கவிஞர் தாமரை கொடுத்த இனிமா

கவிஞர் தாமரை கொடுத்த இனிமா:
 
//27.3.18. இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல கிறித்தவ, இசுலாமிய அடிப்படைவாதங்கள்…..
இதுவரை நடுநிலையாளர்களாக இருந்தவர்கள் இனி எதிர்த்து அடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர்.
Charu Nivedita சாரு நிவேதிதாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
தோழர் Sugumaran Govindarasuவின் கருத்தையும் என் பதிலையும் பகிர்கிறேன்.
 
என் பதில் :
இந்த விடயத்தில் சாரு நிவேதிதாவின் கருத்துதான் எனதும். முழுமையாக ஆமோதிக்கிறேன். கிறித்துவ அடிப்படைவாத மதமாற்ற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன, இசுலாமிய அடிப்படைவாதம் வேறு பரிமாணம் எடுத்து அது ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, இந்துத்துவத்தை மட்டும்தான் துவைத்து எடுப்பேன் என்பது மகா மட்டமான, முட்டாள்தனமான நிலைப்பாடு. இன்னும் சொல்லப் போனால், இந்த மதங்களின் Agendaவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிகிறது.
நடுநிலைப் பார்வையாளனாக இருந்த ஒரு சராசரி இந்து கூட மோடி பக்தனாக உருமாறும் நிலைக்குத் தள்ளப் பட்டிருகிறான்.
புரிந்து விழித்துக் கொண்டால் நலம்.
கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவை கிறித்துவ, இசுலாமிய அடிப்படைவாதங்கள்….//
 
இதில் தாமரை இந்துத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. (அதை நான் ஏற்கவில்லை!) ஆனால் மற்றவற்றின் அடிப்படைவாதத்தையும் பற்றிப் பேசிவிட்டார். இதை எப்படி முற்போக்காளர்களால் பொறுத்துக்கொள்ளமுடியும்?
 
இனி என்ன நடக்கும் என்று பாருங்கள்.
 
தாமரையை இந்துத்துவவாதி என்பார்கள். உடனே அவர் கதறுவார், எல்லா மதங்களையும்தான் சொல்கிறேன் என்று. அதை எந்த முற்போக்காளரும் பொருட்படுத்தமாட்டார். மீண்டும் மீண்டும் இஸ்லாமிய விரோதி, கிறித்துவ விரோதி என்பார்கள். இந்துத்துவ ஆதரவாளர் என்பார்கள்.
 
ஒரு கட்டத்தில் இங்கேயே தாமரை ஊறி நிற்கலாம். அல்லது ஆமா, இந்துத்துவவாதி என்றும் சொல்லலாம். அல்லது சொல்ல வைக்கப்படலாம். (இது நிகழ வாய்ப்பே இல்லை, ஒரு பேச்சுக்காக மட்டுமே சொல்கிறேன்.)
 
இதுதான் முற்போக்காளர்களின் குணம். என்ன ஆனாலும் எப்போதும் எந்நிலையிலும் ஹிந்துத்துவத்தை திட்டவேண்டும். திட்டிக்கொண்டிருக்க மட்டும் செய்யவேண்டும். மறந்தும் மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தைப் பற்றிப் பேசிவிடக்கூடாது. அல்லது, மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தைப் பற்றிப் பேச நேர்ந்தாலும் இந்துத்துவ அடிப்படைவாதத்தைத் திட்டிவிட்டு கூடவே மேம்போக்காக மற்ற மதங்களின் அடிப்படை வாதத்தையும் ஏற்கவில்லை என்று சொல்லவேண்டும்.
 
ஆனால் தாமரையோ மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை இந்துத்துவத்தோடு ஒப்பிட்டதோடு ஏன் இந்துத்துவம் மலர்கிறது என்ற அளவுக்குப் பேசிவிட்டார். ஒரேநாளில் பிற்போக்குவாதியாகிவிட்ட தாமரைக்காக வருந்துகிறேன்.
 
வருக தாமரை. 🙂 வெல்கம் டூ தி க்ளப். மலர்க தாமரை. 🙂 🙂
Share

Comments Closed