Archive for நிழற்படங்கள்

விமர்சகர் வெங்கட் சாமிநாதனிடம் இருந்த சில புகைப்படங்கள்

பழைய படங்களைப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம். இன்று தன் வலைப்பதிவில் தளவாய் சுந்தரம் ஒரு புகைப்படத்தைப் போட்டிருந்தார். அதில் அவருக்கே பலரைத் தெரியவில்லை. வெங்கட் சாமிநாதனிடம் மடலில் கேட்டேன், அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யாரென. அப்போது அவரிடமுள்ள புகைப்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அதை வலைப்பதிவில் வெளியிடவேண்டுமென்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஸ்கேன் செய்து வைத்த புகைப்படங்கள் இவை. இப்போதுதான் வெளியிடுகிறேன். வெங்கட் சாமிநாதன் தன் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார் என்பது மட்டும் உறுதி. 🙂

இரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார். அவரிடமே இந்தப் புகைப்படம் இருக்குமா எனத் தெரியவில்லை.

சு.ராவைப் பார்த்தால் பழைய மலையாளப் படத்தில் வரும் ஒரு நடிகர் போலத் தோன்றுகிறார்.

க்ரியா ராமகிருஷ்ணன் வாயிலிருக்கும் சிகரெட்டைப் பற்றவைக்கும் வெங்கட் சாமிநாதன் – அந்தப் புகைப்படம்தான் எவ்வளவு இயற்கை!

நீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்!


வில்லன் நடிகர் போன்றிருக்கும் இரா. முருகன்

மௌனி, வெங்கட் சாமிநாதன்

கிருஷ்ண ஐயர்

மௌனி, வெங்கட் சாமிநாதன்

மௌனி

மௌனி

பிரமிள், முத்துசாமி

பிரமிள், முத்துசாமி

கே.வி. சுப்பண்ணா

சி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்

மலையாள நடிகர் போன்று தோற்றமளிக்கும் சுந்தர ராமசாமி.

வெங்கட் சாமிநாதன், பிரமிள்

வெங்கட் சாமிநாதன், க்ரியா ராமகிருஷ்ணன்

வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன்

வெங்கட் சாமிநாதன், மௌனி

வெங்கட் சாமிநாதன், மௌனி

வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன்

நீல பத்மநாபன்

தி.ஜானகிராமன்

சே. ராமானுஜம்

Share

நிழற்படங்கள் (PIT டிசம்பர் போட்டிக்கு)

வீட்டின் வெளியில் மண்டிக்கிடக்கும் குப்பையில் இருந்த இரண்டு மலர்களின் நிழற்படங்கள் போட்டிக்கு. எடுத்த நேரம் காலை ஆறு மணி, 09.12.07

தென்னையை விஞ்ச நினைக்கும் எருக்கம்பூக்கள்

பூவே நீ யாருக்காக மலர்கின்றாய்?

Share