http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece
பிரபாகரன் கொல்லப்பட்டதை என்னதான் ஓநாயின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தாலும், இந்தச் சிறுவன் கொல்லப்பட்டதை ஓநாயாக வாழ்ந்து பார்த்தாலும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. பிரபாகரன் பிறருக்குச் செய்தது அவருக்கே நிகழ்ந்தது என்னும் தத்துவங்கள் எனக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் படங்கள் மனதை உலுக்குகின்றன. முதலிரண்டு படங்களில் தெரியும் சிறுவனின் விளங்கமுடியாத கண்கள் தரும் பாதிப்பு சொல்லமுடியாதது. மனதை உலுக்கும் புகைப்படம். மேலதிக விவரங்களுக்கு தி ஹிந்துவில் வெளியாகியிருக்கும் கட்டுரையை வாசிக்கவும்.
வாழ்க மானுடம்…
இந்த குழந்தை வளர்ந்து இவன் மூலம் மறுபடி வி.பு.க்கள் தலை தூக்கி விடுவார்களோ என்று அஞ்சி போட்டுத் தள்ளி விட்டார்கள் போல. மேலிடத்தில் இருந்து தகவல் வரும் வரை காத்திருந்து தீர்மானமாக கொன்றிருக்கிறார்கள். ஜெமோவின் கைதிகள் கதை தான் நினைவுக்கு வருகிறது.
இந்தப் பையன், போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு ஒரு ரத்தசாட்சியாக ஆகிவிடுவான் என்று நினைத்துக் கொன்றிருக்கிறார்கள். பாவம் சிறுவன்.