படிக்க வேண்டியவை

<< >>

விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று,

Share

சர்கார் (தமிழ்)

சர்க்கார் – முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது. மற்றபடி வலுவே இல்லாத

Share

Halasyan

ஹாலாஸ்யனின் கட்டுரைகள் பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத்

Share

இந்திரா பார்த்தசாரதியின் பக்குவம் சிறுகதை குறித்து

இந்திரா பார்த்தசாரதியின் சமீபத்திய கல்கி சிறுகதையில் (பக்குவம்) வாசிக்க ஒன்றுமில்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள்கூட இக்கதையைவிட மேம்பட்ட தரத்தில் இருக்கும். வெற்றுப் பேச்சு, மேம்போக்கான பார்வை, ஒற்றைப்படத்தன்மை, எதிலும் நுணுக்கமாக ஆழமாகச் செல்லாமல் ஒரு பிரச்சினையின் பல்வேறு முகங்களை ஆராயாமல் எழுதுவது போன்ற அவரது வழக்கமான நாவல்களும் சிறுகதைகளும் போல, அவற்றின் இன்னொரு வலுவற்ற நீட்சியே கல்கியில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதை. படிக்காமல் இன்புறவும்.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

Share

கவிதை

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

Share

பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள்

பாதை 

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்
இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

அப்படியே ஆகுக

காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்

 

ஆதிகுரல்

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

செக்மேட்

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

பாம்பு புகுந்த வீடு

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்ல
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.

பெரியப்பாவின் வருகை

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

 

அஞ்சலி

ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி

Share

கவிதை

கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு

Share

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் பற்றியும் அதைத் தொடர்ந்த பிரச்சினை பற்றியும் நான் எழுதியுள்ள விமர்சனம் மதிப்புரை.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

Share

சாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு

இந்த 2015 புத்தகக் கண்காட்சியில் எனது சிறுகதைத் தொகுப்பான “சாதேவி” புத்தகமும் வெளியாகிறது.  இதனை வெளியிடும் மயிலை முத்துகள் பதிப்பகத்துக்கும், இதற்கு பலவழிகளில் உதவிய Jayashree Govindarajan,Suthanthira VijiManikandan Vellaipandianஆகியோருக்கு எவ்விதம் நன்றி சொன்னாலும் போதாது.

100-00-0002-377-9_b-01


 

பப்ளிஷர் சார் முத்து கணேஷ் அவர்களுக்கு நன்றி. 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்கhttps://www.nhm.in/shop/100-00-0002-377-9.htmlஇங்கே செல்லவும். 34 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 360 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ 300.

உடனே வாங்குவீர்!

 

 

 

 

Share

2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

2013ல் நான் வழங்கிய விருதுகளை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒவ்வொரு தமிழன் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் 2014 – திரைப்பட விருதுகள் இங்கே. 

உண்மையில் எல்லா விருதையும் லிங்காவுக்கும் கோச்சடையானுக்கும் கொடுப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் அநியாயமாக கீழே உள்ள பட்டியலை இட்டுள்ளேன். பார்த்து வளர்ச்சி பெறுக. 

 

சிறந்த திரைப்படம்: ஜிகர்தண்டா

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (லிங்கா) (Cool friends!)

சிறந்த நடிகை: யாருமில்லை

சிறந்த புதுமுகம்: துல்கர் சல்மான் (வாயைமூடிப் பேசவும்)

சிறந்த இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த கதை: ரஞ்சித் (மெட்ராஸ்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: லிங்கா

சிறந்த வில்லன்: William Orendorff (லிங்கா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (பல படங்கள்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): அனிருத் (வேலையில்லா பட்டதாரி, கத்தி)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (லிங்கா)

சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயண் (மெட்ராஸ்)

சிறந்த பாடகர்: ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியனே, கோச்சடையான்)

சிறந்த பாடகி: சின்மயி (இதயம் நழுவி நழுவி, கோச்சடையான்)

சிறந்த பாடல்: இதயம் நழுவி நழுவி (கோச்சடையான்)

சிறந்த குத்துப்பாட்டு: மஸ்காரா போட்டு (சலீம்)

சிறந்த பாடலாசிரியர்: கானா பாலா (மெட்ராஸ்)

சிறந்த வசனம்: கே.எஸ். ரவிக்குமார் (கோச்சடையான்)

சிறந்த புதிய முயற்சி: கோச்சடையான்

சிறந்த ஓவர் ஆக்டிங்: துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

சிறந்த அண்டர் ஆக்டிங்: விஜய் ஆண்டனி (சலீம்)

சிறந்த காணாமல் போன நடிகர்: சிம்பு

நன்றாக வந்திருக்கவேண்டியவை: சதுரங்க வேட்டை, ஆடாம ஜெயிச்சோமடா.

பார்க்க முடியாதவை: மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று காளைகளும், பண்ணையாரும் பத்மினியும், மஞ்சப்பை, சைவம், அஞ்சான்.

Share

Fire for books

"ஹலோ ஃபயர் பார் புக்ஸா?”

“இல்லைங்க, டயல் ஃபார் புக்ஸ்.”

“ஓ, ஸாரிங்க. தப்பா கூப்பிட்டுட்டேன்.”

“சொல்லுங்க சார், என்ன புத்தகம் வேணும்.”

“இல்லை, அவசரமா ஒரு புத்தகத்தை எரிக்கணும். அதுக்கு ஒரு புத்தகம் வேணும்.”

“சார், நாங்க புத்தகத்தை விப்போம். அவ்ளோதான். எரிக்கணும்னா…”

“எரிக்கணும்னா எரிக்கணும். அவ்ளோதான். சரி, சட்டுன்னு ஒரு புத்தகம் சொல்லுங்க.”

“நீங்கதான் என்ன புத்தகம்னு கேக்கணும். எங்ககிட்ட 20,000க்கும் மேல புத்தகம் இருக்கு. சட்டுன்னு சொல்லுங்கன்னா என்ன சொல்றது?”

“இருபதினாயிரத்தையும் எரிக்க முடியாது. வசதியில்லை. ஒண்ணு மட்டும் சொல்லுங்க.”

“சார், என்ன புத்தகம் வேணும்னு சொல்லுங்க. நிறைய கஸ்டமர்ஸ் லைன்ல இருக்காங்க.”

“அவ்ளோ பேர் எரிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?”

“ஹலோ. உங்களுக்கு வேணும்ன்ற புத்தகத்தை சொல்லுங்க.”

“சரி, இப்ப பரபரப்பா நிறைய எழுதுற ஆள் பேர் யாராவது சொல்லுங்க.”

“ஜெயமோகன். அவர் புத்தகம் வேணுமா?”

“ஆமா, அவரையே எரிப்போம்.”

“சார், என்ன சொல்றீங்க.”

“அவர் புத்தகத்தைத்தான் சொன்னேன். எதாவது புத்தகம் 10 காப்பி அனுப்புங்க.”

“சார், நாங்க விக்கிறது மட்டும்தான் செய்யறோம். எரிக்கிறதெல்லாம் சரியா வராது.”

“அதான் அதை நான் பாத்துக்கறேன். நீங்க பத்து காப்பி அனுப்புங்க.”

“வண்ணக்கடல்னு ஒரு புத்தகம். ஒரு காப்பி 1500 ரூ. பத்து காப்பி 15,0000 ரூபாய். தபால் செலவு கிடையாது. சர் சார்ஜ் உண்டு…”

“என்னது பதினஞ்சாயிரமா? ஏன் இருபது ரூபா முப்பது ரூபாய்க்கெல்லாம் எழுதுறதில்லையா அவரு?”

“இருக்கு சார். உலோகம்னு இருக்கு. 50 ரூபாய்தான். அதுல பத்து காப்பி?”

“உலோகம்ன்றீங்க. எரிக்க முடியுமா?”

“சார், நாங்க எரிக்க அனுப்பலை. நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

“நானும் திரும்ப திரும்ப சொன்னேனே.”

“சார் இது சரிப்பட்டு வராது.”

“என்ன சரிப்பட்டு வராது? சொல்லாம வாங்கி எரிச்சா நல்லவன். சொல்லிட்டு செஞ்சா கெட்டவனா?”

“நீங்க என்னமோ செய்ங்க, சொல்லாதீங்கன்னு சொல்றேன்.”

“சரி விடுங்க. பத்து காப்பி, புத்தகம் பேர் என்ன சொன்னீங்க? இரும்பா? செம்பா? அதை அனுப்புங்க.”

“உலோகம் சார்…”

“ஏன் இரும்பு உலோகம் இல்லையா?”

“அனுப்பறேன் சார். போஸ்ட்மேன் கிட்ட பணம் கொடுத்துட்டு புத்தகம் வாங்கிக்கோங்க.”

“ஓ போஸ்ட்மேன் வேற வருவாரா? உடனே போய்டுவார்ல? இல்லை அவர் முன்னாடியே எரிக்கலாமா?”

“சார், உங்க ஆர்டரை எடுத்துக்கறோம். உங்கள் வீடு தேடி புத்தகம் வரும்.”

“போஸ்ட்மேன் எத்தனை மணிக்கு வருவார்னு சரியா சொல்லுங்க.”

“அது சொல்லமுடியாது சார். எப்ப வேணா வருவார்.”

“என்னங்க பொறுப்பே இல்லாம சொல்றீங்க. போட்டோகிராபர் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும், நிறைய வேலை இருக்கு. சரியா எப்ப வருவார்னு சொல்லுங்க.”

“அதை சொல்லமுடியாது சார். அது உங்க வேலை. உங்க ஆர்டருக்கு நன்றி. புத்தகம் வீடு தேடி வரும்.”

“வரலைன்னா நான் அங்க தேடி வருவேன். சரி, அந்த புத்தகம் எழுதுனவர் பேர் என்ன்? நடிகர் மோகனா?”

“சார், ஜெயமோகன்.”

“கூட வேற யார் புத்தகம் இருந்தாலும் அனுப்புங்க.”

“நீங்கதான் சொல்லணும் யார் புத்தகம் வேணும்னு.”

“நின்னு எரியணும். யார் இதா இருந்தா என்ன?”

“ஜெயமோகன் புத்தகத்தை ஏற்கெனவே எரிச்சிருக்காங்க. நின்னு எரிஞ்சதாத்தான் பேச்சு.”

“என்னது ஏற்கெனவே எரிச்சுருக்காங்களா? நல்லவேளை சொன்னீங்க. அப்ப அவர் வேண்டாம். வேற சொல்லுங்க. நேரமாச்சு. நீங்க புத்தகம் எழுதிருந்தா அதைக்கூட அனுப்பலாம்.”

“சார்… சார்…”

“ஏன் திடீர்னு ரகசியமா பேசறீங்க?”

“இல்லை, நானும் ஒரு புத்தகம் எழுதிருக்கேன். பத்து நூறு காப்பி விக்காம அப்படியே இருக்கு.”

“மொதல்லயே சொல்லிருக்கலாம்ல. சரி விலை என்ன? 20 ரூபாய்ல இருக்கா?”

“புத்தக விலை 90 ரூபாய் சார். பத்து காப்பி வாங்கினா நான் 10% டிஸ்கவுண்ட் தர்றேன். யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.”

“நான் ஏன் சொல்லப்போறேன்?”

“உங்க அட்ரஸ் சொல்லுங்க, இப்பவே அனுப்பறேன்.”

“உங்க புத்தகம் என்னத்த பத்தினது?”

“கவிதை சார்…”

“கவிதையா? அப்ப வேண்டாம். எரிக்கது கஷ்டம்.”

“என்ன சார் சொல்றீங்க. 20% டிஸ்கவுண்ட்கூட தர்றேன் சார்.”

“அடுத்த தடவை பார்க்கலாம். வேற யாராவது இருந்தா சொல்லுங்க.”

“இப்படி சட்டுன்னு கேட்டா?… பா.ராகவன்னு ஒருத்தர்… இல்லை, மருதன்… வேணாம் சொக்கன். ஹ்ம்ம்ம் இருங்க, அரவிந்தன் நீலகண்டன்னு ஒருத்தர்… இல்லை முகில்… இருங்க சார்… மகாதேவன்னு ஒருத்தர்… நிறைய இருக்கா சட்டுன்னு குழப்புது சார், சாரி.”

“அப்பம் ஒண்ணு செய்ங்க. ஒரு லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்புங்க. ஒவ்வொண்ணா எரிக்கேன். அப்பம் இப்பம் போனை வைக்கேன்.”

“சார்.. ஹலோ… சார்… சார்… போனை வெச்சிட்டீங்களா?”

Share