Archive for அறிவிப்பு

உயிர்மையில் பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் -2 புத்தகத்தின் விமர்சனம்

உயிர்மை ஜூன் 2007 இதழில் பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் – 2 புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. விமர்சனம் எழுதியவர்: பக்தவத்சல பாரதி.

நன்றி: உயிர்மை.

பசுக்கள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் புத்தகத்தை ஆன் லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

உயிர்மை இதழுக்கு ஆன் லைனில் சந்தா செலுத்த இங்கே சொடுக்கவும்.

Share

அறிவிப்பு: ‘வெளி’ ரங்கராஜனின் ‘மாதவி’ நாடகம்

Share

அறிவிப்பு: "The 13th Presidential Election – Issues in the Selection and Election"

INDIAN LIBERAL GROUP
(an Organization founded by MR Masani Mumbai)
(Chennai Chapter)
12/3, Viswams, Thiruvengadam Street Extension,
Chennai – 600 004.
(Tele: 2493 7046)

cordially invites you and your friends to a meeting
on

“The 13th Presidential Election
– Issues in the Selection and Election”

to be addressed by

Sri Arun Shourie MP
(Eminent Journalist & Former Minister, GOI )

Cho Ramaswamy
(Editor Thuglak)

ERA Chezhian
(Former MP)

Presides
At 6.15 p.m., Friday, 13th July 2007

Venue: Dhakshinamurthy Auditorium
P.S. High School, R.K. Mutt Road
Mylapore Chennai – 600 004.

Share

நாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் (‘ஓ போடு’ ஞாநி) அழைப்பு

பரீக்ஷா (‘ஓ போடு’ ஞாநி) ஆர்குட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகவும். ஞாநியின் அனுமதியுடன் இம்மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நன்றி.

dear friends i will be directing the new play sandaikkarigal for our group pareeksha next month. the play is to be performed either on august 5 or august 12. rehearsals have to begin from july 1.this is a play with large cast, needing atleast ten to twelve women and equal number of men. the play is a hisgtorical bnarrative of how lives of women in our society has been changing thanks to women who chose to fight for it. i have earlier produced this play with a group of WCC girls in a workshop at their college. it is a play that entertains aswell as as enlightens.i request all of you to inform women and men, girls and boys known to you, who are iliving in chennai and nterested in meaningful theatre activity to come forward to participate.our group is meeting at 10 am on sunday july 1 for script reading. those interested in participating in the play can contact me over my mobile phone and know the venue. my no. 9444024947.

ஞாநியின் ஆர்குட் முகவரி: http://www.orkut.com/Profile.aspx?uid=14559894980100451739

அவரது மின்னஞ்சல் முகவரி: gnanisankaran@hotmail.com
Share

கல்கியில் விசும்பு புத்தகம் பற்றிய சிறு அறிமுகம்

01.07.2007 தேதியிட்ட கல்கியில் ஜெயமோகனின் விசும்பு (அறிவியல் புனைகதைகள்) புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது. நன்றி: கல்கி.

விசும்பு புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=104507

Share

டிடி பொதிகையில் ஒருத்தி திரைப்படம்

Thanks: Chennaionline.com

ஒருத்தி திரைப்படம் நாளை (ஞாயிறு, 17.06.07 அன்று) இந்திய நேரம் மாலை 4.20க்கு பொதிகையில் ஒளிபரப்பாகிறது. இத்திரைப்படம் கி.ராஜநாராயணனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘கிடை’ நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இயக்கம் அம்ஷன் குமார். இசை எல்.வைத்தியநாதன்.

Share

அஞ்சலி – நகுலன்

பேராசிரியர் டி.கே.துரைசாமி என்பவர் பின்னாளில் நகுலன் என்றறியப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை, நாவல், விமர்சனம் என எழுதி நவீன இலக்கியவாதிகளில் முன்னோடியாகத் திகழ்ந்த நகுலன் நேற்றிரவு (17.05.07 இரவு) இயற்கை எய்தினார்.

நவீன கவிஞர்களில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் நகுலன் ஆரம்ப காலங்களில் தன் கைச்செலவிலேயே சில கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். Thanks: AnyIndian.comபின்பு காவ்யா பதிப்பகம் அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பை வெளியிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் “கண்ணாடியாகும் கண்கள்” என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் காவ்யா வெளியிட்டது. அதில் நகுலனின் புகைப்படங்கள் தரமான தாள்களில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் நகுலனை ஒரு குழந்தையாகக் கண்டடையலாம். அவரது புகைப்படங்களைக் கண்டபோது வயதானவர்கள் எல்லாருமே ஒரே போன்ற முகத்தை அடைந்துவிடுகிறார்கள் என்கிற என் எண்ணம் மேலும் வலுப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நினைவுகளின் குழப்பம், தீவிர இலக்கியவாதிகளுக்கு மனதளவில் ஏற்படும் நெருக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமணம் செய்துகொள்ளாத நகுலனை அவரது அன்னையின் தோழியான பிருத்தா கடைசி காலங்களில் கவனித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நகுலன் தன் வாழ்நாளில் பெற்ற ஒரே விருது விளக்கு விருது மட்டுமே.

நகுலனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

நகுலன் நினைவாக:

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
·ப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்ட்
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

அதிகமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளான நகுலனின் கவிதை (கோட்ஸ்டாண்ட் கவிதைகள்):

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

இன்னொன்று:

நில்
போ
வா

வா
போ
நில்

போ
வா
நில்

நில்போவா?

(இந்தக் கவிதை விருட்சத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து பிரமிள் அவரது அதிரடிக் கவிதைகளில் நகுலனையும் அதை வெளியிட்ட விருட்சம் அழகிய சிங்கரையும் தாக்கி ஒரு கவிதையை எழுதினார்.நகுலனின் கவிதையைக் கண்டு கோபமடைந்த கும்பகோணன் நாராயணன் இதைக் கேள்விகேட்டு விருட்சத்திற்கு எழுதினார். அதை நகுலனின் அழகிய சிங்கர் தெரிவித்த போது, நகுலன், இக்கவிதைக்கு விளக்கமாக இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்பினாராம். அழகிய சிங்கர் சொன்ன தகவல் இது.)

தமது கவிதைகளில் அதிக அளவு கடவுளைப் பற்றியும் புராண இதிகாச மாந்தர்களைப் பற்றியும் நேரடியாகவும் குறியீடாகவும் நகுலன் எழுதியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எப்படியும் ஏதோவொரு குறியீடு பெரும்பாலான கவிதைகளில் கவிஞனின் அனுமதியோடோ அனுமதியின்றியோ குடிகொண்டுவிடுகிறது.

இன்று நகுலன் கவிதைகளாகவே மிஞ்சுகிறார்.

Share

checking for beta blogger

சோதனை (மேல் சோதனை!)

Share