படேலின் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்துகொள்ளவில்லை என்று மோதி சொன்னதாகவும் அது தவறான செய்தி என்றும் ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கடுமையாக விமர்சித்து ஞாநி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடிருந்தார். இன்றைய தமிழ் தி ஹிந்துவில் அ.மார்க்ஸும் இதைப் பற்றி மிகவும் எள்ளலாக ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்படி மோதி சொல்லவே இல்லை. அப்படிச் சொன்னதாக செய்தி வெளியிட்ட திவ்யபாஸ்கர் தினசரி தான் சொன்னது தவறு என்றும் சொல்லிவிட்டது. தவறாகச் சொன்னதை ஒப்புக்கொண்டுவிடும்போது சொன்ன தவறு சிறியதாகிப் போய், பெருந்தன்மை மேலெழுந்துவிடுகிறது. ஆனால் இதே தவறை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். தி தமிழ் ஹிந்து நாளிதழ் வரை இந்தப் பொய் பிரசாரம் வந்தாகிவிட்டது. இனி சில வருடங்கள் கழித்து இதுவே அதிகாரபூர்வ செய்தியாகிவிடும். மீண்டும் மீண்டும் இதையே நிரூபணமாகக் காட்டுவார்கள்.
மோதி வெற்றிபெற்றுவிடுவாரோ என்னும் பயம் இவர்களையெல்லாம் எப்படி ஆட்டுவிக்கிறது பாருங்கள்.
ஞாநியின் ஃபேஸ்புக் பக்க ஸ்டேட்டஸின் லின்க்: https://www.facebook.com/gnani.sankaran/posts/10201577288946767
அ.மார்க்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் மூஞ்சாவைப் பற்றி அவன் இவன் என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டிக்கிறார். பேராசிரியரின் மொழி இது. ஹிந்துத்துவர்களும் இப்படிப் பேசுவது உண்டு. நான் இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். நிச்சயம் ஹிந்த்துத்துவர்கள் இப்படிப் பேசுவது அநாகரிகம். ஆனால் இந்த அநாகரிகத்தை உலகமே கண்டுபிடித்துச் சொல்லும். திட்டும். ஆனால் அதே உலகம், அ.மார்க்ஸ் போன்ற பேராசிரியர்கள் இப்படிப் பேசும்போது கள்ளமௌனம் சாதித்துவிட்டுக் கடந்து செல்லும்.
இந்த ஃபேஸ்புக் இடுகையில், மூஞ்சே முசோலினியைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகச் சொல்லியிருக்கிறார் அ.மார்க்ஸ். கள்ள மௌனத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த இடுகை. அ.மார்க்ஸ் பாராட்டும் காந்தியாரும் முசோலினியைப் பார்த்து, முசோலினியைப் பாராட்டியிருக்கிறார். இதே அளவுகோலில் காந்தியாரை ஏன் அ.மார்க்ஸ் அவன் இவன் என்று பேசவில்லை? இத்தனைக்கும் காந்தி முசோலினியைச் சந்திக்கக்கூடாது என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. அத்தனையையும் புறக்கணித்திருக்கிறார் காந்தி. அதோடு முசோலினியைப் பாராட்டியும் இருக்கிறார் காந்தி. எப்படி முசோலினியைப் பாராட்டலாம் என்று கேட்கப்பட்டபோது, வன்முறைக்காக முசோலினியை எதிர்க்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும்தானே எதிர்க்கவேண்டும் என்ற ரீதியில் பதில் சொன்னாராம் காந்தி. (இது பற்றிய ஆதாரங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் உள்ளிடுகிறேன்.) காந்தியார் உட்பட இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற அனைவரும் முசோலினியைச் சந்தித்திருக்கிறார்கள். இன்று மோதியைக் கட்டம்கட்ட எங்கே இருந்து எப்படி வரலாற்றை திரித்துக்கொள்கிறார்கள் பாருங்கள்.
அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகைக்கான லிங்க் இங்கே.
நேருவை மோதி வெறுப்பதில் என்ன வியப்பு கட்டுரை லின்க் இங்கே.
டிவிட் லாங்கர் லின்க்: http://www.twitlonger.com/show/msqcbi
Mussolini and Gandhi: Strange Bedfellows
http://www.ibtimes.com/mussolini-gandhi-strange-bedfellows-214200
Thanks Velmurugan Kuberan.
அங்காடித் தெரு வந்த போது, புரட்சி வெடிகுண்டு, இராஜராஜ சோழனையே பார்ப்பனர்களின் அடிவருடியென்று சாடிய, பாமரன் அவர்கள், அந்தப் படத்தில் ‘அருந்ததிப் பயலே’ என்று ஜெயமோகன் வசனம் எழுதியிருந்ததாக அவரைப் போட்டு புரட்சிமொழிகளில் தாளித்திருந்தார். அதற்கு ஜெயமோகன், ‘அருதலிப் பயலே’ என்றுதான் தான் எழுதியிருந்ததாகவும், அது திருநெல்வேலி வட்டார வழக்கு என்றும் விளக்கியிருந்தார். பதிலுக்கு புரட்சிப் புயல் என்ன சொல்லியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதே தான் புயல் கப்பென்று அடங்கி விட்டது. மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.
ஞாநிக்கு எப்போதும் ஒரு phobia உண்டு. அது சில சமயம் உண்மையும் கூட. அவரது முற்போக்குகளைப் புறந்தள்ள அவரை பார்ப்பனர் என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக அவர் எப்போதுமே தன்னை முற்போக்கைவிட முற்போக்காகக் காட்டிக் கொள்ள (நன்றி ஜெமோ) விழைவார். பல உதாரணங்கள் உண்டு (உதாரணங்கள் கொடுக்க வேண்டுமென்றால் ஞாநியின் இணைய தளத்தையே கொடுக்க வேண்டியிருக்கும்).
ஞாநி பற்றி ஜெயமோகனுக்கு நான் எழுதியிருந்த கடிதம் இது
ஆனாலும், ஞாநி, இந்த மோதி விஷயத்தில் வருத்தம் தெரிவித்தால் நான் வியப்படைய மாட்டேன்; முற்போக்கு மகுடத்தில் அதுவும் ஒரு வைரமாக நிலைக்குமே!!
ஞானி அவர்கள் தன்னை தானே மதசார்பு அற்றவர் என்று கூறி கொள்பவர்,… நாம் எதையும் அவரிடம் எதிர்பார்க் கூடாது..!! மோடி அவர்களை விமர்சிபதே இப்பொழுது அவரின் முழு நேர தொழில். !!
Nowadays Who cares about these kind of rabble-rousers. Typos of Gnani’s category are all long gone. He just want to show off because he knows from his heart that he a a ****ing nobody.
good article and even better comments… very nice