

  \\புக்கெழுதிட்டு நான் எழுதினதுலாம் சும்மா லுலாயினா\\

  புக்கெழுதிட்டு இல்ல புக் படிச்சிட்டு சும்மா லுலாயினா?

 14. ramachandranusha(உஷா) says:

  இஸ்லாமிய சூஃபிசத்திற்கும், பௌத்த ஜென் வழிகளுக்கும், இந்திய தத்துவ வழிகளுக்கும், தமிழில் சொல்லப்படும் ‘சித்தர்’ வழிகளுக்கும் ஒப்புமைகள் இருக்கலாம். ஆனால் அவைகளின் existence-க்கு காரணங்கள் வேறு//
  good

 15. Anonymous says:

  //காதலன் காதலியைப் பிரிந்து இருந்தபோது நேரம் மெதுவாகச் சென்றது என்பது சார்பியல் என்பதன் வெளிப்பாடே; அதனால் அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது என்கிற கொடுமையையெல்லாம் ஏற்கவேண்டியிருக்கும். ..//

  சரியான கருத்து. தவறான உதாரணம்.

  ஒரு சமுதாயத்தில் அறிவியல் என்பது இருந்ததே இல்லை என எடுத்துக்கொண்டால் நீங்கள் சொல்லும் உதாரணம் பொருந்தும். ஆனால், தமிழர்கள் அறிவியல் திறம் மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்பது அவர்கள் கட்டிய கோயில்களிலும், வான சாத்திரங்களிலும், மருத்துவத்திலும் காணக் கிடைக்கிறது.

  குறளைப் பற்றி சிலாகித்த அவ்வையார் “அணுவை துளைத்து…” என்று சொல்லியுள்ளார். இதில் “அணு” எனும் வார்த்தை வெறும் கற்பனையின் உச்சத்தில் எழுந்த ஒன்று அல்ல.

  தற்போது கிட்டிய சங்க இலக்கியங்கள்கூட ஒரு தனி மனிதரின் சொந்த முயற்சியின் பலன். இன்னும் அறியக் கிடைக்காத எத்தனையோ இலக்கிய, ஆன்மீக, அறிவியல் பொக்கிஷங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், இவற்றை தேடி கண்டுபிடிக்க நமது “தமிழர் தலைவர்களுக்கு” நேரம் இல்லை. மனித சங்கிலி ஏற்பாடு செய்வது அல்லது மிதிவண்டி சங்கிலி சுற்றுபவர்களை வளர்த்துவிடுவதுதான் இவர்களின் தமிழ் வளர்ச்சிப் பணியாக இருக்கிறது.

  அதனால்தான் பாலம் கட்டுவதற்கு ராமன் எந்த இஞினியரிங் காலேஜில் படித்தான் என்று கேள்வி கேட்கிறார்கள். பாலம் கட்டியது, பறக்கும் விண்கலங்களை உபயோகப்படுத்தியது என்று பல விஷயங்கள் ராமாயணத்திலும் வேறு பல இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எப்படி உருவாக்குவது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

  எனவே, இந்த சூழலில் இதுபோன்ற டெக்னாலஜிகளை தமிழர்கள் செய்தார்கள் என்பதை நிறுவ தேவையான ஆதாரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. அதனால், இந்த விஷயங்களை நம்மவர்கள் அறிந்து இருந்தார்கள் என்றோ, அல்லது இவை அவர்களுக்கு தெரியாமல் இருந்தது என்றோ திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. இதுதான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.

  மற்றபடி, மிக அருமையான நேர்மையான கட்டுரை.

 16. enRenRum-anbudan.BALA says:

  Haran prasanna, Suresh Kannan,
  ********************************
  //

  //நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு.//

  இதை நிறுவுவதற்காக நீங்கள் அடையும் பதட்டத்தை மிகவும் ரசித்தேன்.
  //

  //
  நான் பதட்டமடையவில்லை. நான் பதட்டமடைந்திருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பி ரசித்திருப்பது புரிகிறது. இது வழக்கமானதுதான் என்பதும் புரிகிறது.
  //
  ******************************
  நான் உங்கள் இருவரின் பதட்டத்தையும் ரசித்தேன். இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு என்னைக் கட்டம் கட்டுவீர்களோ ? 😉

  மத்தபடி இஸ்லாமுக்கும், சூஃபியிஸத்திற்கும் சம்பந்தம் உண்டு (சில கோட்பாடுகளை மறுத்து அது தோன்றியிருந்தாலும் கூட!) என்பது straight forward-ஆன விசயம் தானே, எதற்கு ‘நிறுவ’ வேண்டும் ????

  எ.அ.பாலா

 17. மாலன் says:

  பிரசன்னா,

  நேற்றையக் கூட்டத்தில் பா.ரா.சூஃபியிசம் பற்றி சரியாக விளக்கவில்லை; ரூமியும் அந்தக் குறையை நிரப்பவில்லை. எனவே கேள்விகள் எழுவது இயல்பே.

  நான் அறிந்தவரையில் சூஃபியிசம் இதுதான்: இஸ்லாம் மண்ணுலக வாழ்வில் பின்பற்ற சில நெறிகளையும் (சட்டங்களையும்) வகுத்து அதைப் பின்பற்றினால் இறப்பிற்குப் பின் விண்ணுலகில் இறுதித் தீர்ப்பிற்குப் பின் இறைவனுக்கு அருகில் செல்லலாம் என்கிறது. ஆனால் வாழும் போதே மனிதர்கள் இறைத்தன்மையை அடைய முடியும் என சூஃபிக்கள் நம்பினார்கள். இதை மாதிரியான ஒரு கருத்தை பெளத்தமும் சொல்கிறது.இறைதன்மை என்பதற்குப் பதில் புத்தத் தன்மையை அடைவது அதாவது ஞானம் பெறுவது என்கிறது அது.

  இதில் குழப்பம் எங்கே வருகிறது என்றால் வாழும்போதே இறைத் தன்மையை அடைவதற்கான வழி இதுதான் என சூஃபிக்கள் பரிந்துரைப்பதில்லை. ஒருவன் தன்னை உள்முகமாக மேம்படுத்திக் கொள்வதை பல்வேறு வழிகளில் செய்யலாம் என அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். தன்னுடைய செயல்களை சரியாக செய்து வருவது ஒரு வழி, உலகியல் சார்ந்த வேலைகளை செய்யாமல் உள்முகமாகச் சிந்திப்பது ஒரு வழி.மதம் விதித்த கடமைகளை பிழையின்றிச் செய்வது ஒருவழி. மதம் பாராமல் மற்றவரிடத்தில் அன்பு பாராட்டுவது ஒரு வழி எனப் பலர் பல முறைகளைப் பின்பற்றி இருக்கிறார்கள்.

  எல்லா சூஃபிகளிடமும் பொதுவான இரண்டு அம்சங்களைப் பார்க்க முடியும். 1,அவர்கள் கடவுளை மறுப்பதில்லை. இந்தக் கடவுள்தான் பெரிது எனச் சண்டையிடுவதில்லை எனவே மதம் இரண்டாம் பட்சமாகிறது.(இதனால்தான் சில இஸ்லாமியர்கள் அதை எதிர்க்கிறார்கள்)
  2.சூஃபிக்கள் dualityயை அதாவது மனிதன் -கடவுள் என்ற இருநிலைகளை ஏற்பதில்லை அல்லது வற்புறுத்தவதில்லை.(இங்குதான் ஆண்டாள் வருகிறார், ரிக் வேதம் வருகிறது- பாராவின் பார்வையில்)
  சூஃபி கோட்பாடு என்று துவங்கியது என்பது குறித்து இஸ்லாமியர்களிடையே கருத்து நிலவுகிறது. குரான் இடைவிடாது ஓதப்பட்டு, தியானிக்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, தோன்றியது என்கிறார்கள் சிலர். (இமாம் அல் கசாலி : Revival of Religious Sciences) இல்லை அது நபியின் காலத்திற்குப் பின்பட்டது என்கிறார்கள் சிலர்

  நானும் இன்னும் நூலைப் படிக்கவில்லை.:-)

 18. Sridhar Narayanan says:

  சுரேஷ்,

  //புத்தகத்தைப் படிக்காமலேயே இவ்வளவு எழுதியதை தவிர்த்து விட்டு புத்தகத்தைப் படித்த பின் உங்கள் பார்வையை இன்னும் தெளிவாக தீர்மானமாக வைத்திருக்கலாம். //

  சூஃபியிசம் பற்றியோ, ஜென் பற்றியோ பேசுவதற்கு இந்த புத்தகத்தை படித்து மட்டும் பேச வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.

  பத்ரியின் பதிவில் பாராவின் பேச்சைக் கேட்டதில் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் ஓரளவு புரியத்தான் செய்கிறது. சூஃபிகதைகள் / முல்லா கதைகள் என்று இந்த புத்தகத்தில் சொல்லப்படும் கதைகள், ஓஷோ சொன்னதாக, ஈசாக் கதைகளாக, பீர்பால் கதைகளாக பல இடங்களில் படித்திருக்க வாய்ப்புண்டு. தத்துவ சார்பியலில் நுனிப்புல் மேய்வது மிகவும் ஆபத்தானது. அது தவறான பிம்பத்தை சுலபமாக உருவாக்கிவிடும். ஓஷோவை ‘செக்ஸ்’ சாமியார் என்று சொல்வதைப் போல.

 19. ஹரன்பிரசன்னா says:

  மாலன், உங்கள் கருத்துக்கு நன்றி. சூஃபியிஸம் பற்றி நாகூர் ரூமி இன்னும் விளக்கியிருக்கலாம் என்பதே என் எண்ணமும் கூட. அவர் கொஞ்சம் டிஃபென்ஸிவ் ஆகிவிட்டார். 🙂

 20. Anonymous says:

  1.
  //பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும்…..இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே//

  2.
  //இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம்…

  3.
  ஹிந்து மதத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை.//

  அடுத்து வரும் உங்கள் பத்திகளில் நான் இட்டிருக்கும் எண் 1இற்கும் எண் 2இற்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது இரண்டும் வெவ்வேறு கருத்துகளைப் பேசுகின்றனவா?

  தொடர்பு இருக்கிறது எனில் இஸ்லாமிய மதச் சட்டங்களை கடைப்பிடிப்பவர்கள் *அறிவார்ந்த முட்டாள்கள்* என்னும் கருத்தை நீங்கள் முன்வைக்கிறீர்களா?

  அன்புடன்
  ஆசாத்

 21. ஹரன்பிரசன்னா says:

  எந்த ஒரு சட்டத்திற்குள் உட்பட்டிருந்தாலும், அதை ஹிந்துமதம் முன்வைத்தாலும், அதற்கு உட்பட்டிருப்பவர்கள் யாரும் அறிவார்ந்த முட்டாள்களே. அறிவை யோசிக்கும்போது யாரொருவனும் மதத்தில் இருந்து விலகியே தீரவேண்டும். விலகும் புள்ளியை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.

 22. கானகம் says:

  எது சூபியிசம் எனத் தெளிவாக ஒருவரும் வரையறுக்காமல் அல்லது தெரிந்து கொள்ளாமல் இஷ்டத்திற்கு பேசும் எழுதும் ஆட்கள்தான் இன்றைய தேதியில் எழுத்தாளர்கள்.

  இல்லை எனக்கு இவ்வளவுதான் தெரியும் என்று எழுதும், சொல்லும் அளவு நேர்மையாவது இருக்க வேண்டும். இது எதுவும் இல்லாத பாராவும், நாகூர் ரூமியும் ஒருபக்கம்.. புத்தகத்தையே படிக்காமல் நாலுபக்கத்துக்கு கட்டுரை எழுதிய பிரசன்னாவும்.. வெளங்குமா சூபியிசம் ??? 🙂

  இருப்பினும் நன்றாக இருந்தது உங்களது ரிப்போட்டிங்.. ரசித்துப்படித்தேன். நிறைய உள்குத்து கொண்ட கடிதங்களையும் அனாயாசமாக சமாளித்திருக்கிறீர்கள். இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் சேர்ந்துள்ள பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்.

  ஜெயக்குமார்

 23. சுரேஷ் கண்ணன் says:

  //சூஃபியிசம் பற்றியோ, ஜென் பற்றியோ பேசுவதற்கு இந்த புத்தகத்தை படித்து மட்டும் பேச வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.//

  Sridhar Narayanan,

  இல்லைதான். ஆனால் பிரசன்னா தீர்மானமாக தன் பார்வையைச் சொல்லியிருந்தால் சரி. ஆனால் பதிவின் இறுதிப் பகுதியில் ரஜினி மாதிரி குழப்பிவிட்டு விட்டாரே. 🙂

  //நான் உங்கள் இருவரின் பதட்டத்தையும் ரசித்தேன். இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு என்னைக் கட்டம் கட்டுவீர்களோ ? ;-)//

  பாலா,

  நம்ம பிரசன்னாதானே,

  எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். 🙂

 24. ஹரன்பிரசன்னா says:

  சுரேஷ், உங்களைப் போன்ற ஒரு பின் நவீனத்துவ கால வாசக்ர், ஒரு கருத்தை தீர்மானமாகச் சொல்லுவது கண்டு கொதித்துப் போய் இருக்கிறேன். உண்மையில் தீர்மானமாக எதுவுமே இல்லை என்பதுதான் தீர்மானமான விஷயம். அடுத்த புத்தகத்தைப் படிக்கும்போது உங்கள் கருத்து மாற வாய்ப்பு இருக்குமானால், நீங்கள் எதையும் எப்போதும் தீர்மானமாகத் தெரிந்துகொள்ளமுடியாது. சூஃபித்தன்மையில் இதுவும் ஒரு பங்கு. 😛

 25. Anonymous says:

  //அறிவை யோசிக்கும்போது யாரொருவனும் மதத்தில் இருந்து விலகியே தீரவேண்டும்.//

  இது உங்கள் புரிதல், இதில் கேள்வி கேட்க எனக்கு விருப்பம் இல்லை.

  *

  எனது கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

  எனது கேள்வி, *அறிவார்ந்த முட்டாள்கள்* என்று நீங்கள் சொல்லியிருப்பதைப்பற்றி.

  // விலகும் புள்ளியை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.//

  கேட்ட கேள்விக்கு விடைசொல்லாமல், நன்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லையே.

  மிகவும் தெளிவாக அடிக்கோடிட்டுக் கேட்டேனே, இஸ்லாமியர்கள் தங்கள் மதம் சார்ந்த சட்டதிட்டங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தால்,

  அப்படிக் கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களை *அறிவார்ந்த முட்டாள்கள்* என்று சொல்கிறீர்களா?

  இதுதான் எனது கேள்வி.

  இதைத்தான் நீங்கள் சொல்கிறீர்களா?

  1.
  ஆம், இஸ்லாமியர்களையும் சேர்த்துதான் *அறிவார்ந்த முடாள்கள்* என்று சொல்கிறேன்.

  2.
  இல்லை, நான் சொல்வது வேறு, அதாவது…….

  மேற்சொன்ன இரண்டில் உங்கள் பதில் எது?

  தங்கள் மார்க்கத்தில் சொல்லப்பட்டவற்றை சரியாக கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் குறைத்த உங்கள் பார்வை அவர்களையும் *அறிவார்ந்த முட்டாள்கள்* என்கிறதா?

  மழுப்பல், இழுத்தல்கள் அற்ற தெளிவான பதில் தேவை?

  அன்புடன்
  ஆசாத்

 26. அரவிந்தன் நீலகண்டன் says:

  மாலனுடைய கருத்துகள் இன்றைய pop-spirituality கொடுக்கும் பிம்பங்களை ஆதாரமாகக் கொண்டு சூஃபியிஸத்தை வரையறை செய்ய முற்பட்டுள்ளது. மாலன் சூஃபித்துவத்துக்கு சொன்ன விஷயங்கள் வேதாந்தத்துக்கும் பொருந்தும் ஸென் பௌத்தத்துக்கும் பொருந்தும் – [இங்கே வேதாந்தம் பொருந்துவதாக இருப்பினும் அதனை கவனமாக avoide செய்யும் மாலனின் கவனநிறைவு மனதை கவர்கிறது. 🙂 ] – ஓஷோ விளக்கம் கொடுத்துள்ள எந்த ‘மாஸ்டருக்கும்’ பொருந்தும். ஆனால் வரலாற்று ரீதியாக சூஃபியிஸத்தினுடைய இயக்கமானது மிகவும் சிக்கலானது. ஒரு எடுத்துக்காட்டு மட்டும் சொல்கிறேன். அக்பர் ஒரு காலகட்டத்தில் இஸ்லாமிய கட்டுக்கு வெளியே வந்து சர்வமத சமபாவனையை ஏற்றுக்கொண்டதை மிகக்கடுமையாக எதிர்த்தவர் ஷேக் அகமது சிர்கிண்டி எனும் ஸூஃபிதான் (நாகூர் ரூமியும் அக்பரின் சர்வதர்ம சமபாவனையை குறித்து விமர்சனங்கள் உடையவர்தான்) ரிச்சர்ட் ஈட்டனின் பிஜப்பூர் ஸூஃபிகள் குறித்த நூல் ஸூஃபிகள் எவ்வாறு அரசுடன் இணைந்து காஃபிர் இந்துக்களுக்கு எதிரான ஜிகாத்களையே நடத்தினார்கள் என்பதனை காட்டும். எனவே ஸூஃபித்துவம் என்பது ஒரு loaded word. இன்றைய காலகட்டத்தில் அது ஒருவித இஸ்லாமிய ஆர்வெல்லியன் doublespeak-க்கு பயன்படுகிறது. சல்மான் ரஷ்டியை அடித்து கொல்லவேண்டும் என்று சொல்லும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அனைத்து கூறுகளையும் சாமர்த்தியமாக தனது நூலின் மூலம் நியாயப்படுத்தும் நாகூர் ரூமிக்கும், மதானிக்கு பரிந்து பேசும் அப்துல்ரகுமானுக்கும் ஸூஃப்பித்துவம் என்பது அடிப்படைவாத இஸ்லாமிக்கு kernelக்கு மேலாக பூசப்பட்டு வெளிமதத்தினருக்கு குறிப்பாக இந்துக்களுக்கு காட்டப்படும் ஒரு public interface மட்டுமே. அதன் வார்த்தைகள் மாலனுக்கோ பாராவுக்கோ பத்ரிக்கோ அறியப்படும் பொருளிலல்ல நாகூர் ரூமி அறிவது. உதாரணமாக பாரா ஆண்டாளை ஸூஃபி என்பதனை நாகூர் ரூமி ஏற்பாரா என்பதனை கேட்டால் விஷயம் முடிந்துவிடும். Baul களின் அல்லது கபீர் தாஸரின் ‘ஸூஃப்பித்துவத்துக்கு’ ஓஷோ தரும் வியாக்கியான உரைகளை நாகூர் ரூமி நிச்சயமாக ஏற்கமாட்டார். ஆனால் ஒரு இந்து ஒரு வேதாந்த அடிப்படையில் ஸூஃபி எனும் சொல்லை பொருள் கொள்வதை (அவ்வாறு பொருள் கொள்வதை தான் ஏற்கவில்லை என்றபோதிலும்) அந்த ஸூஃபித்தன்மை தம்முடைய கருத்துலகுக்குள் வருவதற்கு ஒரு ஒன்வே ரோடாக பயன்படும் பட்சத்தில் அமைதி காப்பது இஸ்லாமிய தக்கியாவின் மற்றொரு அம்சமாக விளங்குகிறது இங்கு.

 27. ஹரன்பிரசன்னா says:

  பாய், சூஸ் தெ பெஸ்ட் ஆன்ஸர் என்னும் ஆசிரியத்துவத்தின் அடிப்படையில் பதில்களை எதிர்பார்க்கிறீர்கள். என்னால் அப்படி பதில் சொல்லமுடியாது. நான் ஏற்கெனவே சொன்னதுதான் பதில். சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படச் சொல்லும் எந்தவொரு சித்தாந்தத்தையும் – ஹிந்து, சாதி, கம்யூனிஸ, இஸ்லாமிய, பௌத்த, இத்யாதி – அப்படியே ஏற்பவர் யாருமே அறிவார்ந்த முட்டாள்களே. இதில் யார் வந்தார்கள், வரவில்லை என்கிற சல்லடைகளை நீங்கள்தான் தயாரிக்கவேண்டும்.

  விடை சொல்லாமல் நன்றி சொல்வதா, விடை சொல்லி நன்றி சொல்வதா, நன்றியும் சொல்லாமல் விடையும் சொல்லாமல் இருப்பதா என்பதெல்லாம் என் தேர்வு. அதன் அவசியம் என்னைச் சார்ந்தது. அதனால்,

  நன்றி, நன்றி, நன்றி.

 28. நேச குமார் says:

  ஹரன் பிரசன்னா,

  நன்றி, பதிவுக்கு.

  சூஃபிக்களை நான்கு விதமாக பிரிக்கலாம்:

  1. ஜயராமன் சொல்லியுள்ளபடி (‘சூஃபியிஸம் என்பது ஆப்ரகாமிய மதங்களின் அடிப்படை ஆன்மீக வெற்றிடத்தை நிரப்ப எழுந்த ஒரு சமுதாய, தார்மீக பரிமாணம்’), சட்டங்களுக்குள் அடைத்துவைக்கப்பட்ட மேம்போக்கான இஸ்லாமிய ஆன்மீகத்தை, அடிப்படையான ஆன்மீக இயல்பு தகர்க்க முயன்றதன் விளைவாக, ஆன்மீக அனுபவம் ஒன்றையே அடித்தளமாகக் கொண்டு நபித்துவம், அதன் நீட்சியான ஷரீயா, அது வலியுறுத்தும் ஒரு தனிமனித அனுபவம் சார்ந்த இறைக் கோட்பாடை ஒப்புக்கொள்ளாமல் வெளியே வந்த ஆன்மீகவாதியினர்.

  2. ஆபிரகாமிய அடித்தளங்களை ஏற்று (அதாவது ஏக இறை என்ற பாஸிச கோட்பாடு, நபித்துவம் என்ற மூடக்கோட்பாடு, ஷரீயா என்ற அரக்கக் கோட்பாடு) அவற்றுடன் முரண்படாத அளவுக்கு ஆன்மீக வழிமுறைகளை ஏற்பது, அவ்வப்போது முதல் கட்டத்தை நோக்கி முன்னகர முயல்வது – இது இரண்டாம் வகை சூஃபியினர்.

  3. ஆபிரகாமிய அடித்தளத்தை முழுமையாக ஏற்று, அதன் கண்மூடித்தனமான மத அரசியல் கோட்பாட்டின் நகலான கண்மூடித்தனமான ஆன்மீகக் கோட்பாட்டை ஏற்று செயல்படும் சூஃபியினர் (இவர்கள் ஜிஹாதிகளுக்கு சற்றும் சளைக்காத வரையில் பாகன் மரபுகளையும், ஆன்மீகத்தையும் அழித்தனர். செல்லும் இடமெல்லாம் ஜிஹாதிகளின் ஐந்தாம் படையாக செயல்பட்டு அரபு ஆதிக்க விஸ்தீரனத்துக்கு அடிகோலினர் – இன்று மரியாதைக்குள்ளானவர்களாக இருக்கும் பல சூஃபி ‘இறைநேசர்கள்’ இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

  4. அப்பட்டமான போலிகள். இவ்வகை சூஃபிக்கள் சில மாயமந்திர கலைகளில் தேர்ந்தவர்களாயிருந்து சாதாரண மக்களை ஏமாற்றினர், இஸ்லாத்துக்கு அழைத்து வந்தனர், மது-மாது-அதிகார ஆசையோடு செயல்பட்டனர். சூஃபிக்களில் பெருவாரியோனோர் இவ்வகையினரே. இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்டிருப்பதால் நான்காவது வகையினரைப் போன்றே பலசமயம் மூன்றாவது வகையினரும் இருந்தனர்.

  ***

  சூஃபியிஸம் தோன்றியது குறித்து சில கருத்துக்கள் இருக்கின்றன:

  1. அது பாரசீக தாக்கத்தால் உருவானது (பல சூஃபிக்கள் அலியையே முதல் சூஃபியாக பார்ப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அலி பாரசீகர்களுக்காக ஏனைய அரபு கலீஃபாக்களிடம் போராடினார்).

  2. சூஃபியிஸம் என்பது இஸ்லாத்துக்கு முன்பிருந்தே இருப்பது.

  3. சூஃபியிஸம் என்பது முஹமதின் திண்ணைத் தோழர்கள் வழி வந்தது. முஹமது தனது நெருக்கமான தோழர்களுக்கு சூஃபியிஸத்தையும், மற்றவர்களுக்கு மெயின்ஸ்ட்ரீம் இஸ்லாத்தையும் போதித்தார் என்பது ஒரு மரபு. ஆனால் இதில் எத்தனை தூரம் உண்மை என்பது குழப்பமான ஒரு விஷயம் தான். ஏனெனில், குரானில் சூஃபித்துவமான விஷயங்கள் எதுவுமே இல்லை. ஆனால், ஹதீஸ்களில் சில இருக்கின்றன. இது, பாரம்பரிய ஞானமரபுகளின் தாக்கத்தால் விளந்தவொன்றாக இருக்கலாம். அல்லது, முஹமதுவே கூட எதோ ஒரு விதமான (மேலே சொன்ன சூஃபிக்களில் மூன்றாவது வகை) சூஃபி வழிமுறையை பின்பற்றியிருக்கலாம் (உதாரணம்: தனியாக குகையில் நாள் கணக்கில் அமர்ந்து தியானிப்பது). ஏனெனில், எதுவுமே இல்லாமல் முஹமது ஒரு கூட்டத்தை தன் வசம் சேர்த்திருக்க வாய்ப்பில்லை.

  ***

  இந்த விஷயங்களில் எது உண்மையாக இருந்தாலும், அது இந்து ஞானமரபோடு எவ்வகையிலும் ஒப்பிடக் கூடியது அல்ல. மிகவும் தாழ்வான பாரம்பரியம், குழப்பமான ஆன்மீக ஞானம், தவறான (ஆபிரகாமிய) அடித்தளத்தை (ஓரளவாவது) ஏற்றல் போன்ற காரணங்களினால், சூஃபியிஸத்தை நிராகரிப்பதே நல்லது என்பது என் அபிப்ராயம். அவ்வப்போது சூஃபிக்களுல் சிலரால் கவரப்பட்டு தடுமாறும் நண்பர்களுக்கு நான் இதையே சொல்வது வழக்கம்.

 29. என்னத்த சொல்ல says:

  ஆசாத்துக்கும் உங்களுக்கும் நடக்கும் உரையாடல்களைப்பார்த்தால் சூபியிசம் உரையாடல்போலவே தெரியவில்லையே?? கழுத்துல கத்திய வைக்கிறதுக்கு அடிபோடுராப்ல இல்ல தெரியுது.. எதுக்கும் உஷாரா இருங்க.. நன்றி மட்டுமே சொல்லிக்கிட்டே இருங்க.. அவரும் ஓஞ்சு போய் நன்றின்னு சொல்றவரை …

 30. Anonymous says:

  1.//பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் *அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும்*…..இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே//

  2.//நான் ஏற்கெனவே சொன்னதுதான் பதில். சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படச் சொல்லும் எந்தவொரு சித்தாந்தத்தையும் – ஹிந்து, சாதி, கம்யூனிஸ, இஸ்லாமிய, பௌத்த, இத்யாதி – *அப்படியே ஏற்பவர் யாருமே அறிவார்ந்த முட்டாள்களே*.//

  பிரசன்னா,

  பதிவில் எழுதியபோது ‘அறிவார்ந்த முடாள்களாகவே செயல்படமுடியும்'(1) என்று தொனித்த கருத்து இப்போது ‘அப்படியே ஏற்பவர் யாருமே அறிவார்ந்த முட்டாள்களே'(2) என்று மாறியிருக்கிறத்து.

  இந்த இரண்டு கருத்துகளுமே ஒன்றுதான் என்று நீங்கள் சொல்லலாம். வெவ்வேறென்று எனக்குத் தோன்றுகிறது.

  *அப்படியே* என்னும் பதத்தைக் கூறுபோட்டு உங்கள் தேவைக்கேற்ப நீங்களும் எனது தேவைக்கேற்ப நானும் பொருள்பிரித்துக்கொண்டே போகலாம்.

  பதிவில் ஒன்றும், விளக்கம் கேட்டால் பதிலில் மற்றொன்றுமாக எழுதும் உங்கள் எழுத்துகளின் உள்அர்த்தத்தைப் புரிந்துகொள்ள சல்லடை மட்டுமல்ல வடிகட்டியும் தயாரிக்கவேண்டும் எனப் புரிந்துகொண்டேன்.

  அன்புடன்
  ஆசாத்

 31. நாகூர் ரூமி says:

  அன்பு ஹரன்பிரசன்னா,

  சூஃபி வழி பற்றிய உங்கள் பதிவையும், அதுபற்றிய நிறைய எதிர்வினைகளையும் படித்தேன். உங்கள் பதிவை ரொம்ப ரசித்தேன். குறிப்பாக உங்கள் கிண்டல். இப்படி எழுத வருவதற்கு என் வாழ்த்துக்கள்.

  நிற்க, சூஃபி வழி நூலை நீங்கள், அல்லது யாரும், ஒரு முறை படித்துவிட்டால், நிறைய கேள்விகளுக்கு அதிலேயே பதில் கிடைத்துவிடும். நான் புரிந்துகொண்டதை,அதில் கொடுத்துள்ளேன் என்பது உண்மை. ஆண்டாள் சூஃபி என்பதை ரூமி ஏற்றுக்கொள்வாரா என்பது போன்ற கேள்விகள் எனக்குத் தேவையில்லாதவை. நான் ஏற்றுக்கொண்டால் என்ன கொள்ளாவிட்டால் என்ன? நான் கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் மட்டுமல்ல, எங்கேயுமே மாலன் சொன்னது போல ‘குறை’யை நிவர்த்தி செய்யவே முடியாது. ஏனெனில், எனக்குத் தெரிந்த வரையில், சூஃபித்துவம் பேசித்தீராது. அதைப்பற்றி எழுதலாம். அது சாத்தியம். அப்போது ஒரு அவசரமின்மை இருக்கும். அது நிறைய பேசும். வாய் வழியாக பதில் சொல்லி அதைப் புரிய வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சூஃபியாக வாழலாம். ஆனால் சூஃபித்துவம் பற்றி எடுத்துச் சொல்லி, விளக்கி, யாரையும் ‘கன்வின்ஸ்’ பண்ண முடியாது. ஏனெனில் அப்படிக் ‘கன்வின்ஸ்’ செய்துவிட்டால், அது சூஃபித்துவமாகவே இருக்காது.

  எனினும் சில தகவல்கள். சூஃபித்துவத்துக்கு அடிப்படை இஸ்லாம்தான். சூஃபிகள் 99 சதவீதம் முஸ்லிம்கள்தான். இஸ்லாத்தின் வரையறைகளுக்குள் இருந்துதான் அவர்கள் தன்னை அறியும், அல்லது இறைவனை நண்பனாக்கிக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். தன்னை அறிதல் என்பது இஸ்லாத்துக்கு சொந்தமானதல்லவே! அதனால், சூஃபித்துவம் என்பது இஸ்லாத்துக்கு முந்தியும், இஸ்லாத்துக்கு உள்ளும், இஸ்லாத்துக்கு வெளியிலும் இருப்பது என்று சொல்ல முடிகிறது.

  ஒரு பரமஹம்சர் சூஃபியாக மட்டுமே இருந்தார் என்று சொல்வது தவறாகிவிடும். ஆனால் ஒரு சூஃபிக்குரிய தன்மைகள் அவரிடம் நிறைய இருந்தன. இருக்கத்தானே செய்யும்? நான் ஆண்டாள் பற்றியும், கபீர் பற்றியும் தனியே இரண்டு அத்தியாயங்கள் எழுத எண்ணி இருந்தேன். காலம் காரணமாக என்னால் அது முடியவில்லை. சூஃபி ராபியா பஸ்ரி ஈராக்கில் வாழ்ந்த ஒரு ஆண்டாள் என்றே சொல்லலாம். நூலில் அவரைப் பற்றி சூஃபிபி பெண்கள் என்ற அத்தியாயத்தில் விபரமாகச் சொல்லி இருக்கிறேன்.

  எல்லா மதங்களின் இதயமாக தன்னை அறிதல், அல்லது இறைவனை அடைதல் இருந்தாலும், ‘சூஃபி வழி: இஸ்லாத்தின் இதயம்’ என்றுதான் நான் தலைப்பு கொடுத்திருந்தேன். ஆனால் அது சூஃபித்துவத்தை இஸ்லாத்துக்குள் சிறைப்படுத்திவிடும் என்று நினைத்து பாரா தலைப்பை பொதுவாக்கிவிட்டார். அந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடுதான்.

  நிற்க, சூஃபிகள், அதாவது முஸ்லிம் சூஃபிகள் யாருமே உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. வெங்கடேஷின் கேள்விக்கு நான் அப்படித்தான் பதில் சொன்னேன். உடனே சிலர் ஏற்கிறார்கள் என்று கூறவில்லை. உடனே நான் பரமஹம்சரிடம் அவர் சிஷ்யர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலைச் சொன்னேன். பரமஹம்சர் முஸ்லிம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. எனவே அவர் போன்ற சூஃபிகள் உருவ வழிபாட்டை ஆதரித்து பேசியதை நான் எடுத்துச் சொன்னதை நீங்கள் அப்படிப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் போல. நான் பரமஹம்சரை சூஃபி என்று சொல்லும்போது அவரை மதம் என்பதற்குள் வைத்துப் பேசவில்லை. தன்மையின், அந்தஸ்தின் அடிப்படையிலேயே பேசுகிறேன். ஒரு மதத்துக்கு வெளியே போய்தான் ஒருவர் சூஃபியாக வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்குள்ளேயே, ஜோராக ஆகலாம். நான் அதை வெகுவாக ஆதரிக்கிறேன். சூஃபிகள் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை. அவர்கள் இஸ்லாத்தை ஆழமாகப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் புரிந்து கொண்டது மற்ற்வர்களுக்குப் புரியாததால் பிரச்சனைகள் எழுந்தன. அவர்கள் புரட்சிக்காரர்களாகத் தோன்றினார்கள். அவ்வளவுதான்.

  திருக்குர்’ஆனிலிருந்தும் நபிமொழிகளில் இருந்தும் ஏராளமான ஆதாரங்களை நான் சூஃபி வழிக்காக எடுத்துக் காட்டி இருக்கிறேன். என்றாலும் இஸ்லாத்தின் வட்டத்துக்குள் சூஃபித்துவத்துக்கு நிறைய எதிர்ப்பிருக்கிறது என்பது உண்மை.

  ஏதோ, தோன்றியது. சொல்ல வேண்டுமென்று. நன்றி.

  அன்புடன்
  நாகூர் ரூமி

 32. ஹரன்பிரசன்னா says:

  அன்புள்ள ரூமி, உங்கள் சிறந்த பதிலுக்கு என் நன்றி.

 33. Anonymous says:

  //எனினும் சில தகவல்கள். சூஃபித்துவத்துக்கு அடிப்படை இஸ்லாம்தான். சூஃபிகள் 99 சதவீதம் முஸ்லிம்கள்தான். இஸ்லாத்தின் வரையறைகளுக்குள் இருந்துதான் அவர்கள் தன்னை அறியும், அல்லது இறைவனை நண்பனாக்கிக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். தன்னை அறிதல் என்பது இஸ்லாத்துக்கு சொந்தமானதல்லவே! அதனால், சூஃபித்துவம் என்பது இஸ்லாத்துக்கு முந்தியும், இஸ்லாத்துக்கு உள்ளும், இஸ்லாத்துக்கு வெளியிலும் இருப்பது என்று சொல்ல முடிகிறது.//

  ஒன்று மட்டும் புரிகிறது. நண்பர் ரூமி நிறையவே குழம்பிப் போயிருக்கிறார்.

  *”இஸ்லாத்துக்கு முந்தியும்”* என்ற வார்த்தையே இஸ்லாத்துக்கு முரணானது. ஏனெனில், இஸ்லாம் ஆதிகாலம் தொட்டு இருப்பது (எப்போது மனிதன் தோன்றினானோ அப்போதிலிருந்தே) என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று.

  *”இறைவனை நண்பனாக்கிக் கொள்ளும்”* – இது blasphemous statement ஆக இஸ்லாத்தின் அடிப்படை புரிந்த எந்தவொரு இஸ்லாமியராலும் பார்க்கப்படும். இறைவன் என்பவன் எஜமானன். அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவன் மனிதன் என்பது இஸ்லாம் சொல்லும் மிக முக்கியமானதொரு விஷயம். இதில் தனக்கு ‘இணையான’ நண்பனாக இறைவனை பார்ப்பது – மிகப் பெரிய குற்றம், இஸ்லாத்தின் பார்வையில்.

  *”தன்னை அறிதல் என்பது இஸ்லாத்துக்கு சொந்தமானதல்லவே! “* – இதுவும் இஸ்லாத்துக்கு முரணான ஸ்டேட்மண்ட். இஸ்லாத்தின் வட்டத்துக்குள் இல்லாத எதுவும் (அதாவது மனிதர்கள், ஜின்கள்) சைத்தானின் ஆளுமைக்குட்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படையோடு எழும் சித்தாந்தம். எனவே, ஷைத்தானின் ஆளுமைக்குட்பட்ட எவரும் தன்னை அறிய, தன்னிலையில் இருக்க வாய்ப்பே இல்லை.

  எப்படியோ, நண்பரின் தலைக்கு ‘தூய இஸ்லாமியர்களிடமிருந்து’ ஃபத்வா வராமல் இருக்க பிரார்த்திப்போமாக!

  (எனது பெயரில் எழுதினால் அது உடனடியாக இறுகிய மனதுடன் பார்க்கப்படும், நமது இஸ்லாமிய சகோதரர்களால் – காழ்ப்பில் எழுந்த வாதம் என்று ரூமியால் சந்தேகிக்கப்படும் என்பதால் அனானியாக இதைப் பதிக்கிறேன்).

 34. Udayakumar Sree says:

  புத்தகங்கள், சொற்பொழிவு, பட்டிமன்றம் மற்றும் கலந்துரையாடல் போன்ற எல்லாவற்றிலும் அவரவர் தான் கண்ட பேருண்மையின் ஒருபகுதியை மட்டுமே கூற முடியும். கடவுளையோ, இயற்கையையோ அல்லது கடவுள் அற்ற தன்மையையோ முழுமையாக விளக்குவது ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மனிதனால் முடியாத காரியம்.

  கேள்வி கேட்பவர்கள் இரண்டு ரகம். ஒன்று, தன் அறியாமையை போக்கிக்கொள்ள, மற்றொன்று, தான் அறிவாளித்தனமாக கேள்வி கேட்க முடியும் என்று பிறரை பேச வைக்க. பின்னவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கோட்பாடு.

  இரண்டு ரகத்தினருக்கும் ஒரு வேண்டுகோள். கேள்வி கேட்கும் முன் அதே கேள்வியை தனக்கு தானே கேட்டுக்கொண்டு, அதில் சிந்தனை தேரை மிக நேர்த்தியாக ஓட விட்டு, விடை தெரியவில்லை என்றால் பிறரிடம் கேட்பது பண்புள்ள பழக்கம்.

 35. கானகம் says:

  ஒரு நெகிழ்ந்த மன நிலையில் ரூமி அவர்கள் எழுதியுள்ள பதிலைப்படித்தேன். அதற்கு இன்னொரு அனானியிடம் இருந்து வந்திருக்கும் கடிதம் ஹெச் ரசூலுக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் வந்துவிடக்கூடாது என்ற கவலையுடன் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த ஆசாத் அனானியின் எண்ணங்களை மெய்ப்பிப்பது போலவே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

  நல்ல விவாதங்களுடனும், அருமையான பதில்களுடன் தொடர்கிறது உங்களது இந்தப்பதிவு.

  வாழ்த்துக்கள்.

  ஜெயக்குமார்

 36. Anonymous says:

  அன்புள்ள ரூமி,
  பொறுமையான பதிலுக்கு நன்றி. வெறும் மூளையிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து வரும் குரல் அதற்கே உரிய முத்திரையை காட்டுகிறது. நன்றி.

  அநீ

 37. நாகூர் ரூமி says:

  நன்றி பிரசன்னா. அனானிமஸ் என்ற பெயரில் இரண்டு பேர் எழுதி இருக்கிறார்கள். ஒருவர் எனக்கு ஃபத்வா வந்துவிடுமோ என்று அஞ்சுவதுபோல அதற்கு ஆசைப்பட்டிருக்கிறார். இன்னொருவர் என்னைப் பாராட்டி இருக்கிறார்.

  இறைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல் இணைவைத்தல் என்று சொல்வது ஒருவிதமான புரிந்து கொள்ளல். அப்படி இல்லை என்பது என் புரிந்து கொள்ளல். என்னுடைய கருத்தில் இறைவனுக்கு யாராலும் இணை வைக்கவே முடியாது.

  இது போன்ற கேள்விகளுக்கு நபிகள் நாயகத்தின் வாழ்விலுல், என் நூலிலும் பதில்கள் உள்ளன. ஆனால் கேள்விமட்டுமே கேட்கப் பழகிக் கொண்டவர்களுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. தூங்குவதுபோல் நடிப்பவர்களை நாம் எழுப்ப முடியுமா என்ன?

  அன்புடன்
  ரூமி

 38. ஓகை says:

  //மத்தபடி இஸ்லாமுக்கும், சூஃபியிஸத்திற்கும் சம்பந்தம் உண்டு (சில கோட்பாடுகளை மறுத்து அது தோன்றியிருந்தாலும் கூட!) என்பது straight forward-ஆன விசயம் தானே, எதற்கு ‘நிறுவ’ வேண்டும் ????

  எ.அ.பாலா//

  அதானே!

  சுரேஷ் கண்ணன் ஒரு பதட்ட பதார்த்தத்தை உருவாக்கி அதை பிரசனாவின் எழுத்தில் உட்செலுத்தி பிறகு அவரே அதைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆஹா!

 39. ஓகை says:

  //பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும். அறிவார்ந்த முட்டாள்கள் தங்கள் முட்டாள்தன்மையை கைவிட்டால், அவர்கள் சட்டத்தை மீறவேண்டியிருக்கும். அங்கே தார்மீகம் முன்னுக்கு வரும். அறிவார்ந்த முட்டாள்கள் அப்படியே தொடர்ந்தால் அவர்கள் சட்டத்திற்குள்ளே வாழமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே.//

  ஆசாத் அவர்களின் கேள்விகள் என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

  அறிவார்ந்த முட்டாள்கள் என்கிற சொற்றொடர் சர்சையை கிளப்பியிருக்கிறது. மத ஏற்பாளர்களை பகுத்தறிவாளர்கள் நேரடியாக முட்டாள்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களுடைய கருத்தில்ருந்து விலகி இவர் பகுத்தறிவாளர்களின் சுஃபியை போன்று இக்கருத்தைக் கூறியிருக்கிறார்.
  சுஃபியிசத்துடன் தொடர்புடைய இப்பதிவில் மேற்கொண்ட கருத்தை சுஃபியிசத்துடன் பொருத்திப் பார்ப்பதே முறை. சுஃபியிசம் தோன்றுவதற்கான அடிப்படை காரணியாக மதச்சட்டங்களுக்கு ஆட்பட்டிருப்பதிலிருந்து சற்று விலகுதலைக் கொள்ளலாம். இந்த விலகுதல் ‘அறிவார்ந்த முட்டாளகள்’ என்பதில் இருக்கும் அறிவார்ந்தமையைச் சார்ந்து முட்டள்தனங்களிலிருந்து விலகுதலாகக் கொள்ளலாம். பிரசன்னாவின் மேற்கண்ட கூற்றிலிருந்து நான் புரிந்துகொள்வது இதுதான். இக்கூற்று பலவித புரிதல்களை ஏற்படுத்தவல்லது. ஆசாத் தன் புரிதலை விரிவாக விளக்காமல் அந்தச் சொற்களின் மேல் கேள்விகளைக் கேட்கிறார்.
  பிரசன்னாவின் “அப்படியே ஏற்றுக்கொள்வது…” என்கிற சொற்றொடர் சேர்ந்த விளக்கத்தை இந்த சொற்றொடர் சேர்ந்ததற்காகவே ஏற்க மறுக்கிறார். மேற்கொளும் அதன் விளக்கமும் வேறு வேறு என்கிறார். இந்த நிலைப்பாடு ஆசாத் அவர்களிடமிருந்தே அவருடைய புரிதல் பற்றிய விளக்கத்தைக் கோருகிறது.

  தன் நிலையை விளக்காமல் எதிரியை நிற்கவைத்துக் கேள்விகேட்பது ஒரு வழக்குறைஞரின் செயல்பாட்டை ஒத்திருக்கிறது. வழக்குறைஞர்களின் செயல்பாடு நோக்கம் சார்ந்தது. எல்லா மதங்களுக்கும் பொதுவானதாக சொல்லப்பட்ட கருத்தை ஒரு மதத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்கும் போது அது அந்த மதத்துக்கு எதிரான விமர்சனமாக தோற்றமளிக்கலாம். இந்துமத சட்டங்களை ஏற்பவர்களை அறிவார்ந்த முட்டாள்கள் என்று குறிப்பாக பிரசன்னா சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை.

  நடராஜன்

 40. Anonymous says:

  //தூங்குவதுபோல் நடிப்பவர்களை நாம் எழுப்ப முடியுமா என்ன?//

  This is unwarranted attack. Hmm… at the slightest provocation sufis turn jihadis!

 41. enRenRum-anbudan.BALA says:

  நான் ஒரு அறிவார்ந்த முட்டாள் என்பதை இந்த அறிவார்ந்த மன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். 😉

  //அன்புள்ள ரூமி, உங்கள் சிறந்த பதிலுக்கு என் நன்றி.
  //
  ஹ.பி யை வழிமொழிகிறேன் !!!

 42. Anjanasudhan says:

  The following article will be an eye-opener for all.

  Thanks & Regards

  A.Sudhan

  Unraveling the Sufis of India: Villains in the Guise of Saints

  by Ibrahim Lone
  25 Dec, 2008

  http://www.islam-watch.org/Ibrahim.Lone/Sufis-of-India-Villains-in-the-Guise-of-Saints.htm

  India Has always was a land of diversity. Secularism and peaceful
  co-existence is not a concept in this land, it is a way of life. The
  credit goes to the understanding of our great Vedic ancestors (I count
  Hinduism as practiced today as not Vedic in spirit or essence) who were
  men of great letters and a mighty spirit. Christianity reached the
  Indian shores much before it reached Europe. There are Christians, know
  as Syrian Christians, whose links with the Christian doctrine far
  outdates that of any other country outside the Middle East. Jews,
  Zoroastrians, Bahai's all have found home and safe refuge in this great
  country.

  However the only exception to these immigrants was the Muslim, who did
  not come here to adapt himself to the local culture and live in peace
  and harmony. He had only one aim, which was to subdue the native
  populations and wave the flag through the length and breadth of this
  once great Nation which extended from Dhaka in the East to Khyber in the
  west.

  Islam changed smeared the face of this country with a paint so
  horrific that the colours still refuse to wither out. While there is no
  denying the fact that Islam was spread in India mostly by the sword,
  there is another aspect of Islamic proselytization, which is ignored.
  This face is that of Sufism and the Sufis.

  Most people in the India have been mislead into believing that the
  Sufis mostly by their own soft-headed scholars, to cherish the fond
  belief that the Sufis were spiritual seekers, and that unlike the
  Mullahs, they loved Hindu religious lore and liked their Hindu
  neighbors. The Chistiyya Sufis in particular have name chosen for such
  fulsome praise. The orthodox among the Muslims protest that the Sufis
  are being slandered. But the gullible Hindus remain convinced that they
  themselves know better. Professor Aziz Ahmad, a renowned scholar of
  Islam in India, clinched this matter in the following words: "In Indian
  sufism anti-Hindu polemics started with Muinal-din Chisti. Early sufis
  in Punjab and early Chistis devoted themselves to the task of conversion
  on a large scale. Missionary activity slowed down under Nizam al-din
  Auliya, not because of any new concept of eclecticism, but because he
  held that the Hindus were generally excluded from grace and could not be
  easily converted to Islam unless they had the opportunity to be in the
  company of the Muslim saints for considerable time." In other words the
  native Hindus were as a nation, not fitting to become Muslims. This is
  the sort of hatred that the Sufis had for the Hindus.

  Of course, the Auliya who lived in a sprawling mansion and received
  rich gifts out of plunder was convinced that he himself was such a
  Muslim saint. His temper and teachings can be known easily from the
  writings of Amir Khusru, the poet, and Ziauddin Barani, the historian.
  Both of them were leading disciples of the Auliya. Both of them express
  intense hatred for Hindus, and regret that the Hanafi school of Islamic
  Law had come in the way of wiping out the "curse of infidelity"
  completely from the face Hindustan (India).
  A similar Sufi saint who died a mere 79 years before Waliullah's birth,
  was Ahmad Sirhindi (1564-1624). He was always foaming at the mouth
  against Akbar's policy of peace with the Hindus. He proclaimed himself
  the Mujaddid-i-alf-i-sdni, (renovator of the second millennium of
  Islam). Besides writing several books, he addressed many letters to
  several powerful courtiers in the reign of Akbar and Jahangir. His
  Maktiibctt-i-Imdm Rabbant have been collected and published in three
  volumes. According to Professor S.A.A. Rizvi, "Sharia can be fostered
  through the sword' was the slogan he raised for his contemporaries.

  Let us see a few specimens of his writings in which he expressed the
  love for the Indian infidels: "The honour of Islam lies in insulting
  kufr and kafirs. One who respects the kafirs dishonours the Muslims. The
  real purpose of levying jiziya on them is to humiliate them to such an
  extent that they may not be able to dress well and to live in grandeur.
  They should constantly remain terrified and trembling. It is intended to
  hold them under contempt and to uphold the honour and might of Islam."
  In Letter No. 81, he said: "Cow-sacrifice in India is the noblest of
  Islamic practices. The kafirs may probably agree to pay jiziya but they
  shall never concede to cow-sacrifice." After Guru Mun Deva had been
  tortured and done to death by Jahangir, he wrote in letter No. 193 that
  "the execution of the accursed kafir of Gobindwal is an important
  achievement and is the cause of the great defeat of the Hindus."

  Sirhindi ranks with Shah Waliullah as one of the topmost sufis and
  theologians of Islam. Referring to his role, Maulana Abul Kalam Azad
  (Former Preident of Post Colonial India) has written in his Tazkirah
  that "but for these letters Muslim nobles would not have stood by Islam
  and but for the efforts of Shaikh Ahmad, Akbar's heterodoxy would have
  superseded Islam in India."'Later on, when K.A. Nizami published a
  collection of Shah Walilullah's letters addressed to various Muslim
  notables, including Ahmad Shah Abdali, he dedicated it to Maulana Azad.
  The Maulana wrote back, "I am extremely happy that you have earned the
  merit of publishing these letters. I pray from the core of my heart that
  Allah may bless you with the felicity of publishing many books of a
  similar kind." That should give us a measure not only of 'Muslim
  Revivalism' but also of many Maulanas who masqueraded as ardent
  nationalists in order to fight the battle for Islam from within the
  Indian National Congress.

  It is strange that most of the present-day Muslim scholars refuse to
  cite the actual statements made about Hindus and Hinduism by their
  heroes such as Ahmad Sirhindi and Shah Waliullah while praising them to
  the skies as saviours of Islam in India. Maulana Abul Kalam Azad and
  Allama lqbal were shining examples of this intriguing silence. The late
  Professor Ishtiaq Husain Qureshi published two significant books on the
  history of Islam in India – Ulema in Politics (1972), and The Muslim
  Community of the Indo-Pakistan Subcontinent (1977). He has devoted many
  pages to Ahmad Sirhindi and Shah Waliullah in both the books. But he has
  not cited a single sentence written or spoken by the 'great sufis' on
  how they looked at Hindus and Hinduism. I have no doubt that Nizami has
  also suppressed those letters of Shah Waliullah in which the latter has
  poured out his heart about kufr and the kafirs. It is only Professor
  S.A.A Rizvi who has taken us into the secret chambers so to say.
  Professor Rizvi is a Shia. And the venom which characters like Ahmad
  Sirhindi have poured on Hindus and Hinduism is quite comparable to that
  which they poured out on Shi'as and Shi'ism.

  Professor Rizvi has cited select passages from the original Persian of
  Ahmad Sirhindi's letters. It is only recently that the letters have
  become available in Urdu translation. Ahmad Sirhindi wrote to many
  Muslim notables in the reign of Akbar and Jahangir. Some of these
  letters were in strong protest against Akbar's liberal, equitable
  policies vis-à-vis Hindus. One of Sirhindi's patrons was Abdul Rahim
  Khan-i-Khanan whom many Hindus cherish as a Hindi poet and a devotee of
  Krishna. It is unfortunate that quite a few recipients of these letters
  cannot be identified straight away because they are addressed by their
  titles and not by their names. As the letters are not dated, it is
  difficult to say whether the bearer of a particular title belonged to
  the reign of Akbar or Jahangir. The same title was given to several
  persons in succession. I reproduce below some passages from these
  significant letters in order to show how the mind of this great sufi
  functioned. He was the leading light of the Naqshbandi sufi silsila, and
  the foremost disciple of Khwaja Baqi Billah who brought this silsila to
  India in the reign of Akbar. I may add that the Prophet appeared quite
  frequently to both Baqi Billah and Ahmad Sirhindi in their dreams or
  states of trance, and gave guidance to them.

  Some of his statements translated from the original Urdu script have
  been reproduced below:

  "It is said that the Sharia prospers under the "shadow of the sword"
  (al-Shara' tahat al-sait). And the glory of the holy Sharia depends on
  the kings of Islam."

  "Islam and infidelity (kufr) contradict one another. To establish the
  one means eradicating the other, the coming together of these
  contradictories being impossible. Therefore, Allah has commanded his
  Prophet to wage war (jihad) against the infidels, and be harsh with
  them. The glory is Islam consists in the humiliation and degradation of
  infidels and infidelity. He, who honours the infidels, insults Islam.
  Honouring (the infidels) does not mean that they are accorded dignity,
  and made to sit in high places. It means allowing them to be in our
  company, to sit with them, and talk to them. They should be kept away
  like dogs. If there is some worldly purpose or work which depends upon
  them, and cannot be served without their help, they may be contacted
  while keeping in mind all the time that they are not worthy of respect.
  The best course according to Islam is that they should not be contacted
  even for worldly purposes. Allah has proclaimed in his Holy Word (Quran)
  that they are his and his Prophet's enemies. And mixing with these
  enemies of Allah and his Prophet or showing affection for them, is one
  of the greatest crimes."

  "The abolition of jizyah in Hindustan is a result of friendship, which
  (Hindus) have acquired with the rulers of this land… What right had
  the rulers to stop exacting jizyah? Allah himself has commended
  imposition of jizyah for their (infidels) humiliation and degradation.
  What is required is their disgrace, and the prestige and power of
  Muslims. The slaughter of non-Muslims means gain for Islam. To consult
  them (the kafirs) and then act according to their advice means honouring
  the enemies (of Islam), which is strictly forbidden."

  "The prayer (goodwill) of these enemies of Islam is false and
  fruitless. It should never be called for because it can only add to
  their numbers. If the infidels pray, they will surely seek the
  intercession of their idols, which is taking things too far. A wise man
  has said that unless you become a dewanah (crazy) you cannot attain
  Islam. The state of this mania means going beyond considerations of
  profit and loss. Whatever one gains in the service of Islam should
  suffice…"

  "Ram and Krishan whom Hindus worship are insignificant creatures, and
  have been begotten by their parents… Ram could not protect his wife
  whom Ravan took away by force. How can he help others? It is thousands
  of times shameful that some people should think of Ram and Krishan as
  rulers of all the worlds. To think that Ram and Rahman are the same, is
  extremely foolish. The creator and the creature can never be one… The
  controller of the Cosmos was never called Ram and Krishan before, the
  latter were born. What has happened after their birth that they have
  come to be equated with Allah, and the worship of Ram and Krishan is
  described as the worship of Allah? May Allah save us!"

  "Our prophets who number one hundred and twenty four thousand have
  encouraged the created ones to worship the Creator. The gods of the
  Hindus (on the other hand) have encouraged the people to worship them
  (the gods) instead. They are themselves misguided, and are leading
  others astray. See, how the (two) ways are different!"

  "Before that kafir (Guru Arjun Dev) was executed, this recluse
  (meaning himself) had seen in a dream that the reigning king had smashed
  the skull of idolatry. Indeed, he was a great idolater, and the leader
  of the idolaters, and the chief of unbelievers. May Allah blast him! The
  Holy Prophet who is the ruler of religion as well as the world, has
  cursed the idolaters as follows in some of his prayers – "O Allah,
  demean their society, create divisions in their ranks, destroy their
  homes, and get at them like the mighty one."

  "It is required by religion (Islam) that jihad should be waged against
  the unbelievers, and that they should be dealt with harshly. It is
  obligatory on Muslims to acquaint the king of Islam with the evil
  customs of false religions. Maybe the king has no knowledge of these
  evil customs. Some Ulama of Islam should come forward, and proclaim the
  evils present in their (unbelievers') ways… It will be no excuse or,
  the Day of Judgment that they did not proclaim the tenets of the Sharia
  because they were not called upon (to do so)."

  "Therefore, it is necessary that infidelity should be cursed in order
  to serve the faith (Islam). Cursing unbelief in the heart is the lesser
  way. The greater way is to curse it in the heart as well as with the
  body. In short, cursing means to nourish enmity towards enemies of the
  true faith, whether that enmity is harboured in the heart when there is
  fear of injury from them (infidels), or it is harboured in the heart as
  well as served with the body when there is no fear of injury from them.
  In the opinion of this recluse, there is no greater way to obtain the
  blessings of Allah than to curse the enemies of the faith (be impatient
  with them). For Allah himself harbours enmity towards the infidels and
  infidelity…"

  "Once I went to visit a sick man who was close to death. When I
  meditated on him, I saw that his heart was layered with darkness. I
  intended to remove those darkness. But he was not yet ready for it…
  When I meditated more deeply, I discovered that that darkness had
  gathered due to his friendship with the infidels. They could not be
  dispersed easily. He had to suffer torments of hell before he could get
  purged of them."

  "Every person cherishes some longing in his heart. The only longing
  which this recluse (meaning himself) cherishes is that the enemies of
  Allah and his Prophet should be roughed up. The accursed ones should be
  humiliated, and their false gods disgraced and defiled. I know that
  Allah likes and loves no other act more than this. That is why I have
  been encouraging you again and again to act in this way. Now that you
  have yourself arrived at that place, and have been appointed to defile
  and insult that dirty spot and its inhabitants, I feel grateful for this
  grace (from Allah). There are many who go to this place for pilgrimage.
  Allah in his kindness has not inflicted this punishment on us. After
  giving thanks to Allah, you should do your best to ruin that place and
  their false gods … whether the idols are carved or uncarved. Let us
  hope that you will not act slow. Physical weakness and severity of the
  cold weather, comes in my way. Otherwise, I would have presented myself,
  and helped you in doing the job. I would have liked to participate in
  the ceremony and mutilate the stones."

  This is short history of the love that Sufis has for the native Indians.
  With the advent of Wahabism in India more and more Muslims are
  abandoning the practice of going to the tombs of these Sufis and
  offering Fatiha to them. However the funding to these shrines continues
  as Hindus visit these tombs. In fact many of these tombs in India get
  more Hindu visitors than Muslim visitors. Needless to say large amounts
  of money are dolled out by the gullible non believers at these tombs.
  What exactly this money goes on to fund is anybody's guess. However all
  I can say here is that : Viva Hindus keep it up!

 43. ஜடாயு says:

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பிரசன்னா. ‘எல்லாமே சூஃபி’ போன்ற குழப்பவாத ஜல்லிகளை அதே பாணியில் நக்கல் அடித்திருப்பது அருமை.

  நேசகுமார் இங்கே சொல்லியிருப்பது தான் மிகத் தெளிவாக சூஃபியிசம் பற்றி விளக்குகிறது என்று நினைக்கிறேன்.

  // அது இந்து ஞானமரபோடு எவ்வகையிலும் ஒப்பிடக் கூடியது அல்ல. மிகவும் தாழ்வான பாரம்பரியம், குழப்பமான ஆன்மீக ஞானம், தவறான (ஆபிரகாமிய) அடித்தளத்தை (ஓரளவாவது) ஏற்றல் போன்ற காரணங்களினால், சூஃபியிஸத்தை நிராகரிப்பதே நல்லது //

  அந்தப் புத்தகம் வாங்குபவர்கள் அனைவருக்கும் இந்த மறுமொழியைப் பின் இணைப்பாகக் கொடுத்தால் நல்லது. இல்லையென்றால் எதையும் நம்பும் இந்து இளிச்சவாயர்கள் அடுத்த மார்கழியில் ஆண்டாள் உருஸ் நடத்த ஆரம்பிப்பது போன்ற அபாயங்கள் கூட நிகழலாம்!

 44. nagoreismail says:

  “இஸ்லாமுக்கும் சூஃபியிசத்துக்கும் தொடர்பில்லை என்றார் நாகூர் ரூமி”

  – மேலே கூறப்பட்ட இதே கருத்தை பா.ராகவன் அவர்களது உரையின் ஒலிப்பதிவிலும் கேட்க முடிந்தது.

  இது தவறு, சூஃபியிசத்துக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பு உண்டு, சூஃபியிசத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் தான் தொடர்பு இல்லாமல் போய் விட்டது.

  “அவர் அதையே மீண்டும் மீண்டும் சொன்னதால் அவர் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் எறியப்பட்டார் என்றும் சொன்னார் நாகூர் ரூமி”

  உதாரணமாக, நாகூர் ரூமி அவர்கள் “கற்காலம்” என்ற ஒரு அற்புதமான கட்டுரையை எழுதுகிறார்கள். இந்த கட்டுரைக்கு ஆதாரமாக குரான் ஷரீபையும் ஹதீஸையுமே காட்டி விளக்கி இருக்கிறார்கள்.

  ஆனால் இதை பல (கிட்டதட்ட அனைவரும்) இஸ்லாமிய அறிஞர்கள் (என அறியப்படுபவர்கள்) ஏற்க மறுத்து விட்டனர். அதற்காக இஸ்லாத்திற்கு மாறுபட்ட ஒன்றை ரூமி அவர்கள் கூறி விட்டார்கள் என்று கொள்ளலாகாது அல்லவா, மார்க்க அறிஞர்கள் ரூமி அவர்களின் research based அணுகு முறையை நிராகரித்து விட்டார்கள் என்பது தான் உண்மை.

  இத்தகைய அறிஞர்கள் புரிந்து கொள்வது தான் இஸ்லாம் என்றால் இஸ்லாத்திற்கும் சூஃபியிசத்திற்கும் சம்மந்தமில்லை தான்.

 45. nagoreismail says:

  “..சிலை வழிபாட்டை சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்..”

  – நான் சொல்கிறேன் என்று தவறாக கருத வேண்டாம், சூஃபி என அறியப்படும் ஒருவர் ஏதேனும் ஒரு சிலையை வடித்தோ அல்லது ஏற்கனவே கடவுளென வணங்கப்படும் சிலையையோ வணங்கினார் என்றால் அவர் சூஃபியே அல்ல என்பது தான் என் கருத்து.

  நான் சொல்கின்ற சூஃபி இஸ்லாம் வழிகாட்டுகின்ற சூஃபியாக்களை பற்றியது.

  குரான் ஷரீஃபில் மூன்று செய்திகள் பிராதனமாக விளக்கப்பட்டுள்ளது. ஒன்றாக ஏவல் விலக்கல் (ஹலால், ஹராம்)

  இரண்டாவது நபிமார்கள் மற்றும் அறிஞர்களின் வரலாறு.

  மூன்றாவது இறைவனின் தன்மைகள், அழகிய பெயர்கள், குணங்கள் பற்றிய விளக்கம்.

  குரான் ஷரீஃப் ஒரு அற்புதம். இது இறைவனின் பேச்சு என்று முஸ்லீம்களால் ஏற்கப்பட்டுள்ளது. இதில் சில ஏவல் விலக்கலை பற்றி கூறும் போது, ‘நம்பிக்கை கொண்டவர்களே..!” என்று
  ஆரம்பிக்கப்படுகிறது. வேறு சில ஏவல், விலக்கலை கூறும் போது, “மனிதர்களே..!” என்றும் “ஆதமுடைய மக்களே..!” என்றும் ஆரம்பிக்கிறது.

  உதாரணமாக குரான் ஷரீஃபின் 51(அத்தியாயம்):56 (வசனம்) “வமா ஹலக்துல் ஜின்னா வல் இன்சா இல்லா லா யஃபுதூன்” என்று வருகிறது. (அதாவது தமிழ் மொழி பெயர்ப்பாக கொடுக்கப்பட்டுள்ளது இப்படி: இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை),

  மேலே கூறப்பட்ட இந்த வசனத்திலே நாம் கவனிக்க வேண்டியது

  “இன்சா – மனிதர்களையும்..” என்று வருகிறது, முஸ்லீம்கள் என்று வரவில்லை.

  “யஃபுதூன்” என்ற அரபி பதத்திற்கு “வணங்குவதற்கு” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

  வணக்கம் என்றால் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இது தவறு. இது மொழிபெயர்ப்பின் குறை. ஏனெனில் தொழுகை என்ற பதத்திற்கு ‘சலாத்’ என்ற வார்த்தை உண்டு.

  மேலே கூறிய இறைவசனத்தில் முஸ்லீம்கள் (முற்றிலும் வழிபட்டவர்கள்), முஃமீன்கள் (நம்பிக்கை கொண்டவர்கள்) என்று வராமல் மனிதர்கள் என்று வருவதுடன் யஃபுதூன் என்ற வார்த்தை அதாவது “அப்து – அடிமை” என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை பிரயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.

  இங்கே குரான் விரிவுரையாளர்களின் சுல்தான் என்று போற்றப்பட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விளக்கம் சிந்திக்க கூடியது, அவர்கள், ‘யஃபுதூன்’ என்ற பதத்திற்கு ‘யஃரிஃபூன்- knowing – அறிதல்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

  ஆகவே நான் சொல்ல வருவது இது தான், குரானிலே முஸ்லீம்கள் மட்டும் செய்யக் கூடியது என்று குண்டு சட்டிக்குள் சுருங்கி விடாமல் மனிதர்களுக்கு மொத்தமாக சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் ஒன்று தான் “அறிதல்”. இத்த்கைய “அறிந்தவர்களை” தான் இஸ்லாமியர்களில் ஒரு சாரார் சூஃபியாக்கள் என்று போற்றுகின்றனர்.
  (எதை ‘அறிதல்’ என்று எழுத போனால் வால்யும் வால்யுமாக புத்தகமே போட வேண்டி வரும்)

  இத்தகைய சூஃபியாக்கள் மனிதர்களில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாக இருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*