தலித்துகளும் பிராமணர்களும்

 

 

தலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ’அந்தணர் வரலாறு’ எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் எழுதியது. இவர் எழுதிய ’அந்தணர் வரலாறு’ தந்த பயம் காரணமாக, இவரது எழுத்துகள் மீது கொஞ்சம் விலகல் இருந்தது. இந்தப் புத்தகம் அந்த விலகலைத் துடைத்துப் போட்டிருக்கிறது.

’தலித்துகளும் பிராமணர்களும்’ புத்தகத்தை ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு தலித் தலைவர்களும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று நூலாசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நிலவும் மனத்தடை காரணமாக இவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ உண்மையில் ஒவ்வொரு (தங்களை அப்படி உணரும்) பிராமணரும் படிக்கவேண்டிய நூல் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொரு (தங்களை பிராமணராகவே உணரும்) பிராமணருக்கு இந்த நூலை வாங்கித் தருவது அவசியம். வாங்கித் தரும்போது மறக்காமல் சொல்லவேண்டியது, ’இந்த நூலைப் படிக்கவேண்டியதன் அவசியம் உங்கள் பிராமணப் பெருமைகளைப் புதுப்பித்துக்கொள்ள அல்ல, மாறாக பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’

கே.சி. லட்ச்மி நாராயணன் பல விஷயங்களில் கவனம் செலுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்துகொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.

’அரிஜன அய்யங்கார்’ என்னும் தன் வரலாற்று நூலை அடிப்படையாக வைத்து ஆலந்தூர் மள்ளன் எழுதிய (உணர்வு-பிரசார!) சிறுகதை இங்கே.

நூல் விவரம்:

 

தலித்துகளும் பிராமணர்களும், ஆசிரியர்: கே.சி.லட்சுமி நாராயணன், Rs. 120,  வெளியீடு: LKM Publications, Old No 15/4, New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017, +(91)-(44)-24361141, 24340599, +(91)-9940682929

இந்நூல் பற்றிய தினமலர் புத்தக அறிமுகம் இங்கே.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்: ஊரும் சேரியும் – சித்தலிங்கய்யா, கவர்மெண்ட் பிராமணன் – அர்விந்த் மாளகத்தி. இவை பற்றிய சிறிய குறிப்புகள் பின்னர். 

 

Share

Facebook comments:


2 comments

 1. poovannan says:

  http://www.rightlivelihood.org/jagannathan.html
  இந்த தலைப்பே புரியவில்லை.இதை போல் தேவர்களும் தலித்துகளும்,வன்னியர்களும் தலித்துகளும் என்று புத்தகங்களும் வருமோ
  தேவர் இன அடக்குமுறைகள் பற்றி பேசினால் ஜகந்நாதன் என்று ஒருவரை காட்டுவார்கள்.நல்லகண்ணு தனக்கு வந்த வாய்ப்பை ராஜாவிற்கு விட்டு கொடுத்தார் என்று ?முற்போக்கு தேவர்கள் வாதம் புரிவார்கள்
  வன்னியர்கள் நடத்தும் அத்துமீறல்கள் பற்றி பேசினால் ராமதாஸ் தான் முதலில் ஒரு தலித்தை முதல்வர் ஆக்குவேன் என்றார்.கட்சிக்கு வந்த முதல் மந்திரி பதவியை தலித்துக்கு கொடுத்தார்.இன்றுவரை பொது செயலாளர் பதவியில் தலித் தான் உள்ளார் என்று உளறுவார்கள்.அதற்கும் இந்த புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம்
  அரசியல் காரணங்களுக்காக,தனிப்பட்ட மனித நேயத்தால் செய்யப்பட்ட உதவிகளுக்கும்,முற்போக்கு முயற்சிகளுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு.சாதிக்கு எதிரான முயற்சி செய்தவர்களை சாதியால் செய்தார்கள் என்று கூறுவது மிகவும் தவறான வாதம் அல்லவா
  பாரதியார் இறந்த போது எத்தனை பேர் இருந்தார்கள்.அவருடைய கருத்துக்களுக்காக அவரை வெறுத்து ஒதுக்கியவர்கள் தான் பிராமணர்கள்.அவர் பிராமணர் அல்ல.அருந்ததி ராய் இந்தியர்.தனி காஷ்மீருக்கு உதவிய இந்தியர்கள் என்று புத்தகம் எழுதி அவரை பார்ரட்டுவதர்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
  பிராமணர் சங்கமோ,வன்னியர் சங்கமோ கலப்பு மனம் நடக்க வேண்டும்,அது நாட்டுக்கு நன்மை,அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆக வேண்டும்,ஊர்,காலனி என்று தனியாக இருக்க கூடாது,ஊரில் உள்ள காலி இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களை குடி வைத்து தமிழகத்தையே சமத்துவபுரம் ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினால் தலித்துக்கு உதவிய பிராமணர்கள்,கள்ளர்கள் என்று புத்தகம் எழுதலாம்,பாராட்டலாம்.இதில் ஜாதி எங்கே வருகிறது
  காந்தியும் ராஜாஜியும் சாதி வேண்டாம் என்று சம்பந்தி ஆகவில்லை.அவர்களுடைய வாரிசுகள் காதலில் வீழ்ந்ததை தடுக்க முயற்சித்து தோற்றவர்கள்.அவர்களை சாதி ஒழிப்பு போராளிகள் என்று கூறுவது சரியா.இப்போது இசுலாமியர்களை தாக்கி எழுதியதால் மிகவும் பேசபடும் சுப்ரமணிய சாமி தன மகளுக்கு இஸ்லாமியரை மனம் முடித்தவர் என்று வாதிடுகிற சிலரை போல் இந்த புத்தகம்,கருத்து உள்ளது.அவர் மகள் காதலில் விழுந்ததால் அவர் மத ஒழிப்பு போராளி ஆகி விடுவாரா.குழந்தைகளை ஹிந்துவாக வளர் என்று மகளுக்கு ட்விட்டரில் எழுதும் அவரை மதங்களை கடந்தவர் என்று கூறுவதற்கும் இந்த புத்தகத்தின் தலைப்பிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.

  http://www.brahmintoday.org/issues/front-001/bt0809.php
  எண்ணெய்,தண்ணீர் படம் போட்டு கலப்பு மனத்தை முழுவீச்சோடு எதிர்க்கிறவன் தான் பிராமணர்.ஜாதி வேண்டாம் என்று சொல்பவர் ஜாதியை இழந்தவர் ஆகி விடுகிறார்.அவரை ஏன் சாதி கூட்டிற்குள் அரசியலுக்காக அடிக்கிறீர்.பீமா ராவ் அம்பேத்கர் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று மகாராஷ்ற்றை மாநில பிராமணர் சங்கம் அவர் ஆசிரியருக்கு உத்தரவு இட்டதா இல்லை செய்வது தவறு என்று கூறியதா.இதற்க்கு விடை கூறினால் இந்த தலைப்பின் அபத்தம் புரியும்

 2. ஹரன் பிரசன்னா says:

  Discussion in Facebook copied here for saving purpose:

  https://www.facebook.com/haranprasanna/posts/274571775891539

  Haran Prasanna பூவண்ணன், நீங்கள் புத்தகத்தை படித்துவிட்டு எழுதுகிறீர்களா அல்லது இந்த விமர்சனத்தை மட்டும் வைத்து எழுதுகிறீர்களா?
  43 minutes ago · Like

  Poovannan Ganapathy விமர்சனத்தை மட்டும் வைத்து .
  41 minutes ago · Like
  Haran Prasanna அரிஜன அய்யங்கார், ஒரு தலித்தை தன் வீட்டில் வளர்ப்பு மகனாவே வளர்க்கிறார். இதனைப் பற்றி அந்த வளர்ப்பு மகனே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதுதான் அரிஜன அய்யங்கார். மதுரை வைத்தியநாத ஐயர், கோவில் நுழைவு போராட்டங்களில் பங்கெடுக்கிறார். தொடர்ந்த…
  See More
  40 minutes ago · Like
  Haran Prasanna பூவண்ணன், நீங்கள் புத்தகம் படித்துவிட்டு எழுதுங்கள். நீங்கள் கோபப்பட, புறக்கணிக்க பல வரிகளும், நீங்கள் ஏற்றுக்கொள்ள பல வரிகளும் அப்புத்தகத்தில் உண்டு. இல்லையென்றால், ஒட்டுமொத்த பிராமணர்களையும் நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் சொல்லிவிடுங்கள், பேசாமல் இருக்கவேண்டியதுதான். 🙂
  40 minutes ago · Like
  Haran Prasanna தலித்துகளை சங்க்ராச்சாரியார் ஆக்குவது பற்றி. உண்மையில் இது தேவையான ஒன்றே. இதனை நான் ஏற்கிறேன், வரவேற்கிறேன். இது நடக்க காலங்கள் ஆகும். இதையும் புரிந்துகொள்கிறேன். இதற்கு முன்பாக நடக்கவேண்டியது, அனைத்து மடங்களும் அனைத்து சாதியினருக்கும் எவ்வித வேறுபாடும் இன்றி வேதங்கள் சொல்லித் தரவேண்டியது. வேதம் ஓத பூணூல் வேண்டும் என்பது ஒரு சடங்குத் தேவையாக இருந்தால், அந்தப் பூணூலையும் மடமே அணிவிப்பது. இதை உடனே நிகழ்த்தலாம். மேலும், தலித்தை தலைவராக்குவதை சங்கர மடங்களுக்கு முதன்மையாகவும், அனைத்து ஆதினங்களுக்கும் தேவையானதாகவும் வைத்துக்கொள்ளலாம். வழக்கம்போல ஆதினங்களை விட்டுவிடவேண்டியதில்லை. இதை நான் ஆதரிக்கிறேன்.
  37 minutes ago · Like · 1 person

  Sri Kumar கோடிக்கணக்கான பணம் கோயில்களில் இருந்து அரசாங்கத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. அனைத்து கோயில் நிலங்களும் அரசியல் வியாதிகளிடம் தான் உள்ளது. ஒரு சதுர அடி நிலம் கூட ஹிந்து அமைப்புகளிடம் இல்லை. எல்லாம் அரசாங்கத்தின் கையில். கோயில் பணத்தில் என்ன கிழித்து இந்த அரசாங்கங்கள். எதேனும் ஒரு மருத்துவ மனையையாவது உருவாக்கியுள்ளனரா? இதற்கு உங்கள் பதிலை சொல்லுங்கள் கணபதி
  37 minutes ago · Like
  Haran Prasanna ஊரும் சேரியும் புத்தகத்தை சித்தலைங்கய்யா எழுதியிருக்கிறார். சித்தலிங்கய்யா கன்னடத்தின் தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர். அவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, பெஜாவர் மடத்து சங்கராச்சாரியார் முன்னிலையில், உங்கள் மடத்துக்கு ஒரு தலித்தை தலைவராக்குங்கள் என்கிறார். மிக முக்கியமான அந்த தன்வரலாற்று வரிகளை இங்கே உள்ளிடுகிறேன்.
  36 minutes ago · Like

  Poovannan Ganapathy புத்தகம் கிழக்கில் கிடைத்தால் வாங்கி படிக்கிறேன்.நான் யாரையும் எதிர்ப்பவனில்லை.
  நேற்று ராமதாசர் கட்டிய பத்ராசலம் கோவிலுக்கு சென்றிருந்தேன்.அங்கே அதற்க்கு பணம் உதவிய,முதலில் அவரை சிறையில் தள்ளிய இஸ்லாமிய அரசரின் ஆளுயர படம் உள்ளது.1818 ஆம் ஆண்டு கிழக்கு இந்தியா கம்பெனி ராமர்,சீத,இலக்குவன் படம் போட்டு வெளியிட்ட ஒரு அனா ,அரை அனா நாணயம் உள்ளது.அதை வைத்து கோவில் கட்டிய இஸ்லாமிய மன்னர்கள்,ராமர் புகழ் வளர்த்த வெள்ளையர்கள் என்று கூறலாமா.தனிப்பட்ட மனிதனின் முயற்சிகளை எப்படி அவன் சமூகம்(சம்மோகம் கூறும் கருத்துக்களுக்கு எதிரான முயற்சிகள்)எடுத்து கொண்டு சொந்தம் கொண்டாட முடியும்
  35 minutes ago · Like
  Haran Prasanna கிழக்கில் இல்லை, எல் கே எம் பப்ளிகேஷன் வெளியிட்டது.

  இஸ்லாமியர் ஒருவரின் தனிப்பட்ட முயற்சி என்பது சரி. இப்படியே தனிப்பட்ட முயற்சிகள் பல இருந்தால், அது ஒரு சமூகத்தின் பங்களிப்பாக உருமாற்றம் பெறுவது இயற்கை. அப்படிப்பட்ட ஒரு முயற்சியாக, சில பிராமணர்கள் தலித்துகளுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது புத்தகத்தின் நோக்கம். எனவே புத்தக ஆசிரியர் தலித்துகள் இதனைப் படிக்கவேண்டும் என்றார். ஆனால் என் நோக்கம் தெளிவானது பூவண்ணன். முதலில் இதனைப் படிக்கவேண்டியது பிராமணர்கள். அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.
  32 minutes ago · Like
  Haran Prasanna ஸ்ரீகுமார், கபோதிகள் என்றெல்லாம் திட்டவேண்டியதில்லை. 🙂 இது ஒரு வியாதி. நிச்சயம் இதனைச் சரியாக்கமுடியும். தேவை, தொடர்ந்து இதனை எல்லோருக்கும் சொல்லி புரியவைப்பதே. 🙂
  29 minutes ago · Like

  Sri Kumar கணபதி, முன்ன பின்ன கிராமத்தில் கால் வைத்து உள்ளீர்களா? இல்லை மேற்கத்திய பிணாமியான புனித ஆவிக்கு விற்க்கப்பட்டவர்கள் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு கிராமத்தை பற்றிய ஒரு மாயை உருவாக்கி கொண்டு பேசுகிறீர்களா? நான் பிறந்தது கிராமத்தில், எனக்கு கிராமங்களில் தான் அதிகமாக நண்பர்கள் உள்ளனர். முக்கியமான விசயம் நான் பிராமணன் இல்லை. அதனால் ஆங்கிலம் படித்த பிராமணர்கள் வேண்டுமானால் நீங்கள் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பலாம். பகுத்தறிவை குத்தகைக்கு எடுத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் சொல்லாம் என்று பலர் நினைத்துள்ளனர்.
  28 minutes ago · Like
  Haran Prasanna பூவண்ணன், தேவர்களும் தலித்துகளும் என்றும் வன்னியர்களும் தலித்துகளும் என்றும் சொல்கிறீர்கள். உண்மையில் தலித்துகள் மீதான அடக்குமுறை எந்த சாதியினரால் அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் சொல்ல வருவதில் இருந்தே புரிந்துக்கொள்ளலாம். ஆனாலும் பிராமணர்கள் என்றுதானே பேசுகிறார்கள்? இது பற்றிய உங்கள் கருத்தென்ன?
  26 minutes ago · Like

  Poovannan Ganapathy மாத விலக்கான பெண்களும் பூஜை செய்யலாம்,கோவிலுக்கு வரலாம் என்று பேசுபவர் புரட்சிக்காரர்கள்.அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களை சாதி வட்டத்திற்குள் அடைக்க முடியாது.வர கூடாது,தீட்டு என்று சொல்பவன் தான் சாதியின் பெயர் கொண்டு சொல்கிறவன்.மேல்வலவிலோ,திண்ணியத்திலோ வன்கொடுமை புரிகிறவன் சாதியின் பெயரால் செய்கிறான்,வேறு சாதியில் திருமணம் செய்பவன்,வேற்று சாதி குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிரவன் சாதி எதிர்ப்பாளன்.அவன் எப்படி சாதிக்குள் வருவான்.புத்தர் ராஜா.ஏழைகளுக்கு உழைத்த ராஜாக்கள் என்று அவர் பற்றி குறிப்பிடலாமா.அவர் அதை துறந்து வெளி வந்தவர்.வேற்று சாதி குழந்தையை எடுத்து வளர்ப்பதும் அதை போல தான்.அவர் எப்படி சாதிக்குள் வர முடியும்
  விதவை திருமணம் தவறல்ல என்று சங்கர மடம் சொல்லி ,பிராமணர் சங்கம் பல நூறு விதவை மறுமணங்களை நடத்தினால் vidhaivagalum பிராமணர்களும் என்று புத்தகம் எழுதலாம்.இப்போது அப்படி ஒரு புத்தகம் எழுதினால் அவர்களின் கொடுமைக்கு காரணம் என்று தான் எழுத முடியும்.
  26 minutes ago · Like

  Sri Kumar ‎\\he will not punish the people who built the school in kumbakonam wrongly resulting in roasting of 100 children\\

  மெக்காலே கல்விமுறையையும் ஏகாதிபத்திய ஆங்கிலக்கல்வி முறையையும், பணத்தை சம்பாதிப்பது மட்டுமே அடிப்படையாக கொண்ட கல்வியை கற்று கொடுத்தால் எனது இறைவன் கண்டிப்பாக கோபப்படுவார்
  25 minutes ago · Like

  Sri Kumar கணபதி நீங்கள் கல்யாணம் ஆனவர் தானே? மாதவீடாய் காலத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்கு தெரியாத? உங்கள் புரட்சியில் லட்சனத்தை தான் இலங்கையில் பார்தோமே?
  23 minutes ago · Like
  Haran Prasanna விதவை மணம் லாஜிக்தானே இதுவும்? கோவில்களுக்குள் தலித்துகள் நுழையக்கூடாது என்றும், அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் நுழையக்கூடாது என்றும் பிராமண சங்கம் சொல்லியது, சட்டமே சொல்லியது. இதனை எதிர்க்கும் பிராமணர்களை உடனே நீங்கள் சாதி எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிவிடுகிறீர்கள். இவர்கள் பிராமண சங்கம் சொன்னதை எதிர்த்துச் செயல்படும்போது இவர்கள் பிராமணர்கள் இல்லை என்று நீங்கள் சொல்லிவிடமுடியுமானால், கடைசி பிராமணன் மாறும்வரை பிராமணர்களை சிலுவையில் வைக்கவேண்டியதுதான். இதைத்தான் இன்றைய அரசியல் செய்துகொண்டிருக்கிறது.
  23 minutes ago · Like
  Haran Prasanna சில பிராமணர்கள் நல்லது செய்திருக்கிறார்கள், அவர்களை ஏற்றுக்கொள்வதில் கூட உங்களுக்கு மனத்தடை உள்ளது என்றுதான் பார்க்கமுடிகிறது. பிராமணர்களை ஏற்காததற்கு நியாயமான ஆயிரம் காரணங்கள் உங்களிடம் இருக்கின்றன. அதே காரணங்கள் தந்த கோபத்தால், இவர்கள் சாதியை மீறியவர்கள் என்று சொல்லி, பிராமணர்கள் நல்லது செய்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள். இது சரியல்ல என்பது என் கருத்து.
  21 minutes ago · Like
  Haran Prasanna மாதவிடாய் என்பது வேறு பிரச்சினை. இது பிராமணப் பெண்களுக்கும் உண்டு. இதில் பெண்ணியப் பார்வையைக்கொண்டுதான் பேசமுடியுமே ஒழிய சாதியத்தை வைத்து என்ன பேசமுடியும் என்பது புரியவில்லை.
  20 minutes ago · Like

  Sri Kumar என்னமோ விதவை திருமணம் பிரிட்டீஷ்காரர்கள் தான் தொடங்கியது போல் பேசுகிறீர்கள். விதவை திருமணம் பற்றி உபநிடத்திலேயே உள்ளது.
  18 minutes ago · Like

  Poovannan Ganapathy எண்ணிக்கை அதிகமாக உள்ள ஜாதிகளை ,ஜாதி வெறி பிடித்தவர்களை என்ன செய்து மாற்றுவது எனபது இதுவரை யாருக்கும் பிடிபடாத விஷயம்.
  ஆனால் கிராமங்களை விட்டு வெளி வந்த பலர் கிராமத்தோடு ஒட்டி பிறந்த இந்த வெறிகளை அங்கேயே விட்டு விட்டு வெளிய வருகின்றனர்.கிராமங்கள் ஒழிந்தால்,உருமாறினால் நிலை மாறும்.
  17 minutes ago · Like

  Sri Kumar கிராமங்கள் ஒழிந்தால்.. ஹ்ம்ம் இதை தான் கம்யூனிஸ்டுகள் சீனாவில் செய்து பல கோடி மக்களை கொன்றார்கள். சீனாவில் ஏன் புச்சி, கரப்பானை எல்லாம் உண்ணும் கலாச்சாரம் வந்தது என்பதை தாங்கள் அறிவீர்களா?
  15 minutes ago · Like
  Haran Prasanna ஊரும் சேரியும் புத்தகத்தில் இருந்து. (சித்தலிங்கய்யா இப்போது எப்படி இருக்கிறார், எந்த இயக்கத்தில் இருக்கிறார், அவரது ஆதரவு எதிர்ப்பு என்ன என்பதெல்லாம் தெரியாது. அவர் சொன்ன இது எனக்கு முக்கியமான விஷயமாகப் பட்டதால் இங்கே.)

  உடுப்பிக்குச் சென்றது

  உடுப்பியில் ஒரு சங்கத்தவர்கள் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள். சாதிப் பழங்கங்களைப் பற்றிப் பேசும்படி காளேகௌட நாகவரரை அழைத்திருந்தனர். காளேகௌட தனக்குப் பதிலாக என் பெயரைப் பரிந்துரைத்து அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டார். அதன்படியே சங்கத்தவர்கள் என்னை அழைத்திருந்தனர். காளேகௌட நாகவாரும், டி.ஆர். நாகராஜும் என்னைப் பஸ் ஏற்றிவிட வந்திருந்தார்கள். அதே கூட்டத்திற்கு என் ஆசிரியராக இருந்த டாக்டர். சிதானந்த மூர்த்தி அவர்களும் கிளம்பி வந்திருந்தார். உடுப்பியில் அடுத்த நாள் காலையில் இறங்கியபோது சங்கச் செயலாளர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் சிதானந்த மூர்த்தி அவர்களை அடையாளம் கண்டு மரியாதையுடன் வரவேற்று ஆட்டோவில் அமரவைத்துக்கொண்டு கிளம்பினார்கள். என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியாததால் நானே அந்த ஆட்டோவுக்குள் ஏறி சிதானந்த மூர்த்தியின் அருகில் உட்கார்ந்தேன். ஆட்டோ எவ்வளவோ நேரமாகியும் கூட கிளம்பவில்லை. மூர்த்தி அவர்கள் ‘கிளம்பலாமே’ என்று சொன்னபோது செயலாளர்கள் கிளம்பவில்லை. “தாமதத்திற்கு என்ன காரணம்?” என்று சித்தானந்த மூர்த்தி கேட்டார். அப்போது செயலாளர்கள் சித்தலிங்கையாவிற்காகக் காத்திருப்பதாய்ச் சொன்னார்கள். அப்போது சிதானந்த மூர்த்தி என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் என்னை சிதானந்த மூர்த்தியோடு வந்திருக்கிற ஒரு மாணவன் என்று நினைத்துவிட்டிருக்கிறார்கள​். இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அப்புறம் ஆட்டோ புறப்பட்டது.

  கருத்தரங்கில் நாங்கள் மேடையில் அமர்ந்திருந்தோம். பேஜாவர மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் வாழ்த்துரைப்பதாக இருந்தது. அவர் வந்ததுமே அவையோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மேடையில் இருந்தவர்களும் எழுந்து நின்றார்கள். உட்கார்ந்திருந்தவன் நான் ஒருவனே. இப்போது அதைப் பற்றி நினைத்தால் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்போது நான் செய்தது சரி என்றே பட்டது. உட்கார்ந்திருந்ததன் மூலம் அவையோரின் கவனத்துக்கும் சுவாமிகளின் கவனத்துக்கும் உள்ளானேன். வயதில் மிகச் சிறியவனாக இருந்த என்னை யாரும் மிகச் சுலபமாக எடுத்துக்கொள்ள இயலாத சூழல் உருவாகியது. பேஜாவர மடத்துச் சுவாமிகள் தலித்துகளின் சேரிகளுக்கு வருகை புரிவதுண்டு. சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசுவார். அந்த அமைப்பில் அந்த அளவு செய்ததே அதிகபட்சமாகும். ஆனால் அந்த நாள்களில் தீவிர புரட்சியாளனாக இருந்த நான் அதே மேடையில் ‘உங்களுக்கு உண்மையிலேயே தலித்துகள் மீது அக்கறை இருந்தால் ஒரு தலித்தை உங்கள் மடத்துக்குத் தலைவராக்குங்கள்’ என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டேன். இதற்கு நேரிடையாக எந்தவிதமான பதிலைச் சொல்லாவிடினும் சுவாமிகள் சீர்திருத்ததின்பால் தனக்கு இருக்கும் அக்கறையைப் பற்றிப் பேசினார். சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நான் உடுப்பியில் இருந்து புறப்படும்வரை என்னை நன்கு கவனித்துக்கொண்டனர்.
  11 minutes ago · Like

  Poovannan Ganapathy பல்வேறு சீர்திருத்த வாதிகளை தந்ததில் பிராமண சமூகத்தின் பிறந்தவர்கள் அதிகம் என்பதை யாரும் மறுப்பதில்லை.பெரியாரை எப்படி எந்த சாதியையும் சொந்தம் கொண்டாட முடியாதோ அதை போல இந்த சீர்திருத்த வாதிகளையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.பாரதி அனைவருக்கும் பொதுவானவன் .அம்பேத்காரும் தான் .மகாராஷ்ற்றவோ மகார்களோ மட்டும் அவருக்கு சொந்தம் கொண்டாட முடியுமா
  11 minutes ago · Like

  Sri Kumar சும்மா சாதி வெறி மத வெறி என்று உடான்ஸ் விட்டால் நம்புவதற்கு நான் ஒன்றும் நகரத்தில் வளர்ந்து கான்வெண்டில் படித்து மென் பொருள் வல்லுனர் ஆனவன் கிடையாது. கிராமத்தில் பிறந்து கிராமம் மற்றும் நகரம் என இரண்டு பகுதியிலும் வாழ்ந்து, வெளி நாட்டிலும் ஜீவனம் நடத்தியவன் என்பதை இங்கு சொல்லி கொள்ள்கிறேன். சும்மா எவனாது இ நா வ நா இருப்பான் அவனிடம் போய் சொல்லுன்ங்கள் இந்த பொய்யை பற்றி. உங்கள் கருத்தில் நான் ஆச்சர்ய படவில்லை. ஏன் என்றால் நீங்கள் தான் பூசணீக்காய தோட்டத்தையே மறைப்பவர்கள் ஆயிற்றே
  11 minutes ago · Like

  Poovannan Ganapathy ‎@sri kumar நான் வட கிழக்கு மாநிலங்களில் சில வருடம் வசித்தவன்.அங்கு இன்றும் zhum முறை விவசாயம் உள்ளது.காட்டை கொளுத்தி விடுவார்கள்.ஓடி வரும் விலங்கு பறவை ஊர்வன அனைத்தையும் வேட்டை யாடுவார்கள்.அங்கே அட்டையை தவிர மற்ற அனைத்தையும் ரசித்து உண்பார்கள்.அங்கே நம் ஊரை போல பிச்சைகாரர்கள் கிடையாது.இந்த சீனா பூச்சி கதைகளை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீங்கள் விடுவீர்கள்.சாப்பிடும் உணவை வைத்து மக்களை மட்டமாக எடை போடும் குணம் தான்
  7 minutes ago · Like

  Sri Kumar நீங்கள் சொல்பவர்கள் பழங்குடியினர். அவர்களையும் நகரத்தில் வாழ்பவரையும் ஒப்பிடுவதை என்னவென்று சொல்வது
  6 minutes ago · Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*