படிக்க வேண்டியவை

<< >>

2020

2020ல் என்ன என்ன செய்தேன்? கொரோனா என்ற ஒரு பெரிய அச்சுறுத்தல் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்யவில்லை. தினம் தினம் படம், தாய விளையாட்டு, சீட்டாட்டம், நல்ல உணவு இப்படியே போயின நாள்கள். ஒரு வரி கூட படிக்க மனம் வரவில்லை. இழுத்துப் பிடித்து வைத்து ஒரு நாவல் எழுதினேன்.

Share

கவிதை

விடியல் பெரும் புழுதியில்சூறைக் காற்றில்ஒரு மல்லிகை மொட்டுஇலக்கற்றுபறந்துகொண்டிருந்த போதுபேரலையில்பெரு வெள்ளத்தில்ஒரு மரக்கலம்திசையற்றுதடுமாறிக் கொண்டிருந்தபோதுபெரும் பிரளயத்தில்பேரச்சத்தில்அமைதியற்றுஉயிரொன்றுஅல்லாடிக் கொண்டிருந்தபோதுகொடு நெருப்புதன் விருப்பெனஅனைத்தையும்அணைத்துக் கொண்டபோதுகிழக்கேவானம்விடியத் தொடங்கியதுஎப்போதும் ஒரு காலையைப் போல.

Share

சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்

ஏர் டெக்கான் மற்றும் கேப்டன் கோபிநாத் என்ற பெயர்கள், இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவை. இன்று ஏர் டெக்கான் மூடப்பட்டிருந்தாலும், கேப்டன் கோபிநாத் கொண்டுவந்த புதுமையான யோசனையும் அதனால் விளைந்த பயனும் இன்றியமையாதவை. எதையுமே பெரிதாக யோசி, வித்தியாசமாக யோசி என்பதைச் செயல்படுத்திக் காண்பிக்கும் தொழிலதிபர்களே நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவர்கள். இன்றைய ஜியோ புரட்சியை

Share

கிளியைப் பற்றி நான்கு கவிதைகள்

(1)

இதுவென்று இனங்காண முடியாதவாறு

உருமாறிப்போனாலும் சிரித்துக்கொண்டிருக்கிறது

அக்கிளி.

மரத்தாலான அக்கிளியை

தூர நின்று கொஞ்சிக்கொண்டிருக்கிறது

குழந்தையொன்று, கையில்

கிளியின் உடைந்த வால் உயிர்த்துடிப்புடன்.

(2)

அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட

பச்சைக்கிளியொன்று

கழுத்தின் நிறமின்றி, கண் திறப்பின்றி

ஒரு வயிறு உள்ளடங்கி

கிளியின்றி ப்ளாஸ்டிக்குடன்

·பேன் காற்றில்

அங்குமிங்கும் ட

பதுங்கிக் காத்திருக்கிறது பூனையொன்று

(3)

விர்ச்சுவல் கிளிகள் சொல்லச் சொல்லச் சொல்லுவதில்லை.

கணினித் திரையில் இணைப்பைச் சொடுக்கவும்

சிறகுகள் படபடக்கப் பறந்து

காரியம் முடிந்தவுடன் அமைதியாகின்றன;

சில சமயம் ஸ்கிரீன் ஸேவராகவும்.

(4)

வானத்தில் பறக்கிறது ஒரு நிஜக்கிளி.

-oOo-

Share

ஆய்த எழுத்து – ஒரு விமர்சனம்


எடுத்த எடுப்பில் மாதவன் சூர்யாவைச் சுட பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. அந்தப் பரபரப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து கொண்டு செல்கிறார் மணிரத்னம் இடைவேளை வரையில். வெவ்வேறு வாழ்க்கைத் தளங்கள், வெவ்வேறு பிரச்சனைகள், வெவ்வேறு இலக்குகளுடன் மூன்று இளைஞர்கள்.

மொட்டைத் தலையுடன் அடியாளாக, அதேசமயம் உள்ளுக்குள் ‘பெரியாளாக வேண்டும்’ கனவுடன் மாதவன். மாதவனின் நடிப்பும் டயலாக் டெலிவரியும் அசத்தல். கிட்டத்தட்ட நெகடிவ் கேரக்டர். துணிச்சலாகச் செய்திருக்கிறார் மாதவன். மூன்று நடிகர்களில் மாதவன் முந்துகிறார். அரசியலில் நல்லவர்கள் இறங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சூர்யா. கூடவே காதல். பல தடைகளை எதிர்த்து, ச்¢த்தார்த்தும் கைகோர்க்க, மாதவனை முறியடித்து, பேண்ட் ஷர்ட்டுடன் சட்டசபைக்குள் செல்ல.. கொட்டாவி.

படத்தின் ஆரம்ப கட்டக் காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளை வரை தொடர்வது படத்தின் பெரிய பலம். இடைவேளைக்குப் பின் வரும் சித்தார்த்- த்ரிஷா லாலிபாப் காதல் படத்தின் மிகப்பெரிய பலவீனம். சூர்யா மாதவன் காட்சிகளில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்பு சித்தார்த்தின் காட்சிகளில் இல்லாமல் போனது இன்னொரு ஸ்பீட் ப்ரேக்கர். சிவகாசி மாப்பிள்ளை என்று த்ரிஷா சொல்லும் காட்சிகளெல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. தேவையே இல்லாமல் சூர்யா- ஈஷா தியோல் காதல். ஈஷோ தியால் “நடிப்பு கிலோ எவ்வளவு ரூபாய்?” என்கிறார். த்ரிஷா, ஈஷோ தியோல் இருவரும் நம் பொறுமையைச் சோதிக்கும்போது ஆறுதல் அளிப்பது மீரா ஜாஸ்மினின் அழகும் நடிப்பும். அசத்தல் மீரா ஜாஸ்மின்.

படத்தின் ஆச்சரியம் பாரதிராஜா. அவரும் சூர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் படத்தின் ஹைலைட். பாரதிராஜாவுக்கு இன்னும் அதிக வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வந்தது போன்ற பிரமை. மற்றப் பாடல்கள் வருகின்றன, போகின்றன. ஒன்றும் மனதில் நிற்பதில்லை. பாடலைத் தனியே போட்டு நூறு முறை கேட்டுவிட்டுப் படத்திற்குப் போகவேண்டும் என்பார்கள் ஏ.ஆர்.ரகுமான் இரசிகர்கள். பின்னணி இசை சுத்த மோசம். (பாரதிராஜாவும் மாதவனும் கடைசியில் பேசிக்கொள்ளும் காட்சி நீங்கலாக) பாடலின் ஹம்மிங்கையோ இசையையோ போட்டு படம் முழுதும் ஒப்பேற்றி விடுகிறார். பின்னணி இசை பிரவீன்மணி என்கிறார்கள். எழுத்துப் போடும்போது அப்படிக் காட்டவில்லை.

சுஜாதா நீண்ட நாள்களுக்குப் பிறகு பளிச். பல வசனங்கள் நல்ல கைதட்டைப் பெறுகின்றன.

மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைத் தனித்தனியாகக் குழப்பமில்லாமல் காண்பிப்பதில் வென்ற மணிரத்னம் படத்தின் டெம்ப்போவை இழுத்துப் பிடிப்பதில் சறுக்கியிருக்கிறார். சித்தார்த்- த்ரிஷா காதல் படத்தின் சீரியஸ்தன்மையை உடைக்கிறது. மாதவன் கேரக்டரில் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சுகிறது. சூர்யா சொன்னதும் கல்லூரி மாணவர்கள் படைபோல் பின்னால் வருவதெல்லாம் சுத்தப் பூச்சுற்றல். சித்தார்த் திடீரென அரசியலுக்கு வந்து சூர்யாவுக்குத் தோள் கொடுக்கும் காட்சியும் த்ரிஷா மீண்டும் சித்தார்த்திடமே வந்து சிவகாசி மாப்பிள்ளை ட்ரெயின் ஏத்திவிட்டார் என்று சொல்வதும் இது மணிரத்னம் படமா என்று சந்தேகம் வரும் நேரங்களில் சில.

ஆய்த எழுத்து – கொஞ்சம் எழுத்துப்பிழை!

===

ஒரு முக்கியமான கேள்வி:

மாதவன் ஜெயிலிலிருந்து வெளிவரும்போது போலீஸ்காரர் அவரிடம் அவரது பணத்தை ஒப்படைக்கிறார். ‘பத்துப் பைசா குறையுதே’ என்று மாதவன் சொல்லவும் போலீஸ் பத்துப் பைசாவைத் தேடித் தருகிறார். (கைதிகளோட பழகிப்பழகி நகைச்சுவை உணர்ச்சியே இல்லாமப் போச்சோ என்கிறார் மாதவன். சுஜாதா பஞ்ச்) பத்துப் பைசாதான் செல்லாதே.. அப்புறம் எப்படி???

Share

மனனமாகிப்போன சில பொழுதுகள் – கவிதை


மரச்செறிவுகளுக்குள்ளே சூரிய ஒளி வந்து வந்து

போய்க்கொண்டிருந்த ஒரு நேரத்தில்

கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஓடை நீரை

அளந்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்.

பின்னொரு

கடற்கரை நுரைதள்ளிய நாளில்

ஒரு குமிழை ஊதிப் பெரிதாக்கி

மனதுள் வெடிக்கச் செய்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்

பலா காய்ச்சித் தொங்கும் மரத்தடியில்

பலாவை எண்ணிக்கொண்டிருந்தோம், கிரிக்கெட் பந்து பட்டு

மரம் சப்தமிட்டு அமர்ந்தது

உதிரும் இலைகள் உதிர்ந்து அமைந்தன

நம்மைப் பற்றிய பிரக்ஞையில்லாமல்.

இரவுகளில்

இடைவெளி குறையும்போதும் கூடும்போதும்

போர்வை நுனி எழுப்பும்போதும்

வீதிகளின் நுண்சப்தங்கள்

நமக்கு மனனம்.

எதையோ இழந்து

எதையோ வாங்கிக்கொண்ட பொழுதுகளில்

மிக நுட்பமாக

சுற்றுப்புறத்தையும் அதன் தனிமையையும்

இருவரும் தனித்தனியே உள்வாங்கிக்கொண்டோம்

நீயாவது ஏதேனும் பேசியிருக்கலாமோ

என்ற கேவலுடன்.

Share

பாட்டன் மரம் – கவிதை

 

பலமாத இடைவெளிக்குப் பின்

சாப்பாட்டுத் தட்டுகள் ஒன்றாய் வைக்கப்படுகின்றன

தொடர்ந்து பரிமாறல்

ஊரில் மாவடு கிடைப்பதில்லை என்கிறான் அண்ணன்

கட்டம் போட்ட சிவப்புப் பட்டை

இஸ்திரிக்காரன் பாழாக்கியதைப் புலம்புகிறாள் அண்ணி

செல்லப்பூனை இறந்தகதை அம்மாவுக்கு, கொஞ்சம் விசும்பலோடு

மூன்றாம் வீட்டுப் பெண் ஓடிப்போன சந்தோஷம் அப்பாவுக்கு

ஐம்பது வருடங்கள் இருந்த புளியமரம் வெட்டப்பட்டு

பாட்டன் நிலம் விற்கப்பட்ட கதையைச் சொல்ல

யாருக்கும் நினைவில்லை (அல்லது துணிவில்லை)

வெந்நீர் அடுப்பில்

அப்புளியமரத்தின் புளியங்குச்சிகள்

எரிந்து சாம்பலாகும்போது

எஞ்சியிருந்த பாட்டன் மனசாட்சி

கருகிப்போகும் வகையறியாமல்

சூடாகிக்கொண்டிருக்கிறது நீர்

Share

குழந்தைமை – கவிதை

 

குதிக்கும் குரங்கு பொம்மையின்

வயிற்றை அமுக்கினால்

பீப்பீ சத்தம் வருகிறது.

பின்னிழுத்துவிட்டால் முன்னோடுகிறது கார்

கைதட்டினால் சப்தமிடுகிறது கிளி

கையிரண்டில் வாளோடு

பேட்டரியில் முன்னேறுகிறான் ரோபோ

காற்றில் மெலிதான உலோகச்சத்தம் ஏற்படுத்தி

திருஷ்டி கழிக்கிறது சீன வாஸ்து

இத்தனைக்குப் பின்னும் சிரிப்பை மறந்து

இல்லாத ஒன்றிற்காக

(எதிர்வீட்டுச் சரவணன்

சோப்பு நுரையை ஊதிக்கொண்டிருக்கிறான்)

அழுதுகொண்டேயிருக்கிறது

வீட்டுக்குழந்தை

Share

உள்ளிருப்பு – கவிதை

 
காத்திருந்த அந்த இரவில்

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது

பல்லி ஒன்று பிள்ளையார் படத்தின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது

கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது

பெருமாள் கோவிலின் புன்னை மர இலையொன்று

சப்தமின்றி வீழ்ந்தது

காற்றில்லாத பெருமழையில் தெருவிளக்கு அணைந்தது

தெருநாய் ஒன்று தடுப்புத் தேடி அலைந்தது

ஆந்தையொன்று தந்திக்கம்பக் கம்பிகளில் அமர்ந்து

கண்கள் திறந்து பார்த்திருந்தது

கவனம் ஒருகூராக்கி

கையோடு கைகள் பிணைத்து, கழுத்தை வருடியபோது

பயந்து பறந்தது

இறக்கை அடக்கி

மூக்கில் அமர்ந்திருந்த ஓர்


Share

மங்கலம் – கவிதை

 
சுற்றி எல்லாம் சுபம்

இவ்வுலகத்துக் காலம்

என் கனவு நிமிடங்களால் பகுப்பட்டிருக்கிறது

நடுச்சாமம் முழுதும்

எச்சி ஒழுக அரற்றிக்கொண்டிருந்த பசு

ஈன்றிருக்கிறது

வழியெங்கும்

அழகிய மஞ்சள் வட்ட மலர்களைத் தட்டான் சுற்ற

சூரியகாந்திப்பூ சூரியன் நோக்கியிருக்கிறது

கஷாயம் போலிருக்கும்

முக்கு டீக்கடை சாயா பாலுடன் கனக்க

எப்போதும் கரகரக்கும் ட்ரான்சிஸ்டர்

காதற்பாடல்களை ஒலிக்கிறது

நீர்வற்றிப்போயிருந்த பண்டாரங்குளத்தில்

சில தண்ணீர்ப்பூக்கள் தலைநீட்டியிருக்கின்றன

அங்கு

கலந்துகொண்டிருக்கும் நாயிரண்டைச் சுற்றி

சிறுவர் கூட்டமில்லை, கல்லெறிதல் இல்லை.

பலசாதிச் சிறுவர்கள்

தோள் மேல் கை போட்டுக்கொண்டு

தபாலில்லாத ட்ரவுசருடன்

பள்ளி செல்கிறார்கள்

சொன்னதைக் கேட்கிறது வீட்டு நாய்

சேவற் கூவலுடன் அமைதியில் காலை விடிய

கோயில் மணி மெலிதாய் ஒலிக்கிறது

மனவெழுச்சி நிரம்பிய இரம்மியப் பொழுதொன்றில்

இரவு கவிகிறது

எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

Share

மின்மினிப்பூச்சி – கவிதை

 

தெருவெங்கும் முளைத்துவிட்ட

மின்விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்

அமிழ்ந்துவிட்டது

மின்மினிப்பூச்சியின் ஒளிர்வு, என்றாலும்

எல்லை தாண்டிய இருள்வெளியில்

அப்பூச்சி

மனசுக்குள் புரட்டியெழுப்பும்

உணர்வுகளின் தாக்கத்தையடுத்து

கண்பார்வையிலிருந்து மறைகிறது

மஞ்சள் வெளிச்சப் படர்வு

Share