இக்கடிதம் ஜெயமோகன் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
01. பேரறிவாளன் நல்லவர், அப்பாவி, எனவே தூக்குத் தண்டனை கூடாது, அவருக்கு சாதாரண தண்டனைகூட அநியாயம் என்றுதான் இங்குள்ள தமிழுணர்வாளர்கள் பேசுகிறார்கள். இது தவறு. தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம் அவர்கள் தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் என்று அவர்கள் போராடவேண்டும்.
02. புலிகள் இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இவர்களுக்கு தூக்குத் தண்டனை அவசியமில்லை என்பது என் கருத்து. உடனே புலிகள் இல்லை என்று வைகோ, பழ நெடுமாறன் சொன்னார்களா என்கிறார்கள். அவர்கள் ஏன் சொல்லவேண்டும். அவர்கள் புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்வதே அவர்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை நிற்க வைத்துக்கொள்ளவும், உணர்வுரீதியாக ஏமாற்றவும்தானே.
03. அரசாங்கமே தடையை நீக்கவில்லை என்பது அடுத்த நியாயம். புலிகளில் ஒன்றிரண்டு பேர் அல்லது ஒரு சிறிய குழு மிச்சமிருக்கலாம் என்பது அரசின் கருத்தாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் புலிகள் இன்று ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. புலிகள் பிரபாகரன் ஒருவரைச் சுற்றிக் கட்டப்பட்ட இயக்கம். பிராபகரன் கொல்லப்பட்டதுமே புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே பொருள். பின் லாடன் கொல்லப்பட்டதும் அடுத்த ஒருவர் தலைமை ஏற்பதுபோல இங்கே நடைபெற வில்லை. புலித் தொடர்ச்சி நடக்கவில்லை. எனவே இவர்கள் மூவரையும் தூக்கில் இடுவது தேவையில்லை.
04. இவர்கள் மூவருக்கும் விடுதலை அளிப்பதையும் நான் ஆதரிக்கவில்லை. சிறையில் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒரு முன்னாள் பிரதமரை, இந்தியத் தலைவரைப் படுகொலை செய்தது என்பது இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே.
05. ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் எதிர்ப்பதை நான் ஏற்கவில்லை. இந்திய நீதிமன்றமே தூக்குத் தண்டனை குறித்த திர்ப்பை இறுதி செய்யவேண்டும். கருணை மனுவும் உள்ளது. இந்த தற்போதைய நடைமுறையே போதுமானது.
06. கசாப், அன்சாரி போன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பதை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன்.
07. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் ஆயுள் தண்டனையே தரப்படவேண்டும். மூன்று மாணவிகளுக்கும் என தனித்தனியாகத் தண்டனை அனுபவிக்கச் சொல்லி வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வைக்கலாம். ஒரு அரசியல்வாதிக்காக அராஜகமாக பஸ் எரித்தது அநியாயம். ஆனால் தூக்கு என்பது அதிகபட்சம் என்பது என் எண்ணம்.
08. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்த மக்களும், ஜெயலலிதாவும் முன்வரவேண்டும். ஜெயலலிதாவின் ‘அரசியலுக்கு’ இது நல்ல ஒரு வாய்ப்பு. தமிழர் தலைவர் என்ற கருணாநிதியின் வேடத்தை ஒரேடியாகக் கலைத்துப்போட்டு, அந்த ‘வேடத்தை’ தான் எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கருதியாவது ஜெயலலிதா இதனைச் செய்யவேண்டும். வேடத்துக்காக அல்லாமல், உணர்வு ரீதியாக, உண்மை நிலை கருதி, இந்த மூவருக்குமான தூக்குத் தண்டனை எதிர்ப்பை ஜெயலலிதா செய்தால், அவருக்கு வாழ்த்துகள்.
came across this post shared by Siddarth
http://perarivalan.blogspot.com/2007/01/blog-post.html
Haran Prasanna
பூவண்ணன், இந்த வழக்கில்லாமல் வேறு ஏதேனும் ஒருவழக்கில், தவறே இல்லாத தீர்ப்புதான் என்று மெச்சத்தக்க வழக்கில், கோட்சே என்று உதாரணத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள், தூக்குத் தண்டனை கொடுத்தால் ஏற்பீர்களா? இல்லை என்று பதில் வருமானால், இந்த கேள்வியையே உங்கள் தரப்பாளர்கள் கேட்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். தவறு இருக்கிறது இல்லை, தீர்ப்பு சரி இல்லை – இதெல்லாம் அல்ல விஷயம், தூக்குத் தண்டனை கூடாது என்றுதானே பேசவேண்டும்? இதை ஏன் மறுக்கிறீர்கள்? தீர்ப்பு சரியா, வழக்குநடந்த விதம் சரியா, பேரறிவாளன் நலல்வரா – இதையெல்லாம் கடந்த ஒரு காலகட்டத்தில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைக்கிறேன்.
14 hours ago · Like
Poovannan Ganapathy
யாராக இருந்தாலும் தூக்கு தண்டனை தருவது தவறு எனபது தான் என் கருத்து.
தீவிரவாத வழக்குகளில் முதல் 100 குற்றவாளிகளும் பிடிபட்டிருந்தால் இப்போது தூக்கு வழங்க பட்டிருக்கும் யாருக்கும் தூக்கு கண்டிப்பாக வழங்க பட்டிருக்காது.இதை தான் தவறான நீதி ,bat…See More
Sunder Singh Vs. State of Uttaranchal [2010] INSC 749 (16 September 2010) | Judgments | Supreme Cou
http://www.advocatekhoj.com
Full text of the Supreme Court Judgment: Sunder Singh Vs. State of Uttaranchal [2010] INSC 749 (16 September 2010) | Judgments dated january, 2011.
12 hours ago · Like ·
Poovannan Ganapathy
http://www.indiankanoon.org/doc/1100478/
மேல குறிபிடப்பட்டுள்ள வழக்கில் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட சகோதரியின் கணவன்,மாமனார்,மாமியார் மைத்துனர் என அனைவரையும் கூலிபடையின் துணையோடு வெட்டி கொன்றவனை மனிதாபிமானத்தோடு மன்னித்து தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிபதிகள் குறைத்தனர்.காரணம்.இந்திய சமூகத்தில் சஹோதரி வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டால் அண்ணன் படும் அவமானத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள முடிவதால்.
நீதிபதிகள் தீர்ப்பு கொடுப்பதே கருணை மனு முடிவு போல தான்.இதில் நான்காவது ,ஐந்தாவது குற்றவாளிகளான பெண்ணின் தாய் தந்தையர்க்கு தண்டனை குறைவு.முதல் குற்ற்றவாளி சிக்கியதால்.
நீதிபதிகள் கருணை மனு போல ஒரு சிலருக்கு குறைப்பது.ஒரு சிலருக்கு குறைக்க மறுப்பது கண்டிப்பாக மறுக்கப்பட்ட தவறான நீதி தான்.
Dilip Premnarayan Tiwari & Anr. Vs. State Of Maharashtra on 10 December, 2009
http://www.indiankanoon.org
Dilip Premnarayan Tiwari & Anr. …. Appellants Versus
12 hours ago · Like ·
Poovannan Ganapathy
அப்சல் வழக்கில் கீழ் கோர்ட் ஆசிரியர் கீலாநிக்கும் தூக்கு தண்டனை வழங்கியது.அதை விட மேல் கோர்ட் அவரை விடுவித்தது.உச்ச நீதி மன்றம் அவர் மீது சந்தேகம் இருந்தாலும் சரியாக நிரூபணம் ஆகாததால் விடுதலை செய்வதாக தீர்ப்பு எழுதியது.அவரை விடுவதால்(அவருக்கு ஜெத்மலானி முதல் பல சிறந்த வழக்கரிங்கர்கள் வாதாடினார்கள்).அவரை விடுவதாக முடிவு செய்வதால் ஒருவருக்காவது தூக்கு தண்டனை தர வேண்டும் என்று அப்சலுக்கு கொடுக்கப்பட்டது.இது சரியான உண்மையான தீர்ப்பு என்று எந்த நீதிபதியும்/வழக்கறிஞரும் கூற மாட்டார்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டது என்பதோடு நீதிபதியின் வேலை முடிந்து அனைவருக்கும் தண்டனை வழங்கும் முறை ஜுரிகளிடம் இருந்தால் /புத்தகத்தில் இருக்கும் தண்டனை வழங்கப்பட்டால் அது நீதி.அண்ணனின் இடத்தில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,நன்கு படித்தவர் என்பதால் திருந்த வாய்ப்பு உள்ளது,பெண் என்பதால் தூக்கு தண்டனை வேண்டாம்,சொத்து ஆசையால் கொலை செய்தவர் இப்போது மனம் வருந்துவதால் என்று குறைக்கும் அதிகாரம்,நீதிபதிகளுக்கு இருக்கும் வரை தூக்கு தண்டனை தீர்ப்புகள் அத்தனையுமே தவறான தீர்ப்புகள் தான்.
12 hours ago · Like
Poovannan Ganapathy ஜெனரல் டயர் எய்தவன்.மொத்த பழியும் அவன் மீது தான்.அம்புகள் மீது அல்ல.அவன் செய்தது தீவிரவாத செயல் இல்லையா.அவன் உத்தரவவுக்கு கீழ் படிந்து கதவுகளை மூடி விட்டு சுட்டது இந்திய கோர்க்ஹா வீரர்கள்.அவர்களும் மீது இருக்கும் தவறு தூக்கு தண்டனை வழங்கும் தவறு அல்ல.
அதே தான் எல்லா அம்புகளுக்கும்.
போட்டு அம்மனோ பிரபாகரனோ isi அதிகாரியோ/தலைவரோ மாட்டியிருந்தால் இப்போது தூக்கு வழங்க பட்டிருக்கும் யாருக்கும் தூக்கு கொடுக்க பட்டிருக்காது.
12 hours ago · Like
Haran Prasanna
கீலாநிக்கு விடுதலை என்பதால் ஒருவருக்காவது தண்டனை வேண்டும் என்று – இதெல்லாம் உங்கள் பார்வை. இதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை.
ஜெனரல் டயர், வெறும் அம்பு மட்டுமல்ல. அவர் தன் கடைசி நிமிடத்தைக் கழிக்கும்போதுகூட தான் செய்தது சரி என்றும், பஞ்சாப் அன்றைய நிலையில் அப்படித்தான் இருந்தது என்றும்தான் கூறியிருக்கிறார்.
மக்கள் கொல்லப்பட்ட மறுநாள், அங்கே நடந்த கடையடைப்பை நிறுத்தச் சொல்லியும், உடனே கடைகளை வெளியிடச் சொல்லியும் உருதுவில் வெளியிட்ட அறிக்கை, பகிரங்க மிரட்டலே. ஜாலியன்வாலா பாக் நிகழ்வுக்கு சில தினங்கள் முன்னர், ஒரு கலவரத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் தாக்கப்பட, அதற்குத் தண்டனையாக அந்தத் தெரு வழியாக காலை முதல் மாலை வரை அனைவரும் தவழ்ந்து செல்லவேண்டும் என்ற தடையை விதித்தவர். இதன் உளவியல் காரணம், இந்திய மக்கள் அடிமைகளே என்னும் ஆழ்மன எண்ணமே.
பொதுவாக, நீங்கள் சட்டென்று ஏதோ ஒன்றை சம்பந்தமற்ற அல்லது இணையற்ற ஒன்றுடன் தொடர்புபடுத்திப் பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது.
11 hours ago · Like
Poovannan Ganapathy நான் எங்கே ஜெனரல் டயர் ஐ அம்பு என்று சொன்னேன்.அவர் தான் எய்தவர்.சுட்டு கொலை செய்த வீரர்களை சொன்னேன்.
11 hours ago · Like
Poovannan Ganapathy
இப்போது தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் மூவர்,அப்ழல் ஆகியவர்களின் பங்கு என்ன.அவர்கள் தான் முக்கிய குற்றவாளிகளா,திட்டம் போட்டவர்களா,பணம் கொடுத்து உதவியவர்களா,அவர்களின் தவறுகளுக்கு தூக்கு தண்டனை சரியா என்று யோசித்தால் புரியும்.வன்மத்தோடு நேரடியாக சென்று சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி அவர் குடும்பத்தையே கொலை செய்பவரை மனிதாபிமானத்தோடு பார்க்கும் சட்டம்(தன தங்கை வேறு சாதியில் திருமணம் செய்ததால் உண்டான மன உளைச்சலில் கொலைகள் புரிந்ததால் ) உதவிகள் புரிந்தார் என்று மாட்டிய ஒன்னு ரெண்டு பேருக்கு தூக்கு கொடுப்பது என்ன ஞாயம்.
10 hours ago · Like
Haran Prasanna ஓ சரி. நீங்கள் டயரையும் அம்பு என்று சொல்கிறீர்களோ என நினைத்தேன். அவரை சுட்டுக்கொன்ற போலிஸ்காரர்களையெல்லாம் அம்பு என்று சொல்லி மற்றவர்களை அவர்களோடு ஒப்பிடுவதைப் பார்த்து என்னால் சிரிக்கத்தான் முடியும்.
10 hours ago · Like
Haran Prasanna
பூவண்ணன், உதவிகள் புரிந்தார் என்ற வரையில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் பேரறிவாளன் தான் நிரபராதி என்கிறார்! இன்னும் சிக்கலாக்குகிறீர்கள். துணைக்கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படியானால் மற்ற இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கலாமா? யாருக்குமே தூக்கு என்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்று சொன்ன பிறகு, நீங்கள் சொல்பவை எல்லாமே முரணாக உள்ளது போலத் தோன்றுகிறது. நீங்கள் சொல்வதை, கசாப், அப்சலுக்குச் சொல்வதாக எடுத்துக்கொள்ளவேண்டுமா? ஏனென்றால், நானும் இந்த மூவருக்கும் தூக்கு வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன் – வேறு காரணங்களோடு.
10 hours ago · Like
Haran Prasanna அம்புகளுக்கும் தூக்குத் தண்டனை தேவைதான் – அதற்கேற்ற நியாயங்கள் உள்ள வரையில். எய்தவர் சிக்காத வரையில் அம்புகளுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டியதுதான். இந்த மூவர் விஷயத்தில் நான் வேண்டாம் என்று சொல்வது, இன்று அது வலுவிழந்துவிட்டது என்னும் ஒரே காரணத்துக்காக மட்டுமே.
10 hours ago · Like
Haran Prasanna பூவண்ணன், உங்கள் கருத்தைச் சொல்லி இந்த இழையை முடித்து வையுங்கள். அடுத்த விஷயத்துக்குப் போவோம்.
10 hours ago · Like
Poovannan Ganapathy
அவர் உத்தரவை கேட்டு பல நூறு பேரை கொன்ற ராணுவ வீரர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை.விடுதலைக்கு பிறகும் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன.
பல நூறு பேரை கொலை செய்யும் எதிரி நாட்டு ராணுவ வீரன் பிடிபட்டால் அவன் கொலை குற்றவாளியாக நடத்தப்பட மாட்டான்.போர் கைதியாக நடத்த படுவான்.உடன்படிக்கைகள் ஏற்படும் போது கைகுலுக்கி விடுதலை பெற்று சொல்வான்.இது போல் பல விதமான கொலைகளுக்கு பல விதமான தண்டனைகள்.இதில் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது பத்து ஆண்டிற்கு ஒரு முறை யாரையாவது தூக்கு போடுவது மிக தவறான நீதியாகும்.தன குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கொலை செய்த செயப்ரகாஷ் (9 ) கொலைகள் விடுதலையாகி நன்முறையில் சில வருடமாக வாழ்ந்து வருகிறார்.ஒரு வழக்கை வைத்து தான் மற்றொரு வழக்கின் தீர்ப்பும் எழுதப்படும்(கைய புடிச்சு இழுத்தியா எனபது தான் நிஜம்).இப்போது அதே போல் குடும்பத்தில் உள்ள 4 ,6 பேரை கொலை செய்யும் யாருக்கும் தூக்கு கிடைக்காது.மரண தண்டனைக்கு எதிரான நீதிபதிகள் இந்த வழக்கை காட்டி ஆயுள் தண்டனை தான் வழங்குவர்.மரண தண்டனை வேண்டும் என்ற எண்ணமுடைய நீதிபதி மாறன் தண்டனை கொடுத்தாலும் இந்த நிகழ்வை காட்டி கருணை அடிப்படையில் தூக்கு நீக்கப்படும்.
10 hours ago · Like
Poovannan Ganapathy
கொலையில்,குற்றத்தில் இப்படி அவர் தலைவர் உயிரோடு இருந்தால்/இயக்கம் வலுவோடு இருந்தால் கொடுக்கலாம்,இல்லை என்றால் கொடுக்க வேண்டாம் எனபது சட்டம்,நீதி அல்ல நாட்டாமை தீர்ப்பு.
சட்டம் சரவணா பவன் உரிமையாளர் என்றாலும் அதில் சாப்பிடுபவர் என்றாலும்,வெளியில் நின்று பிச்சை எடுப்பபவர் என்றாலும் ஒன்று தான்.இதில் ஒருவருக்கு சலுகை வழங்கினாலும் அடுத்தவருக்கும் வழங்குவது தான் நீதி.கலாம் கருணை மனு வரை வரும் வழக்குகள் எல்லாம் மிகவும் ஏழைகளின் வழக்குகலாகவே உள்ளதே அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.மனைவியையோ மாணவியையோ கொலை செய்தவன் ஒருவனுக்கு தூக்கும் மற்றொருவனுக்கு வேறொரு தண்டனையும் தருவது நீதியல்ல.
சந்துரு உச்ச நீதிமன்ற நீதிபதியானால் எத்தனை வழக்குகளில் தூக்கு கொடுப்பார்.கிருஷ்ண ஐயர் எத்தனை பேரின் தூக்கு தண்டனைகளை மாற்றியுள்ளார் என்று பார்த்தால் தூக்கு வழங்கபடுவதில் உள்ள நியாயமற்ற தன்மை புரியும்.வேறொரு நீதிபதி இருந்தால் தூக்கு கிடைத்திருக்காது என்ற நிலைமை அந்த தண்டனையின் அர்த்தமற்ற நிலையை உணர வைக்கும்.
10 hours ago · Like
Poovannan Ganapathy https://www.facebook.com/notes/poovannan-ganapathy/abolish-death-penalty/270645899613877?notif_t=like
my letter written to K R Narayanan in may 2000
abolish death penalty
my letter to president K R narayanan on 18/05/2000 respected sir i am a MBBS graduate.we deal a lot with the lives of people and are in a better position to judge the value of life death can be classified into natura l-old age unnatural -diseases – accidents -intentional…
By: Poovannan Ganapathy
10 hours ago · Like ·
Poovannan Ganapathy http://rozavasanth.blogspot.com/2011/08/blog-post.html
ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.
rozavasanth.blogspot.com
function BlogThis() { Q=”; x=document; y=window; if(x.selection) { Q=x.selection.createRange().text; } else if (y.getSelection) { Q=y.getSelection(); } else if (x.getSelection) { Q=x.getSelection(); } popw = y.open(‘http://www.blogger.com/blog-this.g?t’ + escape(Q) + ‘&u=’ + escape(locatio..