Archive for அறிவிப்பு

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு ஜோதி நரசிம்மனின் பதில்

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு, ஜோதி நரசிம்மன் உயிரோசை.காமில் தன் பதிலைச் சொல்லியுள்ளார். என் விமர்சனம் அவரைப் புண்படுத்தியிருப்பது புரிகிறது. அவர் கடைசியில் சைன் – ஆஃப் செய்யும்போது பெயரோடு ‘அடியாள்’ என்று போட்டிருக்கவேண்டாம். அடியாள் என்பது புத்தகத்தின் பெயராக இருந்தாலும், என்னவோ உறுத்துகிறது.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=596

உயிரோசையில் அடியாள் நூல் விமர்சனம் படித்தேன். நன்றி. என் படைப்பை விமர்சனம் செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என் எழுத்துப்பணி சிறப்படைய உயிரோசை வாழ்த்துவதாகவே உணர்கிறேன். அந்த விமர்சனத்தில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐயத்திற்கு நான் பதில் சொல்−யே ஆக வேண்டும். அது உங்களை சமாதானப்படுத்திக்கொள்ள அல்ல. என்னை செப்பனிட்டுக் கொள்ள.

ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார் அதில் எந்தவித வலியும் தெரியவில்லை. தெரிவதில்லை. என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள் அந்த சம்பவத்தை, வலியை உள்வாங்கிக் கொண்டுதான் அவற்றை வெளிப்படுத்தியுள்ளேன். படிக்கும்போது வலியை உணரவேண்டும் என்று எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களை ஆறுதல் அடைய செய்யாது. மாறாக கோபம் ஏற்படச் செய்யும். அவர்களை சமூகம் எப்படி குற்றவாளியாக மீண்டும் மீண்டும் பார்க்கிறதோ, அப்படியே நானும் பார்க்க நேரிடும். மாறாக அது எனது பார்வைக்கும் அனுபவத்திற்கும் எதிராக இருக்கும் என்பதால் நீங்கள் சொல்லியிருக்கும் அந்த வலியை எழுத்துகளுக்குள் வைக்கவில்லை. மேலும் ஒரு விசாரணைக் கைதியாக குறைந்த நாட்களிலே என்னை வாசிப்புக்கும், எழுதுவதற்கும் தூண்டியது சிறை அனுபவம். அந்த சிறை எத்தனையோ கைதிகளை மீண்டும் மீண்டும் குற்றவாளியாக உருவாக்கியிருந்தாலும் என்னைப்போன்ற சில சமூக ஆர்வலர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 15 நாட்களில் ஒரு சிறையை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது என்பது போல் எழுதியுள்ளீர்கள். அது நான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த புத்தகத்தை என்னுடைய எட்டு ஆண்டுகள் அடியாள் அனுபவத்தில் நான் பட்ட அவமானங்களை, துயரங்களை, சொல்லமுடியாத, சகிக்கமுடியாதவைகளின் ஊடாக உணர்ந்து யாரையும் பாதிக்காமல் தொகுத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நான் ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாக சிறை செல்லவில்லை. விடுதலைப் பு−களின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்று தடையை மீறி பேரணிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டேன். நான் இருவேறு நிலைகளிலும் 36 நாட்கள் மத்திய சிறையில் இருந்துள்ளேன். ஹரன்பிரசன்னா போன்றவர்கள் ஓரிரு நாளாவது மத்திய சிறைக்கு சென்றால் என்னைவிட மிகுந்த அனுபவம் பெறமுடியும். அடியாளை விட பெரிய தொகுப்பு எழுத முடியும். மூதோர் மொழிபோல சிறை மனிதனை சிந்திக்கவைக்கும் அறைதான்.

ஜோதி நரசிம்மன் (அடியாள்)

Share

சாகித்ய அகாடமி வழங்கும் குறும்பட விழா

குறும்பட விழா

29 ஜூலை 2008 முதல் 31 ஜூலை 2008 வரை

ஜூலை 29

இந்திரா கோஸ்வாமி – இயக்குநர் ஜானு பரூவா
ஜெயகாந்தன் – இயக்குநர் சா. கந்தசாமி
தகழி – இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர்

ஜூலை 30

மகா சுவேதா தேவி – இயக்குநர் சந்தீப் ராய்
இந்திரா பார்த்தசாரதி – இயக்குநர் ரவி சுப்பிரமணியன்
ஐயப்ப பணிக்கர் – இயக்குநர் கே. ராஜகோபால்
யு.ஆர். அனந்த மூர்த்தி – இயக்குநர் கிருஷ்ண மாசதி

ஜூலை 31

வடகிழக்குப் பகுதிக் கவிதைகள் – இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா
கமலா தாஸ் – இயக்குநர் சுரேஷ் கோகிலி
சசி தேஷ் பாண்டே – இயக்குநர் சுரேஷ் கோகிலி
கோபாலகிருஷ்ண அடிகா – இயக்குநர் கிரிஷ் கர்னாட்

இடம்:

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கம்,
அண்ணா மேம்பாலம் அருகில்,
604, அண்ணா சாலை, சென்னை – 6.

நேரம்:

மாலை 6.00 மணி முதல் 9 மணி வரை.

Share

வார்த்தை மாத இதழ் வெளியீடு & எனி இந்தியனின் புதிய புத்தகங்கள் வெளியீடு

Share

வெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் – அறிவிப்பு

நாடக வெளி வழங்கும் தமிழ் நாடகம்

ஊழிக்கூத்து

எழுத்து, இயக்கம்: வெளி ரங்கராஜன்

30.03.2008
ஞாயிறு மாலை 7 மணி
அலையான்ஸ் ப்ரான்சேஸ் அரங்கம்
24, காலேஜ் ரோடு, சென்னை – 6.

Share

சுஜாதா நினைவுகள் – 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம்


ஜெயகாந்தன், கமல்ஹாசன், மணிரத்னம், கனிமொழி, பார்த்திபன், ராஜீவ் மேனன், கு.ஞானசம்பந்தன், மருது, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, வஸந்த், மதன் உடபட பலரும் இந்த நிகழ்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

2.3.2008 ஞாயிறு மாலை நாலு மணிக்கு நாரத கான சபாவில் (314, டி.டி.கே சாலை, சென்னை-18) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share

பிரிக்க முடியாத மௌனம். – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணன்

பிரிக்க முடியாத மௌனம் – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Share

சுஜாதாவின் உடல் நாளை (29.02.08) பார்வைக்கு…

சுஜாதாவின் பூத உடல் நாளை அவரது இல்லத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை (இரண்டு மணி நேரம் மட்டும்) பார்வைக்கு வைக்கப்படும். அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் ’10, ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மயிலாப்பூர்’ என்கிற முகவரியிலுள்ள அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம்.

இன்று அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. சுஜாதாவின் வீட்டில் இருக்கும் தேசிகன் இந்தத் தகவலை வெளியிடச் சொன்னார்.

Share

எழுத்தாளர் சுஜாதா மரணம்

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அரைமணிநேரத்திற்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்.

Share