கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதலாளித்துவ பயங்கரவாதம்

பயங்கரவாதம் என்றதும் தோழர்கள்தான் பேசப்போகிறார்கள் என்று தெரிந்திருக்கும் என நான் எழுதினால் நான் தேவையில்லாமல் தோழர்களை கிண்டல் செய்வதாக கமெண்ட்டுவார்கள். எனவே மாற்றிச் சொல்கிறேன். தோழர்கள் வந்தாலே பயங்கரவாதம் பற்றிப் பேசுவார்கள் என்று நீங்கள் யூகித்தது சரிதான். (நல்ல எண்ணத்தில்தான்!) முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிப் படுபயங்கரமாகப் பேசப்போகிறார்கள். அனைத்துத் தோழர்களும், ‘நண்பர்’களும் நிச்சயம் வாருங்கள். :))

அறிவிப்பு:

21 ஜூலை 2009 (செவ்வாய்) அன்று கிழக்கு மொட்டைமாடியில் முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் தலைப்பில் உரையாற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து இருவர் வருகை தருகிறார்கள்.

சுப. தங்கராசு
மாநிலப் பொதுச் செயலாளர்
பு.ஜ.தொ.மு.

பா. விஜயகுமார்
மாநிலப் பொருளாளர்
பு.ஜ.தொ.மு.

நேரம் : மாலை 6.15

நிறைய கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம். அனைவரும் வருக!

Share

Facebook comments:


2 comments

  1. பா. ரெங்கதுரை says:

    கீழ்ப்பாக்கத்தில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவம் 21ஆம் தேதி மாலை மொட்டை மாடியிலேயே கிடைத்துவிடும் என்று சொல்லுங்கள்.

    ஏதாவது ஏடாகூடமாகப் பேசி, பதிப்பகத்துறை முதலாளிகளிடமிருந்து உங்களையெல்லாம் நிரந்தரமாக விடுவித்துவிடப் போகிறார்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

  2. சுரேஷ் கண்ணன் says:

    தகவலுக்கு நன்றி தோழரே. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*